------------------------------------------------------------------------------------------
2010 ம் ஆண்டில் நான் பார்த்த படங்களுள் எனக்கு பிடித்த படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு இதில் பாரிய மாற்றம் இருந்தால்... உங்கள் வரிசையை கீழே கொமென்டில் போடவும். பிடித்திருந்தால் வோட் போடவும். :)------------------------------------------------------------------------------------------
அங்காடித்தெரு.
சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு (சென்னை) வேலைதேடிவரும் இளவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அவர்களின், ஏழ்மையின் காரணமாக... எப்படியெல்லாம் வேலையிடங்களில் நடத்தப்படுகின்றனர்... என்பதை வெளியாருக்கு வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டியது..
இப்படியான சூழ் நிலையில்... அவர்களினுள் எழும் காதல், எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கின்றன என்பதை... ஹீரோயிஸத்தையும் தாண்டி... ஒவ்வொரு பாத்திரத்தினூடும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர்.
இறுதியில் எது உண்மைக்காதல் என்பதை உணர்த்தும் படம்.
என்னால் மறக்க முடியாத காட்சி...
காதல் கடிதம் பிடிபட்டதும்... காதலன் ஏழ்மை/குடும்பத்தை காக்கவேண்டிய நிலையின் காரணமாக, அதை மறுத்து தனது காதலியை பலர்முன்னிலையில் கேவலமாக திட்டுகிறார்... இருந்த ஒரே சந்தோஷமும் போய்விட்டதே என்ற ஏக்கத்தில்... காதலி தற்கொலை செய்துகொள்கின்றார். மறக்க முடியாத காட்ச்சி இது.
என் விமர்சனம்...
http://alivetorrents.com/torrent/8268676/tamil-dvdrip-angaadi-theru-2010-lotus-x264-1cdrip-mp4-tt
------------------------------------------------------------------------------------------
மதராசபட்டினம்.
கஜினி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரே உணர்வை எனக்குள் ஏற்படுத்திய படம்.
சுதந்திரத்துக்கு முன்னான இந்தியாவில் நடந்ததாக கதை கூறப்படுகிறது.
சாதாரண சலவைத்தொழிலாளிக்கும்.. பிரிட்டுஸ் பிரபுக்களின் மகளுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்... பிரிவு என்பவை சிறப்பாக காட்டப்பட்டன. கதை ஃப்லாஸ்பாக்கில் சொல்லப்பட்டதும்... இறுதியில் அந்த மூதாட்டி காதலனின் சமாதியில் இறப்பதும் மிக அருமையாக இயக்கியுள்ளார் இயக்குனர்.
பிடித்த காட்சி :
சுதந்திர தினமன்று நடக்கும் காட்சிகளும்... கடைசியாக, பலூன் டையரில் போட்டு காதலனை ஆற்றில் தப்பசெய்துவிட்டு... செல்ல எத்தனிக்கும் போது... ஆர்யா... கையால் படகைப்பிடிப்பதும்... துடுப்பால் விரல்களின் அடித்து பிடியை தளர செய்வதும் அருமை. பின்புல இசை மேலும் இந்த காட்சியை பிடித்ததாக்கியது.
http://alivetorrents.com/torrent/8695352/madarsapattinam-2010-tamil-dvdrip-x264-1cdrip
http://alivetorrents.com/torrent/8695352/madarsapattinam-2010-tamil-dvdrip-x264-1cdrip
------------------------------------------------------------------------------------------
பொஸ் என்கிற பாஸ்கரன்.
நான் மிக மிக ரசித்துப்பார்த்த திரைப்படம். எந்த ஒரு காட்சியுமே ஸீரியஸ் இல்லாமல் போனாலும்... அனைத்துமே மனதில் படும்படியாக இருந்தது. ஆர்யா சந்தானம் வரும் அனைத்துக்காட்சிகளுமே சுப்பர்.
என் மனதில் வடிவேலுவுக்கு அடுத்த இடம் இப்போ நண்பேன்டா சந்தானத்துகுத்தான்.
படத்தின் கதை என்றால் என்ன சொல்றது... உதவாக்கரையாகத்தெரியும் ஒருவன் காதலித்து பிறகு கரம் பற்றுவதற்காக முன்னேறும்... அதே கதைதான். ஆனால், நகைச்சுவையாக சொல்லப்பட்ட விதம் சுப்பர்.
பிடித்த காட்சி...
எல்லாம்.
------------------------------------------------------------------------------------------
விண்ணைத்தாண்டி வருவாயா.
அருமையான திரைக்கதை. காதலும் அதன் பிரிவுகளும் அருமையாக காட்டப்பட்ட படம். சிப்பு, திரிஷ்யாவின் இயல்பான நடிப்பு... ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளை அடிப்படையாக கொண்டாலும் இந்தப்படத்தை ஒரு படி மேல் நிறுத்தியது.
இந்தப்பட உணர்வுகள் எழுத்தில் எழுதமுடியாதவை. படத்தின் முடிவு எடுத்த விதம் தான் என்னை மிக கவர்ந்திருந்தது.
பிடித்த காட்சி...
------------------------------------------------------------------------------------------
ராவணன்.
படம் தோல்விப்படம் என்றாலும்... எனக்கு பிடித்த படம்.
அனைவருமே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
ஒருத்தன் காதல் வரும்போது... எவ்வளவு மாறுதலுக்கு உட்படுகின்றான் என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டது. (இராமாயணக்கதைதான்... இராவணன் முன்னிலைப்படுத்தப்பட்டது. )
இறுதிக்கட்டத்தில்... பிருத்விராஜின் சந்தேகமும் அதை தொடர்ந்த காட்சிகளும் இரு முடிவுகளை எடுக்கத்தக்கனவாக இருந்தது.
1) உண்மையிலேயே சந்தேகம் கொள்கிறார். ஐஸ்வர்யாவும்... விக்ரம் அவளவு நாளாக நடந்துகொண்ட முறையிம் ஈர்ப்புக்கொண்டு அவரிடமே சொன்னது போல் போகின்றார்.
2) விக்ரமை வீழ்த்துவதற்காக மனைவி மீது சந்தேக்ப்பட்டது போன்று பிருத்விராஜ் நடிக்கின்றார்.
படத்தின் பெரிய குறை... ஏன், விக்ரம் (வீரய்யா) தீவிரவாதப்போக்குக்கானான் என்பது காட்டப்படவில்லை.
பிடித்த காட்சி...
தங்கை (பிரியாமணி) பொலீஸ் ஸ்ரேஷனில் நடந்தவற்றை கூற... ஒன்றுமே செய்ய முடியாதவனாக அண்ணன் (விக்ரம்) குண்டுபாய்ந்த தொண்டை ஓடு கத்தும் காட்சியும்... அதைக்கூறும் போது ஐஸ்வர்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் விழும் காட்ச்சியும்... திறமையான நடிப்பு. பிடித்திருந்தது.
http://alivetorrents.com/torrent/8623130/tamravanan-2010-1cd-dvdrip-xvid-ac3
http://alivetorrents.com/torrent/8623130/tamravanan-2010-1cd-dvdrip-xvid-ac3
------------------------------------------------------------------------------------------
மைனா.
பிந்தங்கிய கிராமத்தில்... சிறுவயதிலேயே உருவாகும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இறுதியில்... ஒருவரின் சந்தேகத்தால் ஏற்படும் பின் விளைவுகள் இறுதி 20 நிமிடங்களில் படத்தை புரட்டிப்போட்டுவிடுகின்றது. " நாசமா போவா... நால்லாவே வாழமாட்டாய்..." போன்ற வசனங்களுக்கேற்ப வாழ்க்கை மாறுவதாக காட்டப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
பிடித்த காட்சி :
கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது... "எங்களை நாய்மாதிரி அலைய விட்டுட இல்ல... கஞ்சா கேஸ்ல போட்டு வெளிலயே வராம பண்றன்டா... எப்டி வாழ்றா என்று பார்ப்பம்... " என்று... ஓடிவந்த ஜோடியை திட்டும் போதுகாட்டப்படும் முகபாவனைகளும்... அதை தொடர்ந்த சில காட்சிகளும் அருமை.
http://alivetorrents.com/torrent/9092215/mynaa-2010-tamil-lotus-dvd-rip-v99
http://alivetorrents.com/torrent/9092215/mynaa-2010-tamil-lotus-dvd-rip-v99
------------------------------------------------------------------------------------------
எந்திரன்.
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான சையன்ஸ் ஃபிக்ஷன் படம். ரஜனியின் நடிப்பு மிகவும் கவர்ந்திருந்தது எனக்கு... தான் ஏன் சுப்பர்ஸ்டார் என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோவுக்கு உணர்வு கொடுத்தால்... ஏற்படத்தக்க சிக்கல்களை ரோபோ மனித காதல் மூலம் காட்டி இருந்தார்கள்.
திரைக்கதையில்... சயன்ஸ்ஃபிக்ஷன் என்று பார்க்கையில் பெரும் குறைபாடுகள் இருந்தன.
பிடித்த காட்சி :
இறுதிக்கட்டத்தில்.. பல ரோபோக்களுக்கு மத்தியில்... அதே உருக்கொண்ட விஞ்ஞானி (ரஜனி) யை கண்டு பிடிக்கும் போது.. ரோபோ (ரஜனி)யின் நடிப்பு சூப்பராக இருந்தது.
http://alivetorrents.com/torrent/9037165/enthiran.2010.dvdrip.tamil
http://alivetorrents.com/torrent/9037165/enthiran.2010.dvdrip.tamil
------------------------------------------------------------------------------------------
கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட படம். ஒரு சாதாரண மனிதன் எப்படி கொலைகாரருடன் தொடர்பேற்படுகிறார். காமத்தால், எப்படி கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார்கள். அதை மறைக்க முழு நேர கொலையாளியாக மாற நேரிடுகிறது என்பதை எல்லாம் காட்டிய படம்.
இதனிடையே... அழகான காதலும் இழையோடுகிறது.
ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கும் காதலர்களுக்கும் ஒருவகையுல் எச்சரிக்கை மணியடித்த படம்.
பிடித்த காட்சி...
காதல் காட்சிகள்... தந்தை இறந்தவுடன் கார்த்தியின் நடிப்பு.
http://alivetorrents.com/torrent/8831653/naan-mahan-alla-2010-tamil-1cd-xvid-mp3-mastitorrents
நான் மஹான் அல்ல...

உத்தம புத்திரன்...
வழமையான கதைதான்... சமீப காலமாக தனுஷே இப்படிப்படங்கள்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
எனினும் இந்தப்படத்தில்... குடும்பம் என்றால் எப்படி இருக்கனும்... மரியாதை என்றால் என்ன... கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம். என்பதை சிறு சிறு விடையங்களினூடாகவும் காட்டியுள்ளார்கள்.
பிடித்த காட்சி...
தான் கற்பனையாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் நியமாக வந்துவிட்டதாக எண்ணி... பிரமையடையும் விவேக்கின் காட்சிகளை விரும்பி ரசித்தேன்.
தனது அண்ணன் மீது கைவைத்த மகனை எட்டி உதைக்கும் காட்சியும் ரசித்தேன்.
------------------------------------------------------------------------------------------
குட்டி.
ஏற்கனவே, வேறு ஒருத்தரை காதலித்த பெண்ணை... அன்பால் தன் பக்கம் ஈர்க்கும் படம்தான் குட்டி.
சிறு சிறு அரவணைப்புக்கள் எவளவு பெரிய உள மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக்காட்டிய படம்.
சிறப்பாக இயக்கப்பட்டிருந்தது.
பிடித்த காட்சி...
திருமணத்திற்கு தயாராகவுள்ள... ஸ்ரேயாவிடம் தனது காதலின் நிலையை சொல்லும் தனுஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்...
ஹீ..ஹீ... ஒரு நகைச்சுவைப்படத்தை நன்றாக ஜோசித்து கொவ்போய் வரலாற்றுப்படமாக தந்திருந்தார்கள்.
ஏற்கனவே வந்த மொழிமாற்றுப்படமான "குயிக் கன் முருகன்" படத்தை விட மிகவும் நகைச்சுவைமிக்க படம் இது.
------------------------------------------------------------------------------------------
இவை தவிர... சிக்கு புக்கு, பாணா காத்தாடி, பையா, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். படங்களும் இருந்து பார்க்க கூடியதாக இருந்தது.
------------------------------------------------------------------------------------------
டொரன்ட்ஸ் ஃபைல் ஒவ்வொன்றினதும் இணைக்கப்பட்டுள்ளது. தரமானவையாக டவுன்லோட்பண்ணலாம் :).
------------------------------------------------------------------------------------------
இந்த படங்களைத்தவிர பல நல்ல படங்களை நான் பார்க்காமல் விட்டிருக்ககூடும்... நீங்கள் நல்லதென கருதுவதை தந்து உதவவும்.
------------------------------------------------------------------------------------------
good collection..
ReplyDeleteMy collection:
http://sirippupolice.blogspot.com/2010/12/10-2010.html
நன்றி...
ReplyDeleteஉங்கள் தெரிவுகள் சுப்பர்... நான் மிஸ் பண்ணியதெல்லாம் இருந்தது...
Kalavaani padathai marandhu viteergal nanbare....arumayana entertainer "KALAVAANI"
ReplyDelete