Total Pageviews

Tuesday 5 October 2010

பெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமராலொஜி : P)

சுட்ட நியூமராலொஜி 
------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையுள்ளவர்கள் படிங்க...:) நம்பிக்கை இல்லாதவர்கள்.. :D

------------------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களுக்கு பின்னர்... ஏற்கனவே சுட்டு எழுதிய நியூமரலொஜியை... மீண்டும்... புதிய பகுதியூடாக எழுதுகிறேன்.
போன முறை... பிறந்த திகதிக்குரிய குணங்களை சுட்டேன். இந்த முறை... உங்களது... தனித்தனி பெய்ர்களுக்குரிய பலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

அதற்கு முதல் உங்களது பெயருக்கான... நம்பரை கண்டறியும் முறை... இதுதான்...

எண்களை பார்க்கும் போது...  உங்களது இனிசலுக்கும்... சேர்த்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக...
C.VALAAKAM
3+4+1+3+1+1+2+1+4 = 20
( எண்களுக்குரிய... நம்பர்கள் அருகில் தரப்பட்டுள்ளன.)

------------------------------------------------------------------------------------------

இனி... முதலாவதாக... இன்று...  கூட்டெண்... 10,19,28,37,46 வருபவர்களின்... குண‍ நலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 10
இவ்வெண் உடையவர்கள்... கண்ணியமும், கீர்த்தியும் உடைய மனிதர்கள். வாழ்க்கையில் நிதானமும்... தன்னம்பிக்கையுமிருக்கும். வாழ்க்கையில் அதிஷ்ட மாறுதல்கள் அடிக்கடி ஏற்படும். ஒன்று 0 உடன் சேர்வதால்... சகடஜோகம்.  சக்கரம் போல் வாழ்க்கை அமையும். சுலபமாக பிரசித்தமாவார்கள். எல்லாக்காரியமும் பிரசித்தமாக கூடியதாகையால்... நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். மன மகிழ்வான வாழ்க்கை உண்டு. பணத்தட்டுப்பாடு வராது.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 19
இவ்வெண் உதய சூரியனை குறிப்பதால் அஸ்தமனமில்லை. பொழுது ஏற‌ ஏற... அதிகப்படுத்தும் சூரிய வெளிச்சம் போல...  வாழ்க்கை மேன்மை அடைந்துகொண்டு செல்லும். ஒரு திட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் இவர்கள்... நல்ல வாழ்க்கைத்துணைவரை அடைவர் என்றும் சக்தி இவர்களை பிரியாது.
வயோதிப காலத்திலும்... இளைஞர்போல் சுறுசுறுப்பாக இருப்பர். கடைசிவரை வாலிபராக இருப்பார். சுகானுபவங்களில் நேர்மையே இவர்களுக்கு வெற்றியளிக்கும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 28
வாழ்க்கையின் ஆரம்பத்தில்... முன்னேற்றத்தையும் சுகத்தையும் தரும் இவ்வெண் நேர்மறையான தன்மைகளையுடையது. எக்காரியமாயினும்... போட்டிகளும்.. சிரமங்களுமுண்டாகும். வாழ்க்கையை திரும்பதிரும்ப தொடங்க நேரிடும். மிக வேகமாக முன்னேற்றமடைவர்... கடைசியில் எல்லாத்தையும் இழக்க நேரிடும்.
நண்பர்களாலும்... உறவினர்களாலும்... எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடன் திரும்ப வருவது அபூர்வம். கஷ்டப்பட்டு சேமித்த பொருட்கள் எல்லாம் எதிர்பாராமல் இழக்க நேரிடும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 37
சாதாரன நிலையில் உள்ளவர்களைக்கூட... மேன்மையான நிலைக்கு கொண்டுசெல்லும்.  வசீகரமானது. காதலில் வெற்றியைத்தரும். தன் அந்தஸ்துக்கு மேம்பட்டவரால் விரும்பப்படுவர். ஆண், பெண் இருபாலரிலும்... விசேடமான நண்பர்கள் ஏற்படுவர். நண்பர்களால் வாழ்க்கை முன்னேற்றமடையும். எதிர்பாராமல்... அதிஸ்டகரமான கூட்டாளிகள் முதலுடன் வந்து சேர்வார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த வசதியாக வாழ்க்கை உண்டாகும்.
கவர்ச்சிகரமாக இருப்பர்.  மிக உண்ணதமான நிலையில் உள்ளவர்களை வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி வீழ்த்திவிடும். பேராசை குறைக்கப்பட வேண்டும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் :46
எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைய உதவும் இவ்வெண். வயது ஏற ஏற செல்வமும்... அந்தஸ்தும் அதிகரிக்கும். இந்த எண் உடையவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

------------------------------------------------------------------------------------------

அடுத்து...  55,64,73,91,100 ஐ கூட்டெண்ணாக உடையவர்களுக்கு பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

நன்றி...  வி.ஏ.சிவராசா  

------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. நியுமராலஜி பத்திய முந்தைய இடுக்கைகளுக்குண்டான தொடர்பை இந்த இடுக்கையில் கொடுத்திருந்தால் அவற்றையும் படிக்க வசதியாக இருந்திருக்குமே?

    ReplyDelete
  2. நன்றி...Jayadeva... :)
    அவ்... மறந்துட்டேன்... பிரிவுகளில் "சுட்ட எண் ஜோதிடம்" என்டு இருக்கிறது... அதுதான்.

    நன்றி...denim... :)
    உங்கள்... 1408 விமர்சனம் சுப்பர்...

    ReplyDelete
  3. பெயர் வைப்பதற்கு ராசி நட்சத்திரம் பார்க்கதேவை இல்லையா என்று தயவு செய்து கூறுங்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected