Total Pageviews

Monday 10 May 2010

செவ்வாயும்.. மனிதனும்.. நாமும்.. (பகுதி - 03)

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... 100
---------------------------------------------------------------------------------



செவ்வாயும் மனிதனும் நாமும்... தொடரின் இறுதிப்பகுதி இது...

போன இரண்டு பதிவுகளிலும்... செவ்வாயில் உரினங்கள் இருந்தனவா? இப்போதும் இருக்கின்றனவா? என்பதை நிரூபிக்கப்பட்ட சான்றுகள் + எனது கருத்துக்களுடன் சேர்த்து எழுதி இருந்தேன். இன்று, இப்போது செவ்வாயில் உயிரினங்கள் இல்லை என வைத்துக்கொண்டாள்... எதிர்காலத்தில் உயிரினங்கள் உருவாகுமா? என்பதைப்பார்ப்போம்.
---------------------------------------------------------------------------------
ஏதோ ஒரு பேப்பரில்... 



சூரியனின் ஈர்ப்பினால் பூமி கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை நோக்கி நகர்கிறது என வாசித்தேன்.
இது உறுதியாக நம்பமுடியாதுதான்... என்றாலும், சூரியனின் பிரகாசத்துக்கும் ஒளி, வெப்பத்துக்கும் காரணமாக இருக்கும் ஹீலியம், ஹைட்ரஜன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தாக்கமடைந்து ஒரு காலத்தில் முற்றாக அற்றுப்போகும். என விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள், நிரூபித்துள்ளார்கள். 

தற்போது சூரியனின் ஆயுட்காலம் பாதி முடிவடைந்து விட்டதாம். அதாவது சூரியன் தோன்றி 400 தொடக்கம் 500 கோடி ஆண்டுகள் இருக்குமென கணித்துள்ளார்கள். (இங்கு இன்னொரு விடையம்...  இந்துமத நூலொன்றிலும் இதே போன்று 
சூரியன் தோன்றி 465(?) கோடி ஆண்டுகள் ஆகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளதாம். (வேத நூல்களில் ஒன்று என நினைக்கிறேன்.) அது பற்றி பிறகு பார்க்கலாம். )

இன்னொரு இடத்தில வாசித்ததன் படி... எரிந்து முடிந்த நட்சத்திரம் ப்லைக் ஹோலாக மாறும் என வாசித்தேன்.
ப்லைக் ஹோல் எனப்படுவது... அதீத ஈர்ப்பு சக்தியை உடைய பகுதி(?) என கருதப்படுகிறது.

அதாவது, 
நட்சத்திரங்களில் அணுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு பெரிய சக்தி உடன வெடிப்பு ஏற்படுகிறது... அந்த வெடிப்பால் நட்சத்திரம் குழம்பிபோகாமலிருக்க காரணம்... அதன் மையத்திலுள்ள பாரிய ஈர்ப்பு விசையாகும். ( இந்த ஈர்ப்பிட வலிமைதான் நட்சத்திரத்திட சைஸ்ஸையே தீர்மானிக்கிறதாம்.) ஆனால், நட்சத்திரங்களில் எரிபொருளாக தொழிற்பட்டுக்கொண்டிருக்கும்... அணுக்கள் என்றோ ஒரு நாள் முடியும். அப்போதும்... மையத்திலுள்ள ஈர்ப்பு விசை அப்படியே இருக்கும். 
எரிந்துகொண்டிருந்த எரிபொருள் முடிந்ததும்... அந்த ஈர்ப்பு சக்தி ஒரு பெரிய உட்குழிவை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் ஈர்ப்பு சக்தி ஒளியைக்கூட உறுஞ்சும் சக்தியானதாம். (அதனால் தான் இன்னமும் கருந்துளையை படம் பிடிக்கமுடிய‌வில்லை.) :  நான் கருந்துளை பற்றி விளங்கி கொண்டதுட சுருக்கம் இதுதான். நன்றாக அதுபற்றி தெரிந்தவர்கள் கொமென்ட்டில் போடவும்.

சரி... இதுக்கும் செவ்வாயில் உயிரினம் தோன்றுவதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்...

எனது கருத்துப்படி...

தற்போது விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுட்காலம் குறைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதாவது எரிபொருளாக கொஞ்சம் கொஞ்சமா குறையுது. ஆகவே, சூரியனின் ஈர்க்கும் தன்மை அதிகரிக்கிறதாம். 
சூரியனின் ஈர்ப்பே கோல்கள் இருக்கும் இடத்தை தீர்மானிக்கிறது. 
ஈர்ப்பு... கூடக்கூட... கோல்கள் சூரியனை நோக்கி பயணிக்கலாம். 
அப்படி பயணிக்கும் போது... அண்ட வெளியில் கோல்கள் இருக்கு இடங்கள் மாறுபடும். ( இதுக்கு நீண்ட காலம் தேவைப்படும்.)
அவ்வாறு... பல லட்சம் அல்லது கோடியாண்டுகளுக்கு பிறகு... அண்டத்தில் இன்று பூமி இருக்கும் இடத்துக்கு செவ்வாய் வர சந்தர்ப்பமுள்ளது. அவ்வாறு வரும்போது பூமியில் எப்படி உயிரினங்கள் உருவானதோ அதே படியில் உயிரினங்கள் உருவாகலாம். மனிதன் உருவாகுவான். ( நான் முன்னைய பகுதியில் மனிதன் உருவாக சந்தர்ப்பமில்லை என்று கூறியிருந்தேன்.) காரணம், அண்டத்தில் இக்குறிப்பிட்ட (தற்போது பூமி இருக்கும் இடம்.) இடத்தில் மட்டுமே முப்பரிமாண‌த்துக்கு உட்பட்ட  உயிரினங்கள் தோன்றக்கூடியதாக இருக்கலாம்.

அடுத்து பூமி... தனது ஈர்ப்பு விசையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறதாம்(?)...
காரணம்... ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் 4 சென்டிமீட்டர்/ மில்லி மீட்டர் ( தெளிவாக நினைவில்லை) பூமியைவிட்டு விலகுகிறது. (இது நிரூபிக்கப்பட்டுள்ளது.) 
இதன்படி, பூமி ஈர்ப்பு விசையை இழந்துகொண்டு இருந்தாலும்... சூரியனை நோக்கி இழுக்கப்படும்.
இதைப்போன்று... மற்றைய கோல்களும் தமது ஈர்ப்பு விசையை இழந்தால்... செவ்வாயில் உயிரினம் தோன்றுவது சாத்தியம்.

மற்றம்படி... மனிதன் அங்குபோய் குடியேறுவது என்பது... என்னை பொறுத்தவரை தற்போதைய தொழில் நுட்ப முறைகளின் படி சாத்தியமில்லாதது.
---------------------------------------------------------------------------------
நானும் 100!!! நானும் 100!!! நானும் 100!!!



இது என்ற 100 ஆவது பதிவு... 
விசேடமா ஒன்றும்  எழுதல...  எவ்வளவோ பேர்... எவ்வளவோ எழுதிட்டாங்க...  நான் இப்ப 100...
( இதெல்லாம் நினைக்கவே இல்லை... 102 பேர் மெம்பர்ஸ்... 32500 + ஹிட்ஸ்...)
ஆதரவுதாற எல்லாருக்கும் நன்றி...
இன்னும் புதுசா கனக்க எழுத இருக்கு... வரும் பதிவுகளில எழுதுறன்.


---------------------------------------------------------------------------------
மேலே சிங்கம் டவுண்லோட் லிங் இருக்கு... டவுண்லோட் பண்ணலாம்.
---------------------------------------------------------------------------------

19 comments:

  1. well done Pirabu Chandran.

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சுவராசியமான அலசல்!!
    நூறுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Thiviya ratnam.11 May 2010 at 07:59

    Good!!! Bst o lck Prabu!

    ReplyDelete
  4. Best of luck.. keep rocking .....
    அருமையான தகவல் . பாரமான ஒரு இரும்பு குண்டை நூலில் கட்டி அதை பிடித்து கொண்டு நீங்கள் சுழற்றினால் நீங்களும் சேர்ந்து தான் நகர்வீரகள். பூமி சூரியனை நோக்கி செல்லாது . இரண்டும் ஒரு வேளைகளில் அசையலாம் . ஆனால் தூரம் மாறாது என நினைக்கிறேன்

    ReplyDelete
  5. /அருமையான தகவல் . பாரமான ஒரு இரும்பு குண்டை நூலில் கட்டி அதை பிடித்து கொண்டு நீங்கள் சுழற்றினால் நீங்களும் சேர்ந்து தான் நகர்வீரகள். பூமி சூரியனை நோக்கி செல்லாது . இரண்டும் ஒரு வேளைகளில் அசையலாம் . ஆனால் தூரம் மாறாது என நினைக்கிறேன் /அஸ்ஸலாமு அலைக்கும்
    அல்லாஹு அக்பர்
    படைப்பின் ஆற்றலைகண்டு
    படைத்தோனுக்கு அடி பணிந்தேன்
    “மனிதனுக்கு அவன் அறியாததைஎல்லாம் கற்றுகொடுத்தேன் “என்பதன் சுவையை அறிந்தேன்.

    ReplyDelete
  6. நானும் 100!!! நானும் 100!!! நானும் 100!!!

    வாழ்த்துக்கள் அண்ணா(???)

    ReplyDelete
  7. தமிழ்10ல் ஏன் தங்கள் தளம்.. இத்தனை பின் வாங்கல்.. இது பெரிய தோல்வியே? ha..ha..ha..

    ReplyDelete
  8. நன்றி... Priya, malgudi, சைவகொத்துப்பரோட்டா, Thiviya ratnam...
    --------------------------
    நன்றி... S.Sudharshan...
    நீங்கள்... சொல்வது...
    பூமிசுற்றுவதால் ஏற்படும் புறவிசை; சூரியனின் ஈர்ப்பை ஈடு செய்வதால்... தூரம் மாறாது என்பதைத்தானே??
    ( இரண்டும் அசைகின்றன என்பதும் உண்மைதான்... கலக்ஸி பால்வீதியுடனும்... பால்வீதி மையத்துடனும் அசைகிறது... )

    ஆனால், பூமியின் புறவிசைக்கு காரணம்... பூமியின் சுழற்சிவேகம் தானே... அதுக்கும் ஆப்பு வந்துட்டுது... :)

    அதாவது... பூமியின் துருவப்பகுதிகளிலுள்ள காந்தப்புலம் 10 வருட இடைவெளியில் குறிப்பிடத்தக்களவு மாறி இருக்கிறது. ( நிரூபிக்கப்பட்டது.) காந்தப்புலம் மாறினால் வேகம் மாறுமே... வேகம் மாறினால் புறவிசை மாறும்... அப்படின்டா... ஒன்று சூரியனை நோக்கி செல்லும்... அல்லது வெளியே செல்லும்.
    ----------------------
    நன்றி... MURALI & KARTHIK தம்பி(???) :)
    ---------------------
    நன்றி...www.sk_one.blogspot.com
    ஹீ...ஹீ... என்ன நடக்குதென்றே தெரியல...
    நீண்ட நாட்களா... 9,10 என்று மாறி மாறி நின்டுது...
    பேந்து 3 நளுக்கு முதல் திடீரென்டு 4 ஆகிச்சு.... நேற்று... 187 என்று வந்துது... இப்ப 17 என்று காட்டுது...
    ( ஹீ...ஹீ... 4ம் இடமென்று காட்டுபோது... சும்மா இருந்தனான்... 187 என்று காட்டினாலும் சும்மாத்தானே இருக்கனும். :) )

    ReplyDelete
  9. எல்லாரும் சினிமா சினிமான்னு மொக்கையா அத பற்றியே எழுதும் போது .....யாரும் தொடாத ஓர் விடயத்தை மிகவும் சுவாரசியமா எழுதி இருக்கீங்க ......தொடர்ந்து எழுதுங்க .இனி உங்க எல்லாப் பதிவுக்கும் தமிழ்10 ல ஒரு ஒட்டு இந்த அப்பாவி தமிழன் கிட்ட இருந்து கண்டிப்பா இருக்கும் .

    ReplyDelete
  10. நன்றி...அப்பாவி தமிழன்...
    தொடர்ந்து எழுதுவேன்... :)

    ReplyDelete
  11. சூரியணன் பிளாக் கோலா ஆவுற அளவுக்கு பெரிய நட்சத்திரம் இல்லை.
    நம்ம சூரியனை சுத்துற மாதிரி அதுவும் இன்னொரு பொருளை சுத்திட்டு இருக்கு, பால் வெளியுடன் சேர்ந்து. சூரிய குடும்பம் அழியுரப்ப மனிதன் இன்னொரு நட்சத்திர மண்டலத்துல குடியேரியிருப்பான்.
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் இருநூறு ஆகட்டும்.

    ReplyDelete
  12. நீங்கள் கூறுவது(செவ்வாயில் உயிரினம்) சாத்தியமாகலாம். மனிதன் நினைத்தால் மிக விரைவில் உண்டாக்காலாம். எப்படியென்றால் செவ்வாயில் கொஞ்சம் உயிரின மாதிரிகளை தூவி பரவ செய்தால் போதும்.
    பூமியில் கூட அப்படி உயிரினங்கள் உண்டாயிருக்கலாம் என்ற விதி(அண்டவெளியில் பறந்து வந்த மைக்ரோச்பெர்ம்கள்) உள்ளது

    ReplyDelete
  13. நன்றி... chandru2110...
    ஆ... பிளக் ஹோலாவதுக்கு அளவும் செல்வாக்கு செலுத்துமென்றிறது... இப்பதான் தெரியும்.
    ஓம்... பால் வெளிகளும் மையத்தை சுத்திட்டு இருக்காம்.
    ம்ம்... அப்ப மனிதனாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
    (அமீபா...--> குரங்கு --> மனிதன் ---> x? :) )
    நன்றி...

    ஆ... அங்கு இருக்கும் சூழ்நிலையில்... இந்த உரினமாதிரிகள்... ஒரு உயிரினை உண்டாக்கும் என்று எப்படி நிச்சயமாக நம்பமுடியும். :O
    (அணு மூலக்கூறுகளையா சொல்றீங்க... :\ )

    ReplyDelete
  14. மனித என்னத்திற்கு அப்பாற்பட்ட மூலாதாரத்தை வச்சுதான் இந்த அண்டமே இயங்கிட்டு இருக்கு.
    ஒருத்தர் சொன்னாரு " தேவை" ங்கற விடயத்தை வச்சுதான் இந்த உலகமே வாழ்ந்துட்டு இருக்குன்னு . இப்ப இருக்குற கண்டுபிடிப்புகள் ,உயிரினங்கள் , நீ, நான் எல்லாம் தேவைங்குற விசயத்தால உருவானது. சில உயிரினங்கள் தேவை ஏற்படும்போது, தன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. இப்ப இருக்குற பரிணாம வளர்ச்சிக்கும் காரணம் அதுதான். அதனால செவ்வாயில வெப்பத்தை தாங்கும், சுவாசம் செய்யற அளவுக்கு உள்ள உயிரின மாதிரிகளை பரவ செய்தால் போதும் , அது தன்னை காத்துக்கும்.

    ReplyDelete
  15. நன்றி...chandru2110...

    நிச்சயமா... நீங்க சொல்றத ஏத்துக்கிறேன்...
    மனிதனுக்கு அப்பாற்பட்ட... அதாவது 3 பரிமாணங்களுக்கு உட்படாத மூலாதாரத்தை கொண்டே இயங்குகிறது...
    அதை நான் பரிமாணங்கள் பகுதியில் எழுத இருக்கிறேன்.

    பார்ப்பம்... இப்பதான் மைக்றோ பயோ டெக்னொலொஜி வளர்ந்துட்டு வருதே... நீங்கள் சொல்வது சாத்தியமாகலாம்...
    (மனித உரு தோன்ற சாத்தியமில்லை... என்று நான் நம்புகிறேன்... சரிதானே...)

    ReplyDelete
  16. மனிதன் பரிணாம வளர்ச்சில உறுவாகுற வரை நாம காத்திருக்க வேண்டாம். ஓரளவுக்கு வாழ சாதகமான சூழ்நிலை வந்தா நாமே போய் குடியேறிடலாம்.

    ReplyDelete
  17. very good information but if you start a topic please complete it and proceed to the next.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected