Total Pageviews

Tuesday 9 March 2010

செங்கிஸ்கான் (ஒரு பக்க வரலாறு)

செங்கிஸ்கான் 
--------------------------------------------------------------------------------------------
வருடம் 1211. மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின்
யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்) நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார். வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார் ஷாங்சூன். சீன அரசர்
கோபாவேசத்துடன் போருக்குக் கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன.

நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,
யான்ஜிங்க் நகர் வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, ‘‘தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத் தெரியும். இதுதான் என்னுடைய போர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்’’ என்றான்.

வருடம் 1162.
மங்கோலியர்கள் பல்வேறு குழுவாகச் சிதறிக் கிடந்த காலகட்டத்தில், ஒரு
மலைசாதிக் குழுவின் தலைவரான ‘யெஸ்சூஹைய்’யின் மூத்த மகனாகப்
பிறந்தான் டேமுஜின். 13 வயதான சமயத்தில், டேமுஜினின் தந்தை
எதிர்க்குழுவினரால் விஷம் கொடுத்துக் கொல்லப்படவே, அப்போத டேமுஜினைத் தலைவனாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், சிறுவன் என்பதால் தல்மைப் பொறுப்பு கிடைக்கவில்லை. பள்ளிக்குப் போகாமல் தாயிடம் அரசியலும், போர்க்கலையும் பயின்றான். ‘‘தோல்வி அடைந்துவிடுவோமா என்று அச்சப்படுபவன்,வெற்றி பெறமாட்டான். அதனால், எதிரிகளுக்கு முதலில் உன் மீது அச்சத்தை உருவாக்கு!’’ என்று புதிய போர் மந்திரத்தை போதிததே அவன் தாய்தான்.

17-வது வயதில் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட டேமுஜின், அவர்கள்
அத்தனை பேரையும் கொன்று தப்பி வரேவ, அவனது சாகசத்தைப் பாராட்டி,
தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின், சிதறிக் கிடந்த மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, தனது படைவீர‌ர்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, அண்டை நாடுகளை எல்லாம் கைப்பற்றத் தொடங்கினான் டேமுஜின்.

1183-ம் ஆண்டில் எல்லா மங்கோலியர்களும் இணைந்த பின்னரும், சிறு வயது
நண்பனான ஜம்முஹா என்பவன் மட்டும் தனி ராஜாங்கம் நடத்துவதைக் கண்டு, அவன் மீது போர் தொடுத்து வென்றான். சிறைப்பட்ட நண்பன் ஜம்முஹா, ரத்தம் வராத வகையில் தனக்கு மரணம் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள, கம்பளிப் போர்வையை அழுத்தமாக அவன் உடலில் சுற்றி, மூச்சுவிட முடியாமல் செய்து, மரணத்தில் ஆழ்த்தினான். ஜம்முஹாவுக்குத் துணையிருந்த அத்தனை படைவீர‌ர்கைளயும் கொன்று குவித்தான். அப்போதுதான் ‘அரசர்க்கெல்லாம் அரசன்’, ‘தோற்கடிக்க முடியாத மாவீர‌ன்’ என்கிற பொருள் பொதிந்த ‘செங்கிஸ்கான்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது.

30,000 படைவீர‌ர்களை மட்டுமே வைத்திருந்த செங்கிஸ்கானால் 4,00,000
படைவீர‌ர்கள் கொண்ட சீனாவைத் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம்,
எதிரிகளுக்குக் கடும் அச்சத்தை உருவாக்கியதுதான்.
இதையடுத்து ரஷ்யா, ஹங்கேரி, போலன்ட்  நாடுகைளயும் வெற்றிகொண்ட
நேரத்தில், குதிரையிலிருந்து தவறி விழுந்து, 1227-ம் ஆண்டு இறந்துபோனார்
செங்கிஸ்கான்.
-----------------------------------------------------------------------------------------

5 comments:

  1. PLS SEND THIS KIND (INFORMATIVE) OF ARTICLE TO MY GMAIL ID - WISHES

    ReplyDelete
  2. Pirabu ( valaakam )9 March 2010 at 10:24

    Sure bro...

    ReplyDelete
  3. முதலில் இவ்வாறான தகவல்களை தொகுத்து வழங்குவதட்க்கு வாழ்த்துக்கள் . வரலாறுகள் பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது .

    ReplyDelete
  4. மிக மிக அருமை...
    மிரட்டியிருக்கிங்க
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Pirabu (valaakam)9 March 2010 at 19:28

    tnx...
    S.Sudharshan
    சி. கருணாகரசு

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected