Total Pageviews

Saturday 18 December 2010

பறக்கும் தட்டுக்களின் சுவடுகள்... (படங்கள் * ஏலியன்ஸ்)

பரிமாணங்கள் 13
-------------------------------------------------------------------------------------------


இன்றைய பதிவு சம்பவங்களுக்குப்பதிலாக... படங்களுடன் போடப்பட்டுள்ளது.
உலகயுத்ததின் போது... ரஸ்ய அமெரிக்கப்படைகளால் யுத்த தந்திரமாக மேற்கொள்ளப்பட்டதே இந்த பறக்கும் தட்டு என்ற ஒன்று... எனும் கருத்து சிலரிடம் உண்டு. அவர்களது கருத்து பொய்... அதற்கும் முதலே... பறக்கும்தட்டுக்கள் பற்றிய பல பதிவுகள் இருந்திருக்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த பதிவு.

-------------------------------------------------------------------------------------------
இந்தப்படம்... ஆபிரிக்க கண்டத்திலுள்ள தன்ஷானியா (
நாட்டுக்குகை ஓவியங்கள்.
29 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
(1) முதலாவது படத்தில்... வானில், இரண்டு பறக்கும் தட்டுக்களை ஒத்த தெளிவான ஓவியங்கள் குகைச்சுவர்களில் வரையப்பட்டுள்ளது.
(2) இரண்டாவது படத்தில்... ஒரு பெண்ணை வேற்றுவாசிகள் (?) சூழ்ந்துகொள்வதுபோல் வரையப்பட்டுள்ளது.










-------------------------------------------------------------------------------------------


(3) இந்த படங்கள் ஃப்ரான்ஸின்... "Pech Merle "  எனும் குகையின் சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். கிறிஸ்துவுக்கு முன்.. 17 000 தொடக்கம் 15 000 ஆண்டுகளுக்குட்பட்டது. இதில், பல பறக்கும் தட்டுக்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் உள்ள மனித உருவம் ஏலியன்ஸாக அல்லது... ஏலியன்ஸ் மனிதனுடன் தொடர்புகொள்வதைக்காட்ட வரையப்பட்டுள்ளது.


-------------------------------------------------------------------------------------------
(4) இந்தப்படங்கள்... தஷிலி (
, கிறிஸ்துவுக்கு முன் 6 000 ஆண்டை சேந்தது. இதிலும் பறக்கும் தட்டுக்களின் அடையாளங்கள் இருக்கின்றன. வரையப்பட்ட உருவமும் வித்தியாசமானது.


-------------------------------------------------------------------------------------------
(5) இது மெக்ஷிகோ (
Querato, Mexico)
 குகை ஓவியங்கள். 7 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 
இதில் 4 மனித உருவங்களும்... அதற்கு மேலாக, ஒரு பெரிய பறக்கும்தட்டை ஒத்த வடிவமும் வரையப்பட்டுள்ளது. மனிதன் அவர்களுடன் தொடர்புகொண்டான் அல்லது கண்டு வியந்தான் என்று வேறு வேறு தகவல்களை தருகிறது இந்த ஓவியங்கள்.

-------------------------------------------------------------------------------------------
(6) இது அவுஸ்ரேலியாவில் 5000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.
நடுவில் ஆண்,பெண் மனித உருவங்களும்... அவர்களைச்சூழ ஏலியன்ஸின் முகங்களும் வரையப்பட்டுள்ளது.
ஏலியன்ஸிடன் உதவி பெற்றதைக்குறிக்கலாம் எனக்கருதப்படுகிறது.






-------------------------------------------------------------------------------------------
(7) இந்த குகை ஓவியங்கள் Sego Canyon , Utah. வை சேந்தது.... இங்குள்ள பல ஓவியங்களின் உருவங்கள் மனிதனுக்கும் முரணானதாகவும்... ஏலியன்ஸிக்கு ஒத்ததாகவும் உள்ளதாம்.






-------------------------------------------------------------------------------------------

(8) இந்த பதிப்போவியங்கள்... 10 ம் நூற்றாண்டை சார்ந்தவை, ஜப்பானிய மியூஸியத்தில் அறியப்பட்டது.  "பிராஜ்ஜபரமித்த சூட்ரா (Prajnaparamita Sutra) " என அறியப்பட்ட இந்த ஓவியத்தில்... இந்திய பிராக்மி எழுத்துக்களாள் எழுதப்பட்டுள்ளது. இவை, இராமயாணத்தை பற்றி கூறுகிறதாம்... அதுவும் இந்த பக்கத்தில், இராவணனின் புஷ்பக விமானம் பற்றி கூறப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை பெரிப்பித்து பார்க்கையில், இரண்டு பறக்கும்தட்டுக்களின் உருவங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
(9) இது 
"The Madonna with Saint Giovannino".
... 15 ம் நூற்றாண்டில் பலஷோ என்பவரால் வரையப்பட்ட புகழ்மிக்க ஒவியம். இதில்... மேரியின் வலப்பக்க மேல் மூலையில் ஒரு பறக்கும் தட்டை சார்ந்த உருவம் வரையப்பட்டுள்ளது. அதன் கீளேயே... ஒரு மனிதன் தனது நாயுடன் அந்த பறக்கும்தட்டு உருவத்தை பார்ப்பதுபோன்று தீட்டப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
(10) ஹம்பேர்க், ஜேர்மனியில் நடந்த சம்பவத்தை பின்னனியாக கொண்டு தீட்டப்பட்ட படம். 1697 Nov 4  அன்று நடந்திருக்கிறது. இதில் வானில் இரண்டு பெரிய சக்கரங்கள் போன்ற அமைப்பு இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. கீழே... பலர் நின்று பார்ப்பதுபோன்று உள்ளது. ஆகவே... அது தனி ஒருவரின் பொய் அல்ல எனலாம்.
-------------------------------------------------------------------------------------------
ஆர்வமுள்ளவர்கள்... மேற்படி லிங்களை கிளிக் பண்ணி படங்களின் முழுவிபரத்தை அறிந்து கொள்ளுங்கள். :)
-------------------------------------------------------------------------------------------

எனது நண்பர்களின் (RHn Crew) முதலாவது வீடியோ பாடல்...

பதிவைப்பார்வையிடும் நண்பர்களே... இதை டவுண்லோட் செய்து, பார்த்து உங்கள் கருத்துக்களை தெருவியுங்கள்.
நேரடியாக அவர்களை தொடர்பு கொள்வதென்றால்... புளொக்கின் மேல் மூளையில் உள்ள "எந்தன் காதலே..." விளம்பரத்தை பார்வையிடவும்.

-------------------------------------------------------------------------------------------


10 comments:

  1. ஆனால் இன்னும் உறுதியாக சொல்ல "இப்படங்களை தவிர" நம்மிடம் ஏதும் இல்லையே!!

    ReplyDelete
  2. நன்றி... Seshan :)
    நன்றி... வடுவூர் குமார் :)
    அதுவும் சரிதான்... UFO ஆய்வுகள் அனைத்தும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மக்களின் பீதியைக்குறைப்பதற்காகப்போலும்.

    ReplyDelete
  3. சுவாரசியமான தகவல்கள்.பதிவுக்கு நன்றி.இது போல் பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி... புலிகுட்டி :)
    இன்னும் இதைபோன்ற பல உண்மைப்படங்கள்... இருக்கின்றன தேடனும் வரும் ஏலியன்ஸ் பதிவுகளில் மீதியைப்போடுகிறேன்... :)

    ReplyDelete
  5. பதிவு நல்லா சூப்பரா இருக்கு.....
    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  6. மிக அருமையான தகவல்கள் !மேலும் எமக்கு தெரிந்த விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் !!
    பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை இன்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப்பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதாகும். இதில் சுவை தரும் விடயம் என்னவென்றால் கடந்த 1997 ல் பிரிட்டன் கொன்ஸ்ச வேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் காவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான தோற்றம் ஒன்றும் அவதானிக்கப்பட்டதாகும் என்றும் இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது. இந்த பறக்கும்தட்டு மூக்கோண வடிவம் கொண்டதாக இருந்தது, சகல திசைகளிலும் ஒளிர்வுகளை வீசியபடி நின்றது, இதன் முன்புறத்திலும் ஒளிவெள்ளம் பெருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    பறக்கும் தட்டு குறித்த கேள்விகள் தொடர்ந்து வருவதால் இது குறித்த தகவல்களை மறைப்பது பயனற்றது என்பதால் தமது சேமிப்புக்களை பொது மக்களுக்காக வெளியீடு செய்துள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. மேலும் இவை அனைத்தும் தகவல்களாக உள்ளனவேயல்லாது இவற்றின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் தொடர் கதையாகவே உள்ளது.
    பறக்கும் தட்டு (UFO ) ஏலியன்கள் பற்றிய மேலும் பல அறிய படங்கள் மற்றும் தகவல்களை இந்த தளங்கள் சென்று தெரிந்து கொள்ளலாம் .

    http://www.abovetopsecret.com/forum/thread454853/pg1
    http://www.latest-ufo-sightings.net/2010_04_11_archive.html
    http://www.alien-ufo-pictures.com/

    ReplyDelete
  7. மன்னிக்கவும் ! கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    ReplyDelete
  8. நன்றி...MANO நாஞ்சில் மனோ :)
    நன்றி...Vanika :)
    மிக்க நன்றி உங்கள் தகவல்களுக்கும் லிங்கும்... நான் சென்று வாசிகிறேன்... :)

    ReplyDelete
  9. அருமையான பதிவு நண்பா! எனக்கென்னமோ ஏலியன்ஸ்தான் நாம் இன்று புராணகதைகள் மூலமாக தெரிந்து வைத்திருக்கும் ராமர், கிருஷ்ணர், ஏசு போன்றோரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் நான் படித்தவரையில் இவர்கள் யாருமே மனித உறவுகள் மூலமாக பிறந்ததாக எழுதபடவில்லை!தேவர்கள் (ஏலியன்ஸ்) அளித்த வரத்தால் ராமர் பிறந்தாகதானே கூறப்பட்டுள்ளது! தங்கள் கருத்து என்ன நண்பா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected