Total Pageviews

Saturday 1 May 2010

ஒப்பற்ற காதல் காவியம்...( :'( )

ஒப்பற்ற காதல் காவியம்...


அனைவரும் படிக்க வேண்டிய‌ ஒப்பற்ற காதல் காவியம்...
---------------------------------------------------------------------------------
ஒரு அழகான கிராமம்...
அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை....அழகென்றா அப்படி ஒரு அழகு... (Y)

( வழமை போலவே...) அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்... சந்து பொந்துகளிலெல்லாம் காதல்... வளரந்தது...
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் (வழமை போலவே...) அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது... :(
இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து... ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.... உடனே ஊரே சேர்ந்து பதறிக்கொண்டு காதல் ஜோடியைத் தேடியது... இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை... :S

அதன் பிறகு அவர்கள் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் " நாங்கள் உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறோம்... தயவுசெய்து திரும்பிவாருங்கள்..." என்று விளம்பரமும் கொடுத்தனர்...அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். :)

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லொறி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்... :'( ( இது கொஞ்சம் வித்தியாசம், ஏனென்றா இப்போதெல்லாம்... ஹீரோ மீது லொறி மோதி லொறி நொருங்கி போறமாதிரித்தான் கதை இருக்கும்.../// விஜயகாந்த் படம் பாக்காதவர்கள் மன்னிச்சு கொள்ளுங்க... இன்னொரு ஒப்ஸன் இருக்கு... விஜயகாந்தை பிடிக்காதவர்கள் விஜை,விஷால், பரத் போன்ற "தளபதி" கூட்டத்தின் படத்தை பார்த்தால் புரியும்///)
அந்த அதிர்ச்சியால் அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். :'(

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்....
திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். :Zz

இடைவேளை... :|

அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. :O

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது... 3:)

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை. :\

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. 3:) உடனே இவள் பயத்தினால் அலறினாள்... :O :O

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது. :D :P

இதை வாசித்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது...
ஹீ...ஹீ... அதே தான் எனக்கும் தோன்றியது... :@
இது எனக்கு ஃபேஸ்புக்கில் வந்தது... சில பில்டப்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... :D
(யார் எழுதினதோ தெரியா அவரைத்தான் நானும் தேடிட்டு இருக்கன்... :@ )

---------------------------------------------------------------------------------

15 comments:

  1. அடிங்..கொக்கமக்கா..

    ReplyDelete
  2. டேய்..டேய்..இதெல்லாமாடா காதால் கதை !நானும் சுவாரசியமாக‌குந்தினால் இது கடியால்லடா இருக்கு! வளாகம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு இப்புடி வேறு கடிக்கணுமா...ஆ...ஆ...ஆ..ஆஆஆ....(இது நாயகன் கமல் ஸ்டைல்)

    ReplyDelete
  3. நன்றி... Anonymous...
    Enga poka? :P
    ---------------------------
    நன்றி...viruman
    ஹீ...ஹீ...

    ReplyDelete
  4. மவனே நீ மட்டும் என்ற கையில கிடைச்சா எண்டு வை. நானும் ஒரு நல்ல காதல் கதை எண்டு வாசிக்க ஆரம்பிச்சன். பறுவாயில்லை, நல்லாகவே எல்லோரையும் ஏமாற்றிவிட்டியள்.

    ReplyDelete
  5. நன்றி...திருஷ்...
    ஹீ...ஹீ... :D

    ReplyDelete
  6. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm!!!!!!!!!!!!!!!!! so sad olunga oru true love stotry elutha try pannunga!!!!!!!!

    ReplyDelete
  7. tnx Anonymous...
    mmm... aw.. try pannanum... athukku muthal kanakka elutha irukku... :(

    ReplyDelete
  8. karthik 6 th std8 May 2010 at 10:29

    ஒப்பற்ற காதல் காவியம்...சந்து பொந்துகளிலெல்லாம் காதல்... முடியல்ல ஆவ்வேய்

    ReplyDelete
  9. tnx...karthik 6 th std(???)...
    he...he... build-up thaane...

    ReplyDelete
  10. அடங் கொய்யாலா....
    என்ன எது. ஏன் ? எப்படி? எதுக்கு ? என்னாச்சு?

    ReplyDelete
  11. ஆரம்பத்தில் கௌரவம் படத்தோட கதைனு நினைத்துப் படித்துக் கொண்டிருக்கம் போது, திருப்புமுனையாக சம்மதித்த மக்களால் சந்தோசமடைந்த எனக்கு விபத்து வருத்தத்தைக் கொடுத்தது. தேவதையின் தோற்றம் மறு ஜென்மத்தை எண்ண வைத்துக் கொண்டிருக்கம் போது, கறை நல்லது விளம்பரம்.... அய்யோ ராமா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி'னு தோண வச்சுருச்சு.(வேர என்ன பண்றது,கதைய இங்கல சொல்லிருக்கிங்க)

    ithil nadigarkalai vaithu nakkal vera......

    ReplyDelete
  12. ஆரம்பத்தில் கௌரவம் படத்தோட கதைனு படித்துக் கொண்டிருந்தவனுக்கு திருப்புமுனையாக மக்களின் சம்மதம் சந்தோசத்தைக் கொடுத்தது. எதிர் பாராத விபத்து வருத்தத்தைக் கொடுத்தது.தேவதையின் தோற்றம் மறு ஜென்மத்தைக் என்னிக் கொண்டிருக்ககும் போது, கறை நல்லது விளம்பரம்.... அட ராமா இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா சாமி'னு தோண வைத்தது(வேர என்ன பண்றது,கதைய இங்கள சொல்லிருக்கிங்க)

    ithula nadikargalai vaithu nakkal's vera.......

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected