Total Pageviews

Monday, 6 December 2010

சிம்பிளா ஒரு வெக்டர் டியூட்டோரியல்... (ஃபோட்டோஷொப் )

ஃபோட்டோஷொப் 
------------------------------------------------------------------------------------------
ஒழுங்கான பதிவுகள் இட முடிவதில்லை... :(
விரைவில்... ESP, ஏலியன்ஸ் பற்றிய பல புதிய தகவல்களுடன் எழுதுறேன்... :)
------------------------------------------------------------------------------------------
படங்கள் செய்முறை ஓடரில் இருக்கிறது... பக்கத்தில் இருக்கும் செய்முறைகளுக்கு ஏற்றவையாக இல்லை... ( அப்படி போட முறை இல்லாமல் வருகிறது புளொக்கொல்.. )

தேவையான அளவில் வேர்க் ஏரியாவை உருவாக்கி கொள்ளவும்... பக்ரவுண்ட் கறுப்பு... ( நான் 800*800 // 72 எடுத்துள்ளேன்... )
Ctrl + N

அடுத்து... "L" (Polygonal lasso tool) ஐ செலக்ட் பண்ணி படத்தில் உள்ளவாறு... அல்லது உங்களுக்கு பிடித்தவாறு கீறி கலர் பண்ணிக்கொள்ளவும்... ( நான் கறுப்பு கொடுத்துள்ளேன்.. ) ( கலர்க்கு Ctrl + Back KEY அல்லது  Alt + Back KEY இலகுவானது :) )
அந்த லேயரில் டபிள் கிளிக் பண்ணி... Layer style  போய் Outer glow கொடுக்கவும்...
 
அடுத்து இப்போ கீறிய லேயரை கொப்பி லேயர் பண்ணவும்... நிறத்தையும் மாற்றவும் பொருத்தமானவாறு... ( நான் கருமையான நீலம் கொடுத்துள்ளேன்.. ) (கொப்பி பண்ணப்பட்டது முதல் கீறிய லேயருக்கு கீளே போடப்பட வேண்டும். )
அடுத்து... Edit -> Transform -> Warp ஐ கிளிக் பண்ணவும்... 
மூளைப்பக்கங்களை எழுத்து படத்தில் காட்ட பட்டவாறு செய்துகொள்ளவும்... 3D தோற்றம் ஏற்பட்டிருக்கும்..

இதே போன்றே மேலும் சில கோடுகளை தனித்தனி லேயர்களில் போட்டு வர்ணம் தீட்டிக்கொள்ளவும். ( வேறு வேறு வர்ணங்கள் கொடுக்கவும்... :)
லேயர்களை டபிள் கிளிக் பண்ணி... Layer Style இல் Drop Shadow கொடுத்துக்கொள்ளவும்...
( பக்ரவுண் கறுப்பு என்பதால் வித்தியாசம் தெரியாது இப்பொழுது... :) 

அடுத்து அனைத்து லேயர்களுக்கும் கீளே ஒரு லேயரைப்போடவும்... ( அதாவது, பக்ரவுண் லேயருக்கு மேலாக மட்டும்... )
அதில் அதே "L" ஐ கிளிக் பண்ணி... படத்தில் காட்ட பட்டவாறு கீறி... வேறு வேறு கலர் கொடுத்துக்கொள்ளவும்... :)

அடுத்து அனைத்துக்கும் மேலாக ஒரு லேயரைப்போடவும்... "B" (Bursh tool) ஐ கிளிக் பண்ணவும்... மேலே இருக்கும் Opacity ஐ குறைத்துக்கொள்ளவும்.
இப்போது ஏற்கனவே டிசைன் பண்ணிய உருக்களுக்கு மேலாக படத்தில் காட்டப்பட்ட வாறு பிறஸ் பண்ணவும்...
( பிறஸ் ஸைஸ் மாற்றி மாற்றி பண்ணவும் அப்போதுதான் அழகாக இருக்கும்.. :) ) 

கடைசியில்... இப்போது இப்படி இருக்கனும்... :)

------------------------------------------------------------------------------------------
நீங்கள் மேலும் மெருகூட்டிக்கொள்ளலாம்...
நான் செய்தது இதுதான்... :) 

------------------------------------------------------------------------------------------
நல்லம் என்றால் வோட்...
இல்லை... என்றால் காரணம் கொமன்ட்ஸாக போடவும்... :)
------------------------------------------------------------------------------------------

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected