Total Pageviews

Sunday 14 March 2010

லெமூரியாவும் (தமிழ்) கலண்டரும்... (லெமூரியா 07)

லெமூரியா
---------------------------------------------------------------------------------------
இது லெமூரியா தொடர்பான 7 வது பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு லெமூரியா பதிவு இடுகின்றேன்... போனபதிவில் நான் திராவிடம் பற்றி கதைத்து இருந்தமைக்கும், புராணங்களை லெமூரியாவுடன் இணைத்து எழுதி இருந்தமைக்கும் பித்தன் வாக்கு ( என்னை எழுத ஊக்கு வித்து வருபவர்) என்பவரிடமிருந்து சில கண்டனங்கள் எழுந்து இருந்தது. முக்கியமாக காலம் தொடர்பான கருத்து வேற்றுமைகள் காணப்பட்டன.
---------------------------------------------------------------------------------------
அவரின் கருத்தின் படி, இராமாயணம் முதலிய புராணங்கள்(?) கி.மு 2000 ஆண்டளவில் நடந்து இருக்கலாம் என்பதாகும்.
ஆனால், என்னால் இதை முற்றாக ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம், நமது இதிகாசங்கள் (?) களில் காலம் தொடர்பாக பெருசாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
ஆனால், நான் ஆறிந்த வகையில்...
மகாபாரதத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் காலம் கூறக்கூடியதாக இருக்கிறது.

1. பீமன்(?) பல்லை விளக்கியவாறே தர்மரிடம் சென்று " இன்று கலியுகம் ஆரம்பித்து விட்டதாம்..." என கூறுகிறார்.
அதற்கு, தர்மர் " உன்னை பார்க்கவே விளங்குது..." என கூறுவதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. இது மகாபாரத வரலாறு கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் நடந்து இருக்கிறது என்பதற்கு சான்றாக கொள்ளலாம்.
( எனினும் இதுவும் இட்டுகட்ட பட்ட ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், காலங்கள் தொடர்பாக பெரும்பாலான இடங்களில் கூறப்பட வில்லை என் பதால் இட்டு கட்ட படவில்லை எனவும் கொள்ளலாம்.)

2. 2ம் சம்பவம்... திடமாக என்னால் கூறமுடியாது. நன்றாக தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.
மாகாபாரத யுத்தம் சூரிய கிரகமும், சனி கிரகமும் ஒரே யோசிய பெட்டியினுள் நிற்கும் போது நடந்ததாக கூறப்பட்டுள்ளது. ( நகுல சகோதரர்கள் கூறுவது போன்று சம்பவம் உள்ளதாக்கும்.)

5000 ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா இருந்திருப்பின்... நிச்சயமாக லெமூரிய மக்களின் எச்சங்கள் கண்டு பிடிக்க பட்டு இருக்கும். மாபெரும் கடற்கோல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்து இருக்கும்... என்பதே பலரால் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், 5000 வருடத்திற்கு முன்னர் அவ் அழிவு ஏற்பட்டு இருப்பின் நிச்சயமாக புவியியல் ரீதியாக அதன் பாதிப்பு இன்றும் தெரிய கூடிய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நடந்து இருப்பின் "அலெக்ஸ்ஸான்டர் கொன்றதேவ்"இன் ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் மேற் கொண்ட ஆராச்சியில் ஒரு சிறு படிமம் ஆவது கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடக்க வில்லை.

எனவே, இராமாயணம், மகாபாரதம் முதலியன 2000 ஆண்டுக்கு உட்பட்டவை என்பதை ஏற்றுகொள்ள முடியாதுள்ளது.
---------------------------------------------------------------------------------------

இன்று... நீண்ட நாட்டளாக நான் அடுத்து வரும் என கூறிவந்த லெமூரிய/குமரி மக்களின் கலண்டர் தொடர்பான சில விடையங்களை பதிவிடலாம் என நினைக்கின்றேன். ( கலண்டர் தொடர்பான விடையங்களை முதலில் பார்த்து விட்டு... பின்னர் எமது புராணத்துக்கும் (?) லெமூரியாவிற்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வோம்...)

இன்று எவ்வாறு "கிறீன் விச்" எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ... அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது.  அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.

காரணம்...

நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது... இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது... இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது... இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.)

தென்னிலங்கை... இது இராவணனின் தலை நகரம்...
நிரட்ச இலங்கை... இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது...  ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ )
இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி... ரோமபுரி...சித்தபுரி...பத்திராசுவம் எனும் நான்கு... முக்கிய பெரும் நகரங்களும்... ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)... ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது.

பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது... அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது... (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.)

5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே... பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது...)

இதில்... இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது... சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே...

அதாவது...

சூரியன் தன்னை தானே... அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்... அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்... சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது... ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது...)
இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்.... அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை...
அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்... ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.... தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ... அவ்வாறே... முன்னர்... 12 பயன்பட்டுள்ளது.... ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்... அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது...))
இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு... அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)

இதை கணித்த முறை மிகவும் வியப்பானது... காரணம்... அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...

இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்....

16 ம் நூற்றாண்டில்... போப் கிரகெரி... என்பவராலேயே... இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி   14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??)

மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத... காரணத்தாலேயே... கிரகெரி... ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்...
---------------------------------------------------------------------------------------
ம்... இப்ப மாதிரி அப்ப தமிழன் இருந்து இருந்த சவுன்ட் ஆச்சும் விட்டு இருப்பாங்க...

ஓகே பதிவு நீளமாகிறது....
நீண்ட நாட்களாக கலண்டரை பற்றி சொல்லுறன் என்றுட்டு சொல்லாமல் விட்டதுக்காக இன்றைக்கு முக்கியமான சிலத சொல்லியிருக்கன்....

மேலும் பல... சுவாரஷ்யமான விடையங்கள் இருக்கின்றன...  வரும் பதிவுகளில் பார்ப்போம்....
---------------------------------------------------------------------------------------

11 comments:

  1. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     
    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete
  2. கணேஸ்15 March 2010 at 08:04

    சுப்பர் பதிவு! வாழ்த்துகள்!
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. அருமையான ஆராய்ச்சி

    ReplyDelete
  4. sure... Mehar...
    tnx... கணேஸ் & jaisankar jaganathan...

    ReplyDelete
  5. Very good blog... Your topics all are interesting. Go ahead friend...

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவே தெரிகிறது...

    இப்பொழுதும் ஒரு அடி என்பது 12 இன்ச் கணக்குதான்... 10 என்பது எங்கே உபயோகப் படுத்தப் படுகிறது என்று தெரியவில்லை...

    தொடர்ந்து எழுதுங்கள்.. நிறைய விவாதிக்கத் தோன்றுகிறது... பின்னர் வருகிறேன்...

    நன்றி..

    ReplyDelete
  7. tnx...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி & Anonymous...

    vaanga vivaathippoom... :)

    10mm = 1cm
    1000ml = 1l
    intha 10 ai thaan sonneen... :)
    ithu thaane valakkaththilullathu...

    ReplyDelete
  8. super.its realy interesting.

    ReplyDelete
  9. பட்டையை கிளப்புகிறீர்கள் நண்பரே ........
    நன்றி நன்றி நன்றி.....

    ReplyDelete
  10. Hi,
    i red mahabaratham & Ramayanam together @ my age 15 in 1999 itself & I calculated the period of mahabaratham then itself based on the day by day story narration,surya grahanam,.. by sugar & Vaalmigi.Then even I realised that mahabaratham would held 5,500 yrs before & Ramayan would be 20,000 yrs before..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected