Total Pageviews

Friday, 17 December 2010

ஏலியன்ஸிக்கு விட்ட தூது சமிக்ஞை... ( ஏலியன்ஸ் *பரிமாணங்கள் 12)

பரிமாணங்கள் 12
-------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ் சம்பந்தமான பதிவில்... புதிய தகவல்களைத்தருமாறு கேட்டிருந்தார்கள். இன்னமும் நான் தேடிப்பெறவில்லை... பெற்றபின் புதிய/சமீபகாலத்தகவல்களைத்தருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------

இப்போது... போனபதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல்... நாங்கள், பிரபஞ்சத்தில் வேற்று உரினங்கள் இருக்கின்றனவா... இருந்தால் தொடர்பு கொள்வதற்காக அனுப்பிய சமிக்ஞையையும் விளக்கத்தையும் பார்ப்போம்.

உக்ரைனிலி இருக்கும் ரேடியோ டெலஸ்கோப் மூலம்... 1999 இலும் 2003 இலும் பிரபஞ்சத்தில் வேற்று உயிரினங்கள் இருந்தால்... எமது இருப்பை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் செய்தி சமிக்ஞையாக அனுப்பப்பட்டது...
இது தான் அந்த செய்தி...

இந்த செய்தியில்..
கணிதக்குறியீடுகள்...
இதுவரை கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்... முக்கியமானவற்றின் சேர்க்கை...
கலப்பிரிவு... ( அடிப்படை உயிரினமான அமீபாவின் தோற்றம்.. )
டி.என்.ஏ அமைப்பு...
மனித உடற்கட்டமைப்பு..
புவியியல் அமைப்பு... நில அமைப்பு...
மற்றும் சமிக்ஞை அனுப்பப்பட்ட முறை உள்ளடங்களாக பல தகவல்கள் இருக்கின்றன.

கூர்ந்து அவதானித்தால்... எவருக்கும் விளங்குமாம் இந்த குறியீடுகள்.
-------------------------------------------------------------------------------------------





































-------------------------------------------------------------------------------------------
ஆனால், இதுவரை ஏவப்பட்ட இந்த சமிக்ஞைக்கான பதில்கள் வெளியிலிருந்து கிடைக்கவில்லை.
ஒன்று... இந்த தகவல்கள் இன்னமும் வேற்று உயிரினங்களை சென்றடையவில்லை... அவர்களால் இதை உணரமுடியவில்லை.. அதாவது எமது பரிமாணங்களுடன் அவர்கள் ஒத்துப்போவதில்லை... என்ற முடிவுக்கே வரலாம். மாறாக.. உரினங்கள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. 
காரணம், இந்த சமிக்ஞை இன்னமும்... அண்டவெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறதாம்... விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த பிர பஞ்சத்தில்... எங்கோ ஒரு நாள்.. எமது பரிமாணத்தை ஒத்துப்போக்கக்கூடியர்களிடன்ம்... இந்த தகவல் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த நீண்ட காலத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------

இந்த பதிவுடன்... 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.. ஏலியன்ஸ் தொடர்பான செய்திகள் உலகில் நடந்துள்ளன... சில தரப்பினர் சொல்வதுபோல்... அது உலகயுத்தத்தில் நடைபெற்ற அமெரிக்க ரஷ்ய யுத்த தந்திரம் அல்ல... என்பதை நிரூபிப்பதற்காக ஆராயப்பட்ட படங்களை போட இருந்தேன்... பதிவு மிக நீளமாகிவிடும் என்பதால்... போட வில்லை... அடுத்த பதிவிலேயே.. போட்டுவிடுகிறேன். :)

சமிஞையின் கடைசிப்படம்... 6 வது பக்கமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது... தெரிந்தவர்கள் உறுதியாக சொல்லவும்.

பதிவு பிடித்திருந்தால் வோட் போடவும்... அல்லது, கொமென்ட்ஸில் சொல்லவும் காரணம் / பிழைகளை.
-------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. ஆர்வத்தை அதிகரிக்கிறது தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி... !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫/// :)
    உங்கள் பசுபிக் பெருங்கள் பதிவைவிடவா இது... சுப்பர் பதிவு உங்களது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எப்பொழுதும் போல் அருமையான பதிவு.அடுத்தது என்ன?.

    ReplyDelete
  4. நன்றி...புலிகுட்டி :)
    அடுத்தது இன்னும் தேடனும் புதுத்தகவல்கள்... :D

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails