Total Pageviews

Tuesday 24 May 2011

ஆண்களே!!! இந்த பெண்ணால் முடிந்தது உங்களால் முடியுமா? - Future News

இன்னும் சிறிது காலத்தில்... இணையத்தளங்களில் நாம் காணக்கூடிய செய்திகளின் தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...
( படங்களுள், தடித்த தலைப்புக்களுக்கும்..  பதிவுக்கும் சம்பந்தமில்லை. )

-------------------------------------------------------------------------------------------
ஆண்களே... இந்த பெண்ணால் முடிந்தது  உங்களால் முடியுமா? (படங்கள் இணைப்பு)

சமீப காலமாக... பல தமிழ் இணையத்தளங்களை பார்க்கும் போது கடுப்புத்தான் எகிறுகிறது.
சுய சிந்தனை இல்லாமல்.. குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தில் இருந்து அப்படியே செய்திகளை சுட்டுப்போடுவதை வழ‌க்கமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும்.. யார் முதலில் சுட்டுப்போடுவது என்று போட்டி வேறு...


வாசிப்பவர்களுக்கு... உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய இந்த இணையத்தளங்கள்... தமக்கு "ஹிட்ஸ்" அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்திற்கொண்டு... பழைய விளம்பரங்களைக்கூட நியூஸாக போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கோழி முட்டையில் இருந்து குஞ்சுவரும் அதிசயம்... (வீடியோ இணைப்பு)

இதில்... இன்னும் ஒரு படி மேலாக போய்...
கேவல‌மான தலைப்புக்களை வைத்து ஹிட்ஸ்களை பெறுகிறார்கள்...
அதிலும்... மருத்துவ‌ரீதியான கருத்துக்களை போடும் போது... அதன் உண்மைத்தன்மை பற்றிக்கருதாது...  ஏதோ ஒருவர் ஆதாரமில்லாமல் எழுதியதை கொப்பி பண்ணி போடுகிறார்கள். இதனால் ஏற்படும் சமூகத்தாக்கங்களை கருதுவதில்லை


பெரும் திருட்டு அம்பலம்...( கமராவில் சிக்கினார் )


இவர்களின் ஆக்கங்களை பார்த்தால்... ஏதோ தமிழ் இனத்திற்கே சேவை செய்து மாற்றத்தை கொண்டுவரப்போகிற போல இருக்கும். ஆனால், செய்யும் காரியங்கள் எல்லேமே... கீழ்த்தரமானவைதான்...
மக்களிடையே புதிய சமுதாய மாற்றக்கருத்துக்களை கொண்டு செல்வதில்லை... அறிவியல் என்ற பேச்சுக்கே பல தளங்களில் இடமில்லை.

புலி போன்ற ஆனால் உருவில் சிறிய உயிரினம்... (நகரப்பகுதியில் இனங்காண்பு)

தமிழுக்கு சேவை செய்யப்போவதாக சொல்பவர்கள்...
அனைத்து தரவுகளையும் தமிழில் பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்... அதை செய்ய மாட்டார்கள். காரணம், அறிவியல்.. சமூகவியல் கருத்துக்களுக்கு ஹிட்ஸ் குறைவாக வருவதே... எனினும் வரும் அந்த கொஞ்சப்பேர்தான் மேம்பட்ட தமிழர்கள் என கருதக்கூடியவர்கள் என்பதை உணருவதில்லை.

முத்தமிடும் போது உதடு திறக்குமா மூடுமா? (ஆய்வுத்தகவல் )

புளொக்ஸிலிருந்து அப்படியே கொப்பி பேஸ்ட் செய்கிறார்கள்...
கஸ்டப்பட்டு தேடி எழுதுபவர்களின் லிங் கூட கொடுப்பதில்லை... அப்படி கொடுத்தால்... நேரடியாக சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அந்த புளொக்களிலேயே சென்று பார்த்து விடுவார்கள் என்ற பயம் தான்.


மொத்ததில்... தமிழில் இயங்கும் பல இணையத்தளங்கள்...  உயர்வான ஹிட்ஸ்களைக்காட்டி, விளம்பரங்களை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இயங்குகின்றன... சேவை, உண்மைத்தன்மை, சமுதாய முன்னேற்றம் என்ற எந்த குறிக்கோள்களுமில்லை.

-------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. .. தமிழில் இயங்கும் பல இணையத்தளங்கள்... உயர்வான ஹிட்ஸ்களைக்காட்டி, விளம்பரங்களை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இயங்குகின்றன.//

    அந்தப்பக்கம் தலைகூட காட்டுவதில்லை.. சீப் பப்ளிசிட்டி . ஒருவித மனநோயாளிக்கூட்டம் னு தோணும்..

    அதே போல பின்னூட்ட கூட்டமும்..

    இருக்கட்டும்..

    நமக்குத்தேவையானதி நாம் எடுக்கலாம் னு பழகிக்கணும்தான்..

    நல்லதும் கெட்டதும் இணைந்தே இருக்கும் இவ்வுலகில்..

    ReplyDelete
  2. முடிவாக நீங்க என்ன தான் சொல்லவரிங்க?

    ReplyDelete
  3. நன்றி...எண்ணங்கள் 13189034291840215795 :)
    ஆம்.. என்றாலும் உண்மைத்தன்மையே இல்லாத விடையங்களை எல்லாம் போடுகிறார்கள் அதான் கடுப்பாகிறது.
    "பில்லேடனின் உடல் கடலில் விழுந்ததாக ஒரு "அட்வர்டைஸ்மைன்டை" போட்டார்கள்...

    நன்றி... N.H.பிரசாத் :)
    பேசாமல்.. அவர்கள் போடுவதை கேட்டு ஃபேஸ்புக்கிலி ஸார்பண்ணுங்கள்.. உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்... சிந்திக்க மட்டும் வேண்டாம் என்கிறேன்... :¨P

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected