Total Pageviews

Saturday 22 May 2010

லெமூரியா தமிழர்களும் யூதர்களும்!!! (லெமூரியா - 09)

லெமூரியா 
--------------------------------------------------------------------------------------------
போன பதிவில்... லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன்.
இன்றும் அவ்வாறான சில சுவார்ஷ்யமான தொடர்புகளை பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------
எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்...

மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை... அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்... அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்... லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்... )

அத்தோடு... வேறு ஆய்வாலர்களும்... மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன... போன்ற பாதையூடாக எகிப்துக்கும்... இந்திய பகுதிக்கும்... வியாபாரம் நடந்து இருக்கிறதாம்... மேலும்... அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன... ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்...)

அது இருக்கட்டும்... நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா... சிலது இருக்கு...
--------------------------------------------------------------------------------------------

மகாபாரத்தில் நகலனின் மகன்... சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்... விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்... அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்... விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்... அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி... அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)

பின்னர்...
நகுலனின் மகன்... மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்... தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே... விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு... இளமையைப்பெற்ற நகுலனின் மகன்...
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்...

இவர்களிலிருந்தே யாதவர்களும்... துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது... தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)

யூதர்களின்... நூலின் படியும்...
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை... பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன... நீண்ட கால்த்துக்கு பிறகு... மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்... அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்... இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)

இந்த ரெண்டிலயுமே... ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது...

இந்த யூதர்களின் "தோரா" நூல்...

எகிப்தில்.... அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரம்... மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி... எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்... நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
--------------------------------------------------------------------------------------------
ஆகவே...
இதன் படி பார்க்கும் போது...
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே... எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே... லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்... இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)

ஆனால்... பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்... லெமூரியா திடீரென அழிய... எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)

மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது...
அதாவது... யூதர்களின் தோரா... எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்... எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்... எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே... தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் "பழைய ஏற்பாடு" என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்...
--------------------------------------------------------------------------------------------
ஒரு ஒப்பீட்டுக்கே பதிவு நீண்டு விட்டது...
அடுத்த பதிவில்... சேர்,சோழ,பாண்டிய நாடுகள் என்றால் என்ன...லெமூரியாவில் இறுதியாக வாழ்ந்தது யார்...
போன்ற சில நிரூபிக்க பட்ட, படாத வரலாற்று சம்பவங்களை பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------

21 comments:

  1. woooooooooooooooooowwwwwwwwwwwwwwwwwwwwwwww
    nyc template !!!!

    where u got it?

    ReplyDelete
  2. Intresting post!!!!!! :-)

    ReplyDelete
  3. tnx... Anonymous...
    enna nakkala???
    Blogger la irukkirathu thaan...
    Header ennathu... :)
    ---------------------------------------
    tnx da... Dileep... :)
    ---------------------------------------
    tnx Mayuri...

    ReplyDelete
  4. தமிழீழம் வேண்டும்23 May 2010 at 14:34

    தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
    தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
    புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளி
    புன்னகை மலர வேண்டும்.
    வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி
    வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
    சயனைடு எடுத்த கைகள் - இனி
    சாகுபடி செய்ய வேண்டுமே தவிர
    சாகும்படி செய்யக்கூடாது.
    சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மன
    சாந்தத்தோடு வாழ வேண்டும்.
    ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள்
    ஆலயம் நோக்கி நடக்க வேண்டும்.
    வெடிகுண்டு ஏந்திய கைகள் - தமிழ்
    வெண்பாக்கள் இயற்ற வேண்டும்.
    குண்டு விழுந்த கானகங்களில் - குயிலின்
    கானம் கேட்க வேண்டும்.
    ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை - எந்நாளும்
    தமிழினம் போற்றிப் பாட வேண்டும்.
    மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் - இனியாவது
    மனிதம் மலர வேண்டும்.
    தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
    தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.

    ReplyDelete
  5. காட்டுமிராண்டி23 May 2010 at 15:06

    திருக்குறள் போன்ற புத்தகத்தை எரித்து, தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக மாறவேண்டும்.

    ReplyDelete
  6. கருத்து சுதந்திரம்23 May 2010 at 15:11

    கருணாநிதிக்கு தயாளு அம்மாள் மனைவி, கருணாநிதிக்கு ராஜாத்தி அம்மாள் துணைவி. அப்படி என்றால்... தயாளு அம்மாவுக்கு கருணாநிதி கணவர், ராஜாத்தி அம்மாவுக்கு கருணாநிதி யார்?

    ReplyDelete
  7. சார்லி சாப்ளின்23 May 2010 at 16:21

    நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும்.
    போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும்.
    திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும்,
    புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை.





    இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நமது துயரங்களும்தான்.

    ReplyDelete
  8. காதல்23 May 2010 at 16:31

    காதல்....
    என்ற படகில் சயனித்து கொண்டுயிருந்த பொழுது...
    பிரிவு.....
    என்ற சவப்பெட்டியில் மூடி வைத்தாய்....




    என்னை வெறுமையாக்கி சென்றாய்....
    எனினும்,சுவடுகளான சித்திரமாய் இன்றும்,
    என்னுள் உறைந்து இருக்கின்றாய்...
    என் சுவாசக் காற்றே!

    ReplyDelete
  9. நல்லா கஷ்டப்பட்டு திரட்டிருக்கீங்க போல விஷயங்களை.

    ReplyDelete
  10. நன்றி... தமிழீழம் வேண்டும்...
    நன்றாக இருக்கிறது... உங்கள் கவிதை... :)
    ------------------------
    நன்றி... காட்டுமிராண்டி,கருத்து சுதந்திரம்,காதல்...
    ------------------------
    நன்றி...சார்லி சாப்ளின்...
    இது எங்கள் விஷயத்தில் உண்மை... தனி பதிவுதான் போடனும்...
    ------------------------
    நன்றி...
    அப்பிடி எல்லாம் இல்ல... கொஞ்சம் வாசித்து நினைவிருந்ததை புதிதாக வாசித்ததுடன் சேர்த்து எழுதுறன்... :)

    ReplyDelete
  11. எல்லாமே ஹிட்டு கலக்கல் . தேடி எழுதும் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் .
    கடைசீல அணுகுண்டால அழிஞ்சது எண்டு ஒரு அணுகுண்டை தூக்கி போட்டியல் ...அது தானே எங்களுக்கும் நடக்க போகுது ..
    ****************************************
    கேவலமான கமெண்ட்ஸ் அது தான் எங்கள் தமிழ் நாகரிக வளர்ச்சியின் உச்ச கட்டம் ... திருத்த முடியாது சிலதுகளை ...

    ReplyDelete
  12. நன்றி...S.Sudharshan...
    ///கேவலமான கமெண்ட்ஸ் அது தான் எங்கள் தமிழ் நாகரிக வளர்ச்சியின் உச்ச கட்டம் ... திருத்த முடியாது சிலதுகளை ...///
    உண்மைதான்... அந்த சுறா விமர்சனத்தை நான் எடுக்காட்ட... அவர் இப்படித்தான் போடுவாராமாம்... மெயில் பண்ணி இருக்காரு... :)

    ReplyDelete
  13. என்ன மச்சி புது பதிவுகள் ஒன்றும் இல்லை. எப்பொழுது அடுத்த பதிவு?

    ReplyDelete
  14. நன்றி...ruban...
    கொலிஜ்தான் லேட் ஆக்குது... :)
    லெமூரியா அடுத்த பகுதி அடுத்த கிழமைதான் எப்படியும் போட ஏலும்... :(
    ஏலியன்ஸ் படிக்கலயா? :O

    ReplyDelete
  15. அசத்தோ அசத்து
    பிரமாதம்

    ReplyDelete
  16. Am new to this blog, where is the tenth part for this particular topic.you wrote it or Yet to write???

    ReplyDelete
  17. உங்கள் முந்தைய லெமூரியா பதிவுகளில் பல நல்ல பின்னூட்டங்கள் இருந்தன... நிறைய கருத்துப் பகிர்வுகள் இருந்தன.....

    ReplyDelete
  18. அருமையான பதிவுகள்!தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்!படிக்க படிக்க கண்களில் கண்ணீர் பெருகியது. அதில் சந்தோஷமும், நமது இனத்தின் இன்றைய ஆங்கில மோகத்தை நினத்து வருத்தமும் கலந்தது! நமது இதிகாசங்களை நம்பாமல் இருந்த நான், என் நண்பன் மூலமாகவும், தங்கள் லெமூரியா கட்டுரையை படித்த பிறகும் நம்புகிறேன். சாம வேதத்தில் குமரி கண்டத்தை பற்றி கூறியுள்ளதாக எழுதி உள்ளீர்களே, ஏதேனும் அதுபற்றிய தகவல் இருக்குமா? லெமூரியாவிலிருந்து திராவிடர்களும், அட்லாண்டிஸிருந்து ஆரியர்களும் வந்ததாக எனக்கு ஒரு தகவல் கிட்டியது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன சகோதரா?

    ReplyDelete
  19. நன்றி...blaek :)
    -----------------------------------------
    நன்றி...Anonymous :)
    இன்னும் எழுதலை... இன்னும் மேலதிகமாக வாசித்துவிட்டு எழுத நினைத்தேன்.. பின்னர், வேறு பதிவுகள், பாடசாலை வேலைகள் காரணமாக எழுதவில்லை... எழுதுவேன் விரைவில்... :) ( feb குள் எழுதுவேன் பலது... :)
    -----------------------------------------

    நன்றி...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி :)
    நீங்கள் சொல்வது விளங்குகிறது... எல்லாம், குறிப்பிட்ட ஒரு நபரின் வேலைகள்தான்... சுறா படம் பற்றி நான் விமர்சித்தது பிடிக்கவில்லை அந்த பதிவு நண்பருக்கு.. :) அத்துடன் எனது எழுத்திலும் தொய்வு இருக்கலாம்.. :)
    -----------------------------------------

    நன்றி... cap tiger :)
    நன்று உங்கள் வருகைக்கும்.. :) ஆம், எல்லாமே பொய்கலாக்கப்படுகின்றன.. :(
    நீங்கள் கேட்ட சாமவேதம் பற்றி விரைவில் எழுதுகிறேன்...
    மற்றையது எனக்கு தெரியாது... தேடி வாசித்து எழுதுகிறேன்.. :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected