Total Pageviews

Sunday 29 November 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 04&05

உருவங்களின் நிறத்தை மாற்றுதல்.(4)
-------------------------------------------------------------------------
இன்று இரண்டு Flash ரியூட்டோரியல்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவுள்ளோம்... ( நேற்றைய "மூளையும் அதிசய சக்திகளும் 04" பகுதிக்கு வரவேற்பு சற்றுக்குறைவாக இருந்தது.... 27 ம் திகதி எனது பதிவு இடம்பெறவில்லை. ஆனால், பலவாசகர்கள் வந்து பார்த்திருந்தார்கள். அதனால் கடுப்பாகிவிட்டார்களோ அல்லது தொடரில் தொய்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. உங்கள் கருத்துகளுக்கு ஏற்றவாறு தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படும்.) 
-------------------------------------------------------------------------------------------------------------சரி இயக்குங்கள் உங்களது Flash மென்பொருளை....  

முதலாவதாக உருவங்களின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை பார்ப்போம். உருவங்களை மறையவைப்பது போன்றே, உருவங்களின் நிறத்தை மாற்றும் செயன்முறையின் படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.  
முதல் 3 செய்முறையிலும் மாற்றமில்லைபுதியவர்கள்ADOBE FLASH ரியூட்டோரியல் - 03 ஐ பார்க்கவும்.  









செய்முறை-4
4 வது செய்முறையில், Color எனும் பகுதிக்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Tint என்பதை Click செய்யவும்.

இப்போது அதன் அருகில் ஒரு box ல் Color உம் மற்றயதில் ஏதாவது ஒரு இலக்கமும் (0 தொடக்கம் 100) குறிக்கப்பட்டு இருக்கும்.
முதலாவது Box ல் உள்ள நிறத்தை Click செய்து தேவையான நிறத்தை தெரிவு செய்யவும். அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 100 ஆக்கவும்.

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும். 
0 இருந்து பெறுமதி கூட கூட தெரிவு செய்த நிறத்தின் உண்மை தன்மை அதிகரிப்பதைகாணமுடியும். அவ் எண் பெறுமதிதான் நிறத்தின் உண்மை தன்மை தீர்மானிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------

வட்டம் சதுரமாக மாறும் விளைவு.(5)


------------------------------------------------------------------------------------------------------------.
உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறை போன்றே, வட்டம் சதுரமாக மாறும் விளைவும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லைADOBE FLASH ரியூட்டோரியல் - 01 ஐ பார்க்கவும்.


செய்முறை-3
3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு Delete செய்யவும்.
வட்டம் இருந்த இடத்தில் சதுரத்தை Rectangle Tool (R)    மூலமாக வரையவும்.

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Right Click செய்து இரண்டாவதாக‌ காண‌ப்படுனம் Creat Shape Tween ஐ Click பன்னவும்.



இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.


4 comments:

  1. புதியவர்களுக்கு மிக நன்றாக புரியும்படி சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. lishanthmithrau3 April 2010 at 18:22

    aam nanraka ullathu!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. அருமையான விளக்கங்கள்
    தற்பொழுது நீங்கள் எழுதுவதில்லையா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected