Total Pageviews

Saturday 21 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் -01(உள்ளுண‌ர்வு)

மூளையும் அதிசய சக்திகளும் (உள்ளுண‌ர்வு)
----------------------------------------------------------------------------------------

பேய்களும் மர்மங்களும் எனும் தலைப்பின் கீழ் நான் பதிவு செய்திருந்த‌ ஒருவரி கருத்துக்களுக்கு சிறந்த வகையிலான எதிர்பார்ப்பு வாசகர்களிடம் இருந்தது.
வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனது மேலதிக ஆய்வுகளை தொடரும் போது மனிதனின் எண்ணங்களைப் பற்றியும் மூளையின் செயல்படுதிறன் பற்றியும் தெளிவாக ஆராயவேண்டி உள்ளது.(பதில் கருத்துக்களை பெற முடிந்தமையிட்டு அகம் மகிழ்கிறேன்.)

இதனால் மனிதனது மூளை பற்றியும் அதனது அதிசய ஆற்றல் பற்றியும் எண்ணங்களின் வல்லமை பற்றியும் தெளிவான விளக்கத்தை அளித்து அதன்மூலம் வாசகர்களுக்கு
பேய்கள் சார்ந்த மர்மங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.


----------------------------------------------------------------------------------------
எனவே முதலில்,

"மூளையும் அதிசய சக்திகளும்" எனும் தலைப்பில் எம் அனைவரினுள்ளும் புதைந்திருக்கும் ஓர் விசித்திரமான சக்தியை பற்றி எழுத என்னியுள்ளேன். நிச்சயம் இவை உங்களை கவரும் என நம்புகின்றேன்.
-----------------------------------------------

உள்ளுண‌ர்வு...

இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா?
ஜோசித்துப்பாருங்கள்....

வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்)
பஷ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஷ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.)
இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதையாகிவிட்டார்கள்). மற்றது என்னுடைய தொலைபேசியை காப்பாத்தியது.

இதெல்லாம் சின்னவிசையங்கள் நம்மவே முடியாத பல விசையங்கள் நடந்துள்ளன...


இரண்டாம் உலகயுத்தத்தின் உச்சக்கட்ட காலம் அது...
ஜேர்மன் விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.
வின்சன்ட் சர்ச்சில், இங்கிலாந்தின் பிரதமர். எவளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.

ஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அளைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிளேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. திடீரென கதிரையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்குச்சென்று சிப்பந்திகளிடம் " சாப்பாட்டை டைனிங் ரேபிளில் வைத்து விட்டு.. உடனே பாம் செல்டர் பகுதிக்கு சென்றுவிடுங்கள்..." என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.
3 நிமிடங்கள் கழிந்தன...
சமையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குனூறாகியது.
சமையளறை ஊளியர்கள் சர்ச்சிளின் கட்டளையாள் காப்பாத்தப்பட்டனர்.
திடீரென சென்று எச்சரிக்கை கட்டளை இடும்படி சர்ச்சிலை தூண்டியது எது?...
ஜோசித்துப்பாருங்கள்...


தொடரும்...
---இனி---
ரெயில் கொம்பனியின் வினோத புள்ளிவிபரம்
இருந்தார்கள் அனால் இல்லை.
எங்கிருந்து செயற்படுகிறது இந்த உள்ளுணர்வு!
மேலும் பல வியப்பூட்டும் சம்பவங்கள் காத்திருக்கின்றன‌!
...............................................................................




6 comments:

  1. very super and exclent work

    ReplyDelete
  2. REALLY ????(!!!!!)

    ALAGAR CHENNAI

    ReplyDelete
  3. இப்போ தான் வாசிக்கிறான் சூப்பர் ... அன்றாடம் தோன்றும் எண்ணங்கள் வைத்து நல்ல விளக்கம் ... :))))

    கொஞ்சமாவது வெட்கம் கொள்வோம்
    http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected