Total Pageviews

Friday 14 May 2010

ஐயோ... ஐயோ...( லேட்... சுர்ர்ர்ர்றா...விமர்சனம்)

சுறா (விமர்சனமாமாம்)
--------------------------------------------------------------------------------
(தொடர்ச்சியாக 87 லிங் தமிழிஸ்ல பப்ளிஸ்ஸாச்சு... நேற்றையான் பப்ளிஸாகல... :(
பதிவு போர் அல்லது நான் இந்திய நேரம் அதிகாலை 3 மணிக்கு போட்டது அப்ஸெட்போல... ஸோ சாட்... :( )
--------------------------------------------------------------------------------
நேற்றுத்தான் அந்த அசம்பாவிதம் நடந்துது... அப்பவே ஃப்ரென்ட்ஸ் சொன்னாங்க வேணாம்டா என்று... நாந்தான் கேக்கல... 
அது தான்... நேற்றுத்தான் சுறா என்கிற காட்டூன் பார்த்தேன்... சப்பா.... முடியல...
சரி... ஏதோ கொஞ்சம் பாத்தத விமர்சனம் என்கிறபேர்ல எழுதுறன்... லேட்தான்... ஆனாலும் என்ன செய்ய... நடக்கிற கூத்த சொல்லித்தானே ஆகனும்... :)
--------------------------------------------------------------------------------

ஓப்பினிங் சீன்... எதிர்பார்த்தமாரி இல்லை... ஆனா சுப்பரா இருந்துது...
யாழ் குப்பம் மீனவர்கள் 60 பேர்... கடலுக்கு போய் திரும்பாத்தால ஊரே அல்லோல கல்லோலப்படுது... பிறகு, ஒரு மாதிரி கடல்பாதுகாப்பு படை எல்லாரையும் காப்பாத்திட்டாங்க.
இங்கதான்... அந்த கொடுமையே நடக்குது...
ஒரே ஒருத்தரை காணல என்று ஊறே கலவரமாகுது... அப்போதே... சுறா தம்பி பற்றி ஒருத்தர் ஓவர் பில்டப் கொடுக்கிறார்...
அதைக்கேட்ட... அதிகாரி "புதியகீதை" பாணியில் இவ்வளவு நல்லவன் சாகமாட்டான் என்று டயலொக் முடிக்க...
கடலுக்குள்ள இருந்து நம்ம ஹீரோ வாராரு... ( அந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பாத்தாதான் தெரியும்... தயவு செய்து காசப்பாக்காம‌ பாருங்க... ஹொலிவூட்ல கூட அப்படி ஒரு சீன் இருக்கிறது அரிது...)
உடனே... கமராவைப்பாத்து ஒரு சிரிப்பு... பேந்து ஒரு பாட்டு...
(அவ்வளவு தூரம் நீந்தி வந்தவருக்கு ரயேட்டே இல்லையா என்கிற கேள்வி எழக்கூடாது... என்கிறதுக்காகத்தான் முதல்லயே 1000 யாணை பலம் என்று ரெக்னிக்கா சொல்லிட்டாங்க... இப்படி பல இடத்தில இயக்குனர்ட திறமை மிளிருது.)

இனி கதைக்குள்ள போவம்...

நம்ம சுறாத்தம்பி ( தளபது விஜய்) ட ஆசை, கனவு, இலட்சியமெல்லாம்... தங்கட குப்பத்து மக்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொடுக்கனும் என்கிறதுதான்... ஊர் மக்களிட செல்லப்பிள்ளையும் அவர்தான்...

வில்லன்... வழமை மாதிரியே பெரிய ரொவ்டி அரசியல்வாதி... இந்த குப்பத்து மக்கள் இருக்கிற இடத்துல அவருக்கு ஒரு கண்... அதுக்கு குறுக்கா நிக்கிற விஜய்யை போட்டுத்தள்ள ரைபண்ணுறார்... வழமை மாதிரியே... இதிலயும் போனவங்க கட்டுப்போட்டு, பெயின்ட் பூசிட்டு திரும்பி வாறாங்க... வில்லனுக்கு அப்பதான் தெரியுது... நம்ம ஹீரோட பலம்...

பேந்து... ஊருக்கே தீ மூட்டுறார்...
அங்கேயும்... விஜயை மட்டும் கானல...
ஊரே அலறுது... கத்துது... எல்லாரும் சோகமா இருக்காங்க... ( ஏன் இந்த ஸீன் என்றே விளங்கல... ஒரு ஃஃபீலிங்ஸிம் வரல... நம்மளுக்கு தெரியாதா ஹீரோ... அதுவும் தளபது சாகமாட்டார் என்றுறது... = புதியகீதை, குருவி எல்லாம் மறக்கக்க கூடிய சீனுகளா???... இது தெரியாம இயக்குனர் இந்த இடத்தில பிழைவிட்டுட்டார்...)
வில்லன் ஊர் சனத்துக்கு காசைக்கொடுத்து வேற இடத்துக்கு சிஃப்ட் பண்ணிற காரிய்தில ஈடுபட்டுட்டு இருக்க...  நாம எதிர்பாத்தமாதிரியே... நம்ம ஹீரோ... நெருப்புக்க இருந்து ஐயனார் சிலை (?) ஓட கிளம்புறாரு...  ( இது விஜயகாந்த்ட நரசிம்மா சீனை நினைவூட்டல... ) வசனம் பேசுறாரு... வில்லனோட நேரடியா சவால் விடுறாரு...

பேந்து...
புது ரெக்னிக்கை பயன்படுத்தி... வில்லனுட 100 கோடியை ஆட்டையப்போடுறார்...
வில்லன் கடுப்பாகி பெரிய லெவல்ல மோதுறார்...
கடசில விஜய் வீடுகட்டினாரா... பால் காச்சினாரா... என்கிறத விஜய் பட பாணில சுவாரஷ்யமா சொல்லி இருக்கார் இயக்குனர்...
( ஆனாலும் ரொம்பத்தான் திறமை...தைரியம்... இந்த வித்தியாசமான கதையை ஜோசிக்க திறமை வேனும்... அதை புரொடியூஸர்ட சொல்லி ஓ.கே வாங்கி... ரசிகர்களிக்கு விருந்தளித்து இருக்கார்னா பாருங்களேன்...)

அவ்... ஹீரோயினும் இருக்காங்க...  தமன்ன என்று நினைக்கிறேன்... ஏனென்றா அவங்கதான் பாட்டுக்கெல்லாம் வந்து போறாங்க...

அடுத்து... படத்தில குறிப்பிட்டு காட்டக்கூடிய சில விடையங்களை பாக்கவேண்டியது கடமை...

* நீதி மன்றத்தில் விஜய்... கேட்கும் கேள்வி உண்மையிலேயே ஜோசிக்க வேண்டியடியது...
"ரிமான்ட்ல போட்டு, பிறகு நிரபராதி என்று நிரூபிக்கப்படுறவனுக்கு என்ன தீர்வு?" அது சுப்பர்...
பலர் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்... கேள்விப்பட்டேன்...

இந்த சீனில கூட... விஜய் கோட்டில நடந்துக்கிறவிதம் சுப்பர்... என்ன ஒரு பிரமாதமான நடிப்பு... அந்த குரலை மாற்றி நுனினாக்கால பேசுற ஸ்டைலே தனி... ரியாக்ஷன், முக பாவணை எல்லாம்... வடிவேலு ஏற்கனவே படத்தில நடிக்கிறார் என்றத மறந்ததால வந்த குழறுபடி...

*முடி மயிரைக்கொண்டு போய்... வில்லனை ஏமாத்தும் காட்சி சுப்பர்...
ஆனா... பெட்டியை செக் பண்ண முதல் ஏன் நம்ம ஹீரோ முகத்தில அவ்வளவு கலவரத்தை வெளிப்படுத்தினார் என்று விளங்கல... ஒரு வேளை எங்கல ரென்ஷனாக்கி படத்தில ஒன்றிப்போக வைக்கவோ தெரியல...

*சண்டைக்காட்சிகள் சுப்பர்... ஹொலிவூட் ரகம்... அதுக்கேற்ற எடிட்டிங்..
லொஜிக்கே மிஸ்ஸாகல... பறந்து பறந்து அடிக்கிறாரு... சிலோமோஷன்ல அடிக்கிறாரு... சமீபகால விஜய் படங்கலை விட சுப்பர்...

*வில்லனுக்கு பக்கத்தில இருக்கிறவர்கூட நம்ம ஹீரோ புகழ் பாடுறார்னா பாருங்களேன்...

*விஜய்ட டான்ஸ் சுப்பர்... :) அசைக்க ஏலாது என்கிறத நிரூபிச்சு இருக்கார்.
*வடிவேலு... என்னென்றுதான் இந்த மனுசனால மட்டும் முடியுதோ... தனி ரக்தான் ஆனாலும் நல்லா இருக்கு...
*பின்னனி இசை பரவாயில்லை... ( விஜய் கூட்டத்தோட நடக்கும் போதெல்லாம்... ஓஹோஹோ.... என்று போடுறது... அலட்டல்... இப்படி ஸீனிருக்கிற எல்லா படத்திலயும் இதேதானே வருது... )
*வில்லன்...  நல்லா இருக்கார்... அடிக்கடி ஓவர் சவுன் கொடுத்து... கேவலமாகிறார்
*எடிட்டிங் நைஸ்... ஆனா, படத்துக்கு ஓவர்...
*டைரக்சன்... ஹீ...ஹீ...
*பாடல்கள்... பிடிக்கல...

***
யாழ் குப்பம் என்கிற பேரையும்... சில வசனங்களையும் வைத்து... வெளி நாட்டு தமிழர்களை தன்பக்கம் இழுத்து இருக்கார்...
பஞ்ச் டயலொக்கெல்லாம்... ரசிக்க கூடியதா இருக்கு... ஆனா, வெட்டிப்பேச்சு...
டி.ஆர்... மாதிரி ஜோக்கா பேசுரார்...
விஜய் இப்படியே போனா...  விரைவில... இவரமாதிரி பேசினாலே... அது ஜோக்காயிடும்...
தேவை இல்லாமல்... சீரியஸான சீன்கள்ள கண்ணை சிமிட்டி, உடம்பை வளைத்து ரசிகர்களை குசிப்படுத்த பொம்பிளைங்க மாதிரி நடிக்கிறதை குறைத்து இருக்கலாம்...
வேட்டைக்காரனுக்கு இது ஓ.கே... :)
ரசிகர்களின் தரத்தை குறைவாக மதிப்பிடுவதுதான்... இவ்வாறான, அரைச்சமாவையே... திரும்பி திரும்பி அரைத்துக்கொண்டிருக்க காரணம்... :(

வேட்டைக்காரனுக்கு இது ஓ.கே... :)
***
-------------------------------------------------------------------------------- 
ஆனா... ஒன்று இனி நான் ரொம் அன்ட் ஜேரி பார்க்க மாட்டேன்...
பேந்து நம்ம தளபதி(கள்) ட படம் பார்க்கக்க ஒரு திறில்லிங் இல்லாம போய்டும்... :D
--------------------------------------------------------------------------------

24 comments:

  1. ha ha!!

    ///ஆனா... ஒன்று இனி நான் ரொம் அன்ட் ஜேரி பார்க்க மாட்டேன்...
    பேந்து நம்ம தளபதி(கள்) ட படம் பார்க்கக்க ஒரு திறில்லிங் இல்லாம போய்டும்... :D///

    Good!!!

    ReplyDelete
  2. ha!!!ha!!! super!!!
    naan ninachatha neengal eluthidingal!!!

    ReplyDelete
  3. எங்க இளைய தளபதி விஜய் கடலில் கிலோமீட்டர் கணக்கில் சுறாவாக நீந்தியிருக்கிறார்.... நீங்க என்னையா 45 நாளில் செவ்வாய் கிரகம் போவது... அடுத்தப் படத்தில் தன் தங்கை திருமணத்துக்கு தடையாக இருக்கும் செவ்வாய்(தோஷத்தை) கிரகத்தை விஜய் எதிர் திசையில் சுத்த வைக்க புறாவாக மாறினால் நாலரை நாட்களில் செவ்வாய்க்கு சென்று விடுவார்........

    ReplyDelete
  4. எங்க இளைய தளபதி விஜய் கடலில் கிலோமீட்டர் கணக்கில் சுறாவாக நீந்தியிருக்கிறார்.... நீங்க என்னையா 45 நாளில் செவ்வாய் கிரகம் போவது... அடுத்தப் படத்தில் தன் தங்கை திருமணத்துக்கு தடையாக இருக்கும் செவ்வாய்(தோஷத்தை) கிரகத்தை விஜய் எதிர் திசையில் சுத்த வைக்க புறாவாக மாறினால் நாலரை நாட்களில் செவ்வாய்க்கு சென்று விடுவார்........

    ReplyDelete
  5. Karthik, விஜய் செவ்வாய்க்கு போவதுமட்டுமல்ல சினிமாவை விட்டே போனாலும் எங்களுக்கு சந்தோஷமே! நடிகனுக்கு உள்ள நடிப்பு, அழகு நல்ல மனம் இவனிடம் இல்லை.

    ReplyDelete
  6. படம் பாக்க தெரியாதவனும் ,ரசிக்க தெரியாதவனும்
    விவர்சிக்க தெரியாதவனும் எழுதுறாங்க ....................
    வந்துடங்கல் எழுதுறதுக்கு .
    மர்டவர மதிக்க பழகணும்
    ஒன்னும் தெரியாதவன் எல்ல்லாம் இருகிரங்கள் .............
    நீங்கள் எலாம் என்னத்த கிழிக்க போறிங்கள் உங்க லைப் ல..

    ReplyDelete
  7. அன்ன வனக்கம் நன் சுதொடு சுகம இருகிரென். நின்கல் என்ன மதிரி. சரி மட்டெருக்கு வரென் படம் பர்த படம் பர்த மடொட இர்ருகொனம். பிரகு என்ன comments சொத சபிடோம படுதொம என்டு இருகொன்னும் சரிய நன் ரொம்ப கெட்டவன். ஹ ஹ ஹ ஹ ஹ ஹ.ஆனால் ஒன்ட்ரு FRANCE'il Lachapelle பக்கம் வரத

    ReplyDelete
  8. வணக்கம்..மக்களே!பார்த்தீர்களா வளாகத்துக்கு வரும் மிரட்டல்களை! கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வாய்வீச்சு! அதிலும் ஒருத்தர் பிரான்சில் அங்கு வராதே என்று சவுண்டுவேறு! அது வேறு ஒண்டுமில்லை இவர்கள் முதலில் சிங்களவனுக்கு சவுண்டு விட்டாணுகள்,அவன் இவன்கள் தலைவணுக்குமாக சேர்த்து பெரிய ஆப்பாக வைச்சுப்போட்டான்!ஐரோப்பாவில கவணை ஈர்ப்பு போராட்டம் கோவண ஈர்ப்புபோராட்டம் அது இது எண்டு கோமளித்தனம் செய்து முடிச்சுட்டாங்கள்,இப்ப நெட்டுக்குள்ள வந்து சவுண்டுப்போட்டு பாக்கிறாங்கள், இது தாணப்பா சொல்லுறது"கல் தோண்றா மண் தோண்றா காலத்தே முன் தோண்றிய மூத்தகுடி" எண்று அந்த கல்லையும் மண்னையும் தான் மண்டைக்குள் இப்பவும் வைத்திருக்கிறார்கள் போலும்!!ஹா..ஹா.. விறுமனுக்கு இனி தாழிப்புதாண்டா!!!!!

    ReplyDelete
  9. நன்றி... Anonymous & Suresh Darshi...
    -----------------------------------
    நன்றி... karthik...
    இந்தா நீங்க இப்படி எல்லாம் பப்ளிக்கா சொல்லக்கூடாது...
    பிறகு... இந்தையே சுட்டு அடுத்த படத்தில சீனாக்கிடுவாங்க... :P
    ----------------------------------
    நன்றி... Haranni...
    ----------------------------------
    நன்றி.... Anonymous 1...
    ஹா...ஹா... படம் பாத்துட்டு பொறுக்க முடியாமத்தான் எழுதுறம்...
    குருவி, வேட்டைக்காரனுக்கு எழுதாம பொறுமையா இருந்தம்தானே.... அதுக்கும் ஒரு எல்லை இருக்கு...

    விஜய்யை நான் மதிக்கல என்று எப்படி சொல்லுறிங்க... :O
    அதுக்கான்டி... அவர் என்னத்தையும் செய்வார்... ஆ...ஊ நு பாராட்ட நாங்க என்ன முட்டாளுங்களா???

    ஹா...ஹா... அப்பனா நடிகன் மட்டும்தான் கிழிப்பானா?... அல்லது சில பேர் மாதிரி என்ன செய்தாலும் ஆமா போட்டு பாராட்டுறவன் தான் கிழிப்பானா...
    ஹீ..ஹீ... நாங்க கிழிக்க மாட்டம் சேர்/மெடம் ... உருவாக்குவம்... :)
    -----------------------------------
    நன்றி... Anonymous 2...
    எவ்வளவுக்குதான் பொறுக்கிறது... உங்க அளவுக்கு பொறுமை இல்லப்பா...
    சீ ஆ... வெறுட்டுறிங்க போல... :P
    -----------------------------------
    நன்றி... Anonymous 3... ????
    -----------------------------------
    நன்றி.... viruman...
    ஆ... இதிலயும் அரசியலா... இதெல்லாம் ஓவர்...
    ஒரு இனத்திட வேதனையை புருஞ்சுக்கனும்...

    ReplyDelete
  10. Can Indian govt do one thing.Ask that killer Kasab to see this film 10 times then he will die automatically by suicide .Govt keep some rope near by Kasab

    Eppadi Tirupur idea

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. நன்றி....Abiramii Fashions
    ஹீ...ஹீ... சுப்பர் ஐடியாதான்... :P

    நன்றி... Anonymous :D

    ReplyDelete
  13. ஒரு வேண்டுகோள்...
    இந்த பதிவு ஒரு பட விமர்சனம் மட்டுமே... (அதுவும் எனது பார்வையில்)...
    ஆனால்... இறுதியில்... இது அரசியல் ( ஈழப்பிரச்சனை) ஆகிவிட்டது...

    கருத்து சுதந்திரத்துக்காகத்தான்....அனைவரதும் கருத்துக்களையும்... என்னவாக இருந்தாளும் அழிப்பதில்லை...
    ஆனால், நேற்றைய தினம்...
    தமது கருத்துக்களில் தகாத, கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுக்கு சம்பந்தமில்லாமல்... போட்டு விட்டார்கள்....
    இனி... இப்படி நடந்துகொள்ள வேண்டாம்... என கேட்டுக்கொள்கிறேன்....

    இது தான் அவர்களிடையே நடந்த விவாதமாம்... ( கருத்துக்களை பரிமாறுங்கள்... ஆனால், தகாத வார்த்தைகள் வேண்டாமே... இந்த புளொக் முக்கியமாக விஞ்ஞான, வரலாற்றை கொண்டே எழுதுகிறேன்... :) )

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<
    Anonymous said...
    விருமன் அண்ணா வணக்கம். வஅஜய் அடக்கி பேசு இல்லாட்டி வெட்டி நூறு பங்க போடுவேன். நீ ஒரு இந்தியன் உண்ட இந்திய குணம் அப்படி விஜய் ஒரு பொருக்கி (போகிரி,) அவனும் ஒரு இந்திய ****. நீங்கள் ஒரு இந்திய *****, *****************************************************பிரபாகரன் வாழ்க.
    18 May 2010 19:08
    Anonymous said...
    மீண்டும் வணக்கம் விருமன். நாங்கள் கோமணம் கழட்டி போராட்டம் நடத்தினால் என்ன கோமணம் கழட்டாமல் நடத்தினால் உன்னக்கு என்ன. *****************************************************
    18 May 2010 19:22
    Anonymous said...
    அந்த நபர் சொன்ன மாதிரி நீங்கள் ஈழ போராட்டத்தை தப்பாக சொல்ல கூடாது. அது ஒரு புனிதப் போராட்டம் அதனால் அவர்கள் கோமணம் கழட்டி ஒரு நாளும் செய்ய மாட்டார்கள் உங்கள் இந்தியன்ன்தான் பொம்பளைய வைத்து போராட்டம் நடத்துவான் (உதாரணம் :- நித்தியானந்தா சுவாமி ராதல் கேஸ், சாஜி பாவா கஞ்ச கேஸ் ) இந்தியன் *******
    18 May 2010 19:31
    viruman said...
    பாத்தீர்களா மறுபடியும், விறுமன் சொறிந்ததும் இவர்கள் பொங்குவதை!இவர்களுக்கு பயிர்ச்சி பணம் இருப்பிடம் எல்லாமுமே கொடுக்கும்போது இந்தியன் ***** தெரியவில்லையா? அதுக்குப்பிறகு ஐபிகேஎஃப் உடன் சொறிந்து பிறேமதாச விடம் ஆயுதம் வேண்டி நக்கிவிட்டு பிறேமதாசா வையே போட்டுத்தள்ளி,4 வது பெரிய வல்லரசை விரட்டினோம் என்று பீத்தினார்கள்,அந்த நேரம் பிரேமதாசா காப்பாற்றி விட்டார் உங்கள் தலைவரை இல்லை என்றால் என்றே நித்திகைக்குளத்தில் வைத்து வடக்கத்தயான் தீபாவளி கொண்டாடியிருப்பான்.பிறகென்ன செய்தார் மேதகு..ராஜீவுக்கு பொட்டலம் குடுத்தார்.பிறகு வெக்கமே இல்லாமல் இந்திய அரசிடம் மடிப்பிச்சை ஏந்தினார்கள் ஒன்றும் ஆகவில்லை என்றதும் இப்ப வடக்கத்தியான் ****************? சாதாரன போராளிக்கு இருந்த துனிவு துளியும் இல்லாமல் கொத்து வேண்டி இறந்துள்ளாரே உங்கள் தலைவர் ஏனப்பா கழுத்தில் சயனைடு இல்லையா அல்லது சுமார்30 வருடத்துக்கு முன் போட்டதால வீரியம் இல்லாமல் போயிட்டுதா? அதுசரியப்பா இவ்வளவு பேர் இவ்வளவு உணர்ச்சியையெல்லாம் வைச்சுக்கொண்டு தலைவருக்கு தோள் கொடுத்திருக்கலாமேப்பா! நெட்டில் விடும் வார்த்தைகள் செந்தமிழடா!!! இறால் தனது தலைக்குள் மலம் வைத்திருக்கிறபோல இங்கும் சிலரது தலைக்குள் அது தான் இருக்குபோல....
    18 May 2010 20:35
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<

    இனி இப்படி நடக்காது என்று நம்பிறன்...

    ReplyDelete
  14. lishanthmithra19 May 2010 at 12:31

    omg :O !!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  15. enakku intha vimarsantha vida

    comments pakka pidichirukku..............
    (yarum yaraum punpaduthira mari eluthathinga please )

    nalla vidayankala maddum eduthuganga ..........
    ethachum pilaya iruntha thakatha mathiri pesathinga............

    thx

    ReplyDelete
  16. tnx...lishanthmithra & Anonymous... :)

    ReplyDelete
  17. நான் இப்படிஜான comments களை பார்தவுடண்ணெய் ஒன்று இந்த siteய் மூடிவிட்டு போய்டுவேன் இல்லைஜோ துக்கு போட்டு நாக்கு தொங்காமல் சாவேன். நான் நினைக்கிறன் இந்த valakam திறந்தவுடநெய் மானம், ரோசம் எல்லாம் திறந்துவிட்டுதான் இந்த valakathai திறந்திருகிரர்கள் போலும் சரி நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  18. நன்றி... Anonymous...

    பேர் போட தைரியமில்லாத உங்களை போல ஆக்கள் இருக்கும் வரைக்கும்...
    ஆரும் உருப்பட ஏலாது....
    நீங்கள் எல்லாம்.... நீங்களும் முன்னேற மாட்டிங்கள்...
    முன்னேறுறவனையும் விடமாட்டிங்கள்.

    நீங்க இரண்டையுமே செய்யவில்லையே...
    சாவன் என்று பில்டப் கொடுத்து காலத்தை ஓட்டுற ஜாதியா நீங்க... :P

    நான் என்ன செய்றன் என்கிறதுதான் என்ற கவலை... உங்களைப்போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல...

    (ஏனென்றா.... நீங்களும் முன்னேற மாட்டிங்கள்... முன்னேறுறவனையும் விடமாட்டிங்கள்.)

    ReplyDelete
  19. நன்றி... Anonymous...

    மொமென்டில் பேர் போட தைரியமில்லாத நீங்கள்... துணிந்து தற்கொலை செய்ய போறிங்களா??? ஜோக்கா இருக்கு...
    இப்படி பில்டப் கொடுத்தே வாழ்க்கையை ஓட்டுற ஜாதியா நீங்க???

    நான் என்ன செய்றன்... என்கிறதுதான் என்ற கவலை... உங்களைப்போன்ற சிலர் என்ன சொல்லுறாங்க என்றதில்லை...
    ஏனென்றா... உங்களை போல ஆக்கள்....
    தாங்களும் முன்னேற மாட்டாங்க... முன்னேறுறவனையும் விடமாட்டாங்க... :)

    ReplyDelete
  20. வணக்கம்! விறுமனை திட்டுவதை விடுத்து வளாகத்தை திட்டுகிறார்கள்,இவர்கள் அறியாமையை என்னசொல்ல! ஓகே! வளாகத்தாரே என்னால் உங்கள் தளத்துக்கு பாதிப்பு வேனாம், கனிஉள்ள மரம் கல்லடி படலாம் ஆனால் இவர்கள் விட்டால் வளாகத்துக்கு எதிராக‌தற்கொலைத்தாக்குதலே செய்வார்கள் போலுள்ளது,அதனால் இனி விறுமன் வளாகத்தில் விமர்சிப்பதை விடுகிறேன்.முடித்தால் இந்த சில மக்குகளுக்கு சிந்திப்பது எப்படி என்ற மாதிரியான பதிவுகளை விடுங்கள் ஒரு முயர்ச்சியாக இருக்கட்டுமே(கல்லில் நார் உரிப்பது போல் தான் இருக்குமென நினைக்கிறேன்)

    ReplyDelete
  21. விருமன் and Anonymous தயவுசெய்து நீங்கள் இந்த commentsகளை தொடரவும் ஏனென்றால் நான் முந்தி Googleஐ தான் எனது தொடக்க பக்கமாக வைத்திருந்தேன் இப்பொழுது நான் இந்த Valakam அதுவும் இந்த சுறா விமர்சன்ப்பகுதிதன் எனது தொடக்க பக்கம். அதுவும் நான் மிகுந்த ஆவலாக இந்த பக்கத்தை பர்கிரணன் so Please try to continue fight with each others. Thank you.

    'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்'

    ReplyDelete
  22. eppady ellam valurankal..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected