Total Pageviews

Tuesday, 14 December 2010

தமிழச்சியும் ஃபேஸ்புக்கும்... :@

இந்த கூத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதென்றே தெரியவில்லை... 
:@
------------------------------------------------------------------------------------------
தமிழச்சி...
பொதுவாக இவாவை, இணையத்தில் புளொக்களை பார்வை இடும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியாரின் கருத்துக்களையும்... வேறு சிலரின் முன்னோடிக்கருத்துக்களையும் இணையத்தினூடு சமூகத்துக்கு எடுத்துரைப்பவர்.
இவரின் இணையத்தளப்பக்கத்தை முதல் முதலில் தட்செயலாக பார்த்த போது... தனது படங்களை சைட்டில் ஸ்லைட் ஷோவாக போட்டு இருந்ததை கண்டு, புகழுக்காக செய்கின்றாவென எண்ணினேன். பிறகு, அவாவின் இணையப்பக்கத்திற்கு அதிகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றும், வாசித்த முதலாவது ஆர்ட்டிக்கலும் எனக்கு அவளவாக பிடித்திருக்கவில்லை...

2 மாதங்கள் முன்பாக... எனது நண்பர் ஒருவர், ஃபேஸ்புக் ஃபான் பேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்... அது தமிழச்சியுடையதுதான்... நானும் இணைந்தேன்...

ஃபான் பேஜ் சமூக சேவைக்கானது என காட்டிக்கொண்டாலும்... அங்கும் அவாவின் படங்களைக்காணக்கூடியதாக இருந்தது (இது அவரின் விருப்பு வெறுப்பு... அதை நான் குற்றம் சொல்லவில்லை. )

அவாவின் கருத்துக்கள் ஒவ்வொரு தடவையும், ஃபேஸ்புக் ஹோம் பேஜ்ஜில் வரத்தொடங்கியதும்.... நானும் வாசித்தேன்... சில கருத்துக்கள் ஒத்துப்போவதாக இருந்தது... அவரின் கருத்துசார்பாகவும், எனது சுய கருத்தையும் கொமெண்ட்ஸாக‌ கொடுக்க ஆரம்பித்தேன்... அதற்கு அவாவின் பதிலளிப்பு முறையில் இருந்து என்னால் ஊகிக்க முடிந்தது... அவா சுயமான சிந்தனையுடன்... நடைமுறை சமூகத்துக்கு ஏற்றவாறு இல்லாமல், பெரியார் சொன்னதுகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு கட்டுப்பட்ட கோட்பாட்டிலே இயங்குகிறா என.
காரணம், நான் போட்ட கருத்துக்களுக்கு...  அடைப்புக்குறியினுள் சில தகவல்களைத்தந்துவிட்டு பெரியார் எந்த நாள் எங்கே சொன்னார் என்று போடுவா... ஆனால், எதிர்கருத்து போடுமிடத்து, அதற்குரிய விளக்கம் போடுவதில்லை... கேள்விகளாக கேட்டால் கூட பதில் இல்லை.. "லைக்" மட்டும் போட்டுவிட்டு வேறு ஒரு கருத்தை ஸ்ரேட்டஸாக போடுவா... சில வேளைகளில் நான் போட்ட கொமென்ட்ஸிம் காணாமல் போய்விடும். ( இத்தனைக்கும்... இரட்டை அர்த்த வசனங்களில் அவருக்கு சார்பாக போடப்பட்ட அல்லது குசும்பாக போடப்பட்ட பின்னூட்டங்கள் அப்படியே இருக்கும். )

ஒரு முறை ஏதோ,  ஈழம் சம்பந்தமாக நடைமுறை சாத்தியமே அற்ற விடையத்தை போட்டிருந்தார்... குறிப்பிட்ட நாளிலேயே... தனது படத்தைப்போட்டு "கருத்துக்கும் உருவத்துக்கும் ஒற்றுமை தேவையா?" எனும் பொருள் பட எவரோ ஒருவர் இவரின் புகைப்படத்தை கிண்டல் பண்ணிய காரணத்தினால் போலுஇம்.. ஸ்ரேட்டஸ் போடப்பட்டது.
அந்த அன்றே... நான் எனது கருத்தை பதிவு செய்துவிட்டு...
"சமூக சேவை என்று இயங்குகிறீர்களே... ஏன், ஃபான் பேஜ்ஜில் எமது சுய கருத்தை போட அனுமதிப்பதில்லை?" என்று கேட்டேன்... அதற்கு பதிலாக " நிர்வாணப்படங்கள் போடுகிறார்கள்... வேறு ஒன்றுமில்லை.." என பதிலளித்தார். நான் மொபைலில் இருந்ததால்.. தமிழில் டைப் செய்ய முடியாத காரணத்தினால்... ஒன்றும் கூறவில்லை.

ஆனால்,
2 நாட்களுக்கு முன்னர்...
 "அடிச்சா திருப்பி அடிப்பேன்டா" - அடிவாங்கறவன் ஈழத்திலே,  வசனம் பேசறவன் தமிழகத்திலே..." என்று போட்டிருந்தார்... இது என்னால், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... ( இது போன்று பல கருத்துக்கள் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துவதாக இருக்கின்றது. )
நாங்கள் இப்போது தோற்றுவிட்டோம் என்பதற்காக... நாங்கள் அடிவேண்டுவதாக கூற யாருக்கும் தகுதி இல்லை...
தருவதை வாங்கிக்கொண்டு இருக்காமல்... எமக்கு முழு சுதந்திர உரிமை வேண்டும், நாம் வாழ்ந்த மண் எமக்கு உரிமை உடையதாக வேண்டும் என்றே இழக்க இழக்க மீண்டும் மீண்டும் போராடினோம்... சந்தர்ப்ப சூழ் நிலைகளும், பச்சோந்தி தனங்களும் இன்று எம்மை முடக்கிவிட்டன... அதற்காக நாங்கள் அடிவாங்கின்கொண்டிருப்பவர்கள் அல்ல... என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


இது சம்பந்தமாக என் போன்ற ஈழத்தமிழர்களின் சொந்த கருத்தை கூறுவதற்காகவும்... மற்றையவர்களின் மாற்றுக்கருத்தை கூறுவதற்காகவும்...
ஃபேஸ்புக்குல்... ஃபான் பேஜ்ஜில், உறுப்பினர்களாக இருப்பவர்கள் கருத்தை தெரிவிக்கும் ஒப்ஸனை திறந்துவிட கோரினேன்.... ( படங்கள், வீடியோ லிங்கள் இல்லாமல்... கருத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளத்தக்க வழிமுறை இருப்பதை சுட்டிக்காட்டினேன்.) ஆனால், நான் போட்ட கொமென்ட உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது... ( எனக்கு மட்டும் அல்ல... பலருக்கு இதே நிலை நடந்திருக்கின்றது.. )
ஏன்... எங்களுக்கு கருத்தை கூற உரிமை இல்லையா? அல்லது அவா போன்றவர்களால் பதில் அளிக்க முடியாதா?
ஆனால், எமது ஈழப்பிரச்சனையை வைத்து... தாங்கள் மட்டும் பிளைப்பு நடத்துவார்களாம்... 
சாதாரண ஃபேஸ்புக் ஃபான் பேஜ்ஜிலேயே ( அதுவும் தமிழர் ஒருவர்ன் நடாத்தும் பேஜ் )... எங்களது உரிமையான கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்றால்... பிறகு என்னத்துக்கு... சிங்களவங்கள பேசனும்???

இப்போது, நான் ஆரம்பத்திலேயே நினைத்தது போனறு... இவர் தனது புகழுக்காகத்தான் இயங்குகிறார் என்று என்னால் முடிவே பண்ண முடிகிறது.
நீங்கள்... இவ்வளவு நாளா என்ன செய்தீர்கள்? என்ற ஒருவரின் கேள்விக்கு... 22 000 மெம்பர்ஸ் (உண்மையில் 17 000) சேர்த்தாவாமாம்... இதுவா ஒரு சமூக சேவகரின் பதில்?
22 000 என்ன 100 000 கூட சேக்க முடியும் இவாவால்... ஏனென்றால்... தமிழ் பெண்கள் எழுதுவது குறைவு... இவா படமும் போட்டு எழுதும் போது... ஜொல்லு விடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதுமே தயாராகத்தான் இருக்கும். சமூகத்துக்கு சவுண்ட் கொடுப்பதை தவிர என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.

ஒரு தனிப்பட்ட பதிவரைப்பற்றி எழுதக்கூடாது என்றிருந்தேன்... இன்று எழுதும் நிலை ஏற்பட்டுவிட்டது...
ஈழத்தமிழனை வைத்து புகழுக்காக பிளைப்பு நடத்துவதை பார்த்திட்டு இருக்கமுடிகிறதில்லை.
ஏற்கனவே... அரசியலுக்காக கருனா நிதியும்....
குடும்பத்துக்காக சோனியாவும்....
சீனா இலங்கைக்கு உதவி, இலங்கையை கொன்றோலுக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக றோவும்...
எங்களை வைத்து விளையாடிவிட்டார்கள்..
கண்டவரும்... யூஸ்பண்ணிட்டு துப்பிட்டு போக நாங்கள் ஒன்றும் சுவிங்கம் இல்லை...


இதை எழுதும் எனக்கு... ஈழப்போராட்டம் தொடர்பாக என்ன தெரியும் என்று கேக்கலாம்...


நானும் ஈழத்தில் பிறந்தவன்தான்... யுத்த காலத்தில் அங்கு வாழ்ந்தவன்... சனம் இடம் பெயர்ந்து செல்வதை நேரடியாக கண்டவன்... பலரது இழப்புக்களை பக்கதிலிருந்து கேட்டவன்... எனக்கு உரிமை உண்டு.


நேரடியாக நான் யுத்தத்தால் பாதிக்கவில்லை...

ஆனால், இன்றும் 7 பேரடங்கிய குடும்பம்... பிரிந்து எங்கெங்கேயோ இருக்கிறது... ஒன்றாக இருந்து 17 வருடங்கள் போய்விட்டது (3வயசில் இருந்தேன்.. )... எனக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு.


ஸைட் இஃபக்டாவே எங்களுக்கு இப்படி என்றால்... ஜோசியுங்கள் நேரடியாக இழப்பை சந்திதவர்களது மன நிலையை...
சும்மா... வெறும் பேச்சுக்காகவும், ஆரோ சொன்னதை கேட்டும் எம்மை பற்றி பேசி... பிளைப்பு நடத்த வேண்டாம். உதவ முடியாட்டியும்... இதை வைத்து சுய பேருக்காக கேவலமான பிளைப்பு நடாத்த வேண்டாம்.

கருத்து சுதந்திரத்தையாவது நாங்கள் பேணவேண்டும்.

எனது வலைப்பதிவு சிறிய அளவிலானது எனினும்...
பட விமர்சனங்களுக்கும்... சில அமூக பதிவுகளுக்கும் என்னை திட்டி கொமென்ட்ஸ் வந்ததுண்டு.... அவற்றை நான் அழித்ததில்லை... ( தகாத வார்த்தை பிரஜோகங்களை கூட... "*****" பண்ணி மற்ற கருத்துக்களை விட்டிருக்கிறேன். )
அப்படித்தான் பல பதிவர்கள் இயங்குகின்றனர்... கருத்துக்களை கூறவிட வேண்டும்... அது தான் நாகரீகம்.
------------------------------------------------------------------------------------------
இது போன்ற சமூக பக்கங்களே...  எமது கருத்துக்களை உள்வாங்குகிறார்கள்...
------------------------------------------------------------------------------------------
இது இப்போது.. இறுதியாக நான் பார்த்தது... இப்படி மிக முக்கியமான சமூக கருத்துக்களை கூறும்போது... இவா சொன்னது போல்... 17 000 என்பது பெரிய விடையமல்ல... 
------------------------------------------------------------------------------------------
கருத்துக்கேட்டா... மிரட்டுறாவாம்... நாகரீகமானவா... :P

------------------------------------------------------------------------------------------


15 comments:

  1. 100 000 கூட சேக்க முடியும் இவாவால்... ஏனென்றால்... தமிழ் பெண்கள் எழுதுவது குறைவு... இவா படமும் போட்டு எழுதும் போது... ஜொல்லு விடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதுமே தயாராகத்தான் இருக்கும்//

    மிக சரி..

    ReplyDelete
  2. kalangadheergal.
    ippadithaan silar udhavy seyyattalum emmakku ubathiravam tharugirargal

    ReplyDelete
  3. அவள் எல்லாம் பெரிய ஆளே இல்ல சகோதரா.. பொம்பள படம் போட்ட ஐம்பது ஆயிரம் பேர் கூட வருவாங்க.. அவரால் ஒரு பதிவுக்கு ஐநூறு லைக் கூட போடா வெக்க முடியாது அதுல பாதி பேருக்கு தமிழே தெரியாது

    2008 இல் தமிழச்சிக்கு புலிகள் அமைப்பினர் தொந்தரவு கொடுத்ததாகவும் அப்போது அவர்கள் தமிழச்சிக்கு ஆதரவாக "தொடர்ந்து தோழர் தமிழச்சி மீது தாக்குதல் நடத்தினால் விடுதலை புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்" என்று அறிக்கை வெளியிட்டவர் கொளத்தூர் மணி

    இப்படி எல்லாம் கதை விடும் நபர் தான் அந்த பிரெஞ்சு புரட்சிவாதி இத பத்தி தி க தரப்பும் ஒன்றும் சொல்லவில்லை.. இதை ஒரு பதிவா போடணும்னு அவசியமே இல்ல எல்லாருக்கும் தெரியும அவ யாருன்னு

    ஈழ தமிழனின் கண்ணீர பாத்து கலங்கி மட்டுமே நிக்க முடித்த தமிழன் அவமானத்துடன் எழுதுவது

    ReplyDelete
  4. நிறைய காலத்துக்கு பிறகு பதிவுலக பக்கம் வருகிறேன் .. இந்த கொடுமை பெரிய கொடுமை தான் .. சில கருத்துக்கள் கொடுமை தான் ..சுயமாக கூறவில்லை ..அவங்க சீமானை பற்றி பேசியது மிகவும் கடுப்பாக்கியது .

    ReplyDelete
  5. பெரியார் என்ற பெயரில், இவர் (தமிழச்சி) நடத்தும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல......ஆண்களை ஜொள்ளு விட வைத்து . ..அதை தனது வலைபதிவிற்கு உபயோக படுத்தி....யாரை வேண்டுமானாலும் அசிங்க படுத்தும் இவரை போன்றவர்கள் எல்லாம் எதற்கு "பெரியார்" என்று ஒருவரை கொசைபடுத்துகிறார்?

    தயவு செய்து இந்த "கேவல" வலை பதிவை (தமிழச்சி) புறக்கணியுங்கள்...

    ReplyDelete
  6. நன்றி...பயணமும் எண்ணங்களும் :)
    ஆம்.. அதுதானே, அங்கே நடந்திட்டு இருக்கு... :)
    ------------------------------------------------
    நன்றி...Anonymous (1)...
    ------------------------------------------
    @ Anonymous (2)...
    உண்மைதான்... உதவாட்டியும் பறவாயில்லை... எங்களை வைத்து ஜோக் பண்ணாமல் இருந்தால் சரி..
    ------------------------------------------
    @ Anonymous (3)...
    இதை பார்க்கும் போது... எல்லோருமே... பிளைப்புக்காகத்தான என்று தோன்றுகிறது.
    முத்துக்குமாரணனின்... மரணம் கூட உணர்த்தவில்லை யாருக்கும் எங்களது துண்பத்தை... அதைக்கூட அரசியலுக்கு பயண்படுத்துதுகளாமே... :(
    ------------------------------------------
    நன்றி...S.Sudharshan :)
    ம்ம்... எங்களை கோமாளிகள் ஆக்கி ட்றை பண்ணுறாங்க...
    ------------------------------------------
    நன்றி...Anonymous (4)
    பெரியார் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை இருக்கிறது... இவர் அந்த களகத்தின் உறுப்பினர் என்று சொல்லி இவ்வாறு சுயனலமாக நடந்துகொண்டமை வெறுப்பாக உள்ளது.

    ReplyDelete
  7. தமிழன்17 December 2010 at 07:55

    திராவிடம் பேசும் இவர் தன் பெயரை ஏன் இன்னும் தமிழச்சி என்று வைத்திருக்கிறார்.

    நெட்டில் காப்பி + பேஸ்ட் புரட்சி செய்யும் இவர் என்ன செய்தார் தமிழனுக்காக. வெறும் பெரியார் எழுத்துக்களை காப்பி, பேஸ்ட் செய்ததைத்தவிர?????
    இவருக்கு சீமானைப் பற்றி பேச அருகதை இல்லை.
    இது இவரின் சுய விளம்பரமே!!!

    ReplyDelete
  8. நன்றி... தமிழன்... :)
    உண்மைதான்... கொப்பி பேஸ் செய்றது... உண்மையை கேட்டால்... உளறுறது அல்லது பதில் அளிப்பதில்லை.
    சீமானைப்பற்றி கதைக்க இவாகு தகுதி இல்லை. ஃப்ரான்ஸில் நடந்த ஒரு ஈழப்போராட்டத்துக்காவது தலைமை தாங்கினாவா...

    ReplyDelete
  9. இதையெல்லாமா படிக்கின்றீர்கள்?
    இது ஒரு....வேணாம்......

    ReplyDelete
  10. நன்றி... ராவணன்...
    "இதையெல்லாமா படிக்கின்றீர்கள்?
    இது ஒரு....வேணாம்....."
    என்று போட்டிருந்தீர்கள்... உங்களுடைய வலைப்பதிவுக்கு போனேன்... உங்களுக்கு தொழிலே இதுதான் என்பதை புரிந்துகொண்டேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள். :P

    ReplyDelete
  11. சரிய சொன்னிங்க அண்ணா அவளுக்கு சொந்த புத்தீயே இல்லை அவள் ஒரு போட்டோ கோப்பி மாதீரீ இவ மட்டும் இல்ல இன்னொரு ஆள் இருக்க ஜெனித என்று யேர்மனில இருந்து தங்க முடியல இவளவேட தொல்லை எனக்கு என்ன யோசீனை என்றால் இவளவையீன் புரீசன் மாரை என்ன பாடு படுத்துவலவை

    ReplyDelete
  12. இவ ஒரு டம்மி பீஸ்

    ReplyDelete
  13. நண்பா இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்....
    வளாகத்தில் அறிவை மட்டும் வளர்ப்போம் , தெரியதவரிட்கு பகிருவோம் , அதைவிட்டுட்டு தேவை இல்லாத பயனற்ற பதிவுகள் வேண்டாம். தவறிளைதவனை தேடபோனால் முடிவு பல சிக்கல்களை தரும், அது தேவையும் அற்றது ,
    நண்பா நீ எழுதிய நல்லா தலைப்புகளை தொடர்ந்து எழுது , அனைவரிற்கும் 6வது அறிவு உள்ளது , பாவிக்க தெரிந்தவர்கள் மிகசிலரே ............

    ReplyDelete
  14. பிறந்த மண்ணிற்குண்டான பந்தம் எந்த தேசத்திற்கு சென்றாலும் விட்டுப்போகாது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected