Total Pageviews

Thursday 14 October 2010

இன அழிப்பும் அலட்சியமும்... (01)

இன அழிப்பும் அலட்சியமும்... (01)
------------------------------------------------------------------------------------------
என்னதான் நாங்கள் நவீனப்பட்டு விட்டதாக காட்டிக்கொண்டாலும்... உலகின் ஒவ்வொரு பாகத்து மக்களின் அடி மனங்களில்... (பொதுவாக) இனம்,இடம் எனும் வெறி... இருக்கின்றது. இன்றும்.. அந்த இன இட வெறிதான் இன்றும்... தீவிரவாதமெனும் பெயரிலும்... அதை தடுக்கிறோம் என்ற பெயரிலும்... உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த செய்கைகளில் பொதுவாக தலமைப்பீடங்களே ஈடுபட்டாலும். ஒவ்வொரு குடிமகனும்...  காரணமாக அமைகின்றார்கள். அவர்கள்தானே... இந்த தலைமைப்பீடத்தை தேர்வு செய்த பொறுப்பாளிகள். (ஜன நாயக முறையை சொன்னேன். சர்வதிகார, முடியாட்சி முறைகளில் கூட ஏதோ ஒரு வகையில் மக்களே பொறுப்பாளியாக இருக்கின்றார்கள்... எல்லாம்... அடிமனதில் உறங்கிக்கொண்டிருக்கும்... "இனம்" மற்றும் "இடம்" என்ற இரண்டு விச வித்துக்களும்தான்.)

இது பற்றி... அறிவியல் ரீதியாகவும்... சமூகவியல் ரீதியாகவும் பார்க்க முதல்...  இனவெறி எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம். அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்வையும்... ஒரு வித பாரத்தையும் மனதில் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அதீத கற்பனை சக்கியுள்ளவர்களுக்கு மன உளைச்சலைக்கூட கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்... சோ... தவிர்ப்பவர்கள் தவிர்க்கவும். :)

------------------------------------------------------------------------------------------

டாஸ்மேனியா...
அவுஸ்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அளகிய தீவு. நாய்கள் அற்ற தீவு.... அங்கு 5000 இக்கும் மேற்பட்ட  டோஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
1810 ம் ஆண்டு...
பிரித்தானியர்களின்... இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக... இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன. இதற்கு முதல் வெளி உலக‌த்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்... இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள். இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.
பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்... வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்... அடிமைகளாக்கப்பட்டு... இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர்.
டோஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை. வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.

1828 ஆம்... ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு... எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொள்ளலாம்... ஒரு கறுப்பனை கொண்டால் 3 பவுண்ட்ஸ்... ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.
இப்படி சட்டம் வந்ததும்... என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
5000 பேராக இருந்த சமுதாயம்... 75 ஆக்கப்பட்டது... அதில் 72 ஆண்களும்...3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிளிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில்... ஐரோப்பியாவில் இந்த கொடூர  இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்... மீதமானவர்களை கொல்ல முடியாமல்... இருள் சிறைக்குகையில் அடைத்துவைத்தார்கள். அங்கும்... நய வஞ்சகமாக... உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளப்படார்கள்.

1869 ம் ஆண்டு... 2 பெண்களும்... 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக... இதைக்கேள்விப்பட்ட... ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்... அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி... அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக்கொண்டார்கள். (காரண்ம் ஒன்றும் பெருசில்லை... ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே நோக்குத்தான்.)

1876 இறுதிப்பெண்... ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்... கண் முன்னேயே... துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி... தனது பாசையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை அவுஸ்திரேலிய பழங்குடி ஒருவர் மூலம்... மொழி பெயர்க்கப்பட்டது.
"எங்கள் சம்பிரதாயப்படி... இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்... தயவு செய்து... என்னுடலை சின்னாபின்னமாக்காதீர்கள்... என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்...." என்று கதறினால்.

இதை கேட்டு சிரித்த வெறியர்கள்... அப் பெண் இறந்ததும்... அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.
சிறிது காலத்தில் அதை தோன்டி எடுத்து... டோஸ்மேனியா மியூஸியத்தில்... இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப்போட்டு இருந்தார்கள். இந்த கேவலமான செயலை... பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்த போதால். 1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு... மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.
( சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற மதன் சேரின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)

------------------------------------------------------------------------------------------

இந்த சம்பவத்தில்... ஏதோ.. ஒரு இனத்தவர் தானே(கறுப்பர்)...  எங்களுக்கு இடம் வேண்டும்... என்ற ஒரே வெறிதான் காரணம். இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும்... பெரிதாக ஐரோப்பியர்களோ... வேற்று நாட்டினரோ... கொந்தளிக்க வில்லை... எல்லாம்... வேறு இனம்... அழிந்தால் நமக்கென்ன?... என்ற மனப்போக்குத்தான். இன்றும் இந்த உணர்வு... விஷம் மனித நெஞ்சை விட்டு அகழவில்லை என்பது தெரிந்த மறுக்கப்படும் உண்மை.

------------------------------------------------------------------------------------------

6 comments:

  1. உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

    எந்த கால கட்டத்திலும் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மைஇனரை அடக்குவதில்தான் குறிக்கோளாக உள்ளனர்.

    ReplyDelete
  2. நன்றி...AT.Max... :)
    உண்மைதான்... மேலும், தனக்கென்று வரும் போதுதான் எல்லோருக்குமே புரிகிறது. அல்லது... வேறுயாருக்கோதானே என்ற அலட்சியம். அதை விட கேவலமாக சிலர்... இந்த மாதிரி சம்பவங்களை வைத்துதமது பிழைப்பை நடத்தும் கேவலமும் நடக்கிறது.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு .. நல்ல தகவல் .. காலம் காலமா இது தானே நடக்குது ...:((

    ReplyDelete
  4. "வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை"

    கலங்க வைக்கிறது ...

    ReplyDelete
  5. "1976 ம் ஆண்டு... மக்கள் கூட்டமாக நுழைந்து "

    இதே போல இங்கு நடக்காதா :(

    ReplyDelete
  6. நன்றி சுதர்ஷன்....
    இல்லை நடக்காது... நாங்கள்... நண்பர்களை வளர்க்கவில்லை... பகையாளிகளை வளர்த்திருக்கிறோம்.
    அதோடு... இப்போது... மனிதம் இல்லை... எங்களுக்குள்ளேயே குறைந்துவிட்டது. :(

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected