ஃபேஸ்புக்கில் எனக்கு வந்த தத்துவங்களும்.... நான் போட்ட தத்துவங்களும்...
உங்களோட பகிர்ந்துக்கனும் என்று தோன்றிச்சு...
சிலது ஜோசிக்க... பலது சிரிக்க...
(எப்படியும் இதில கனக்க எங்கயாவது சுட்டுபோட்டதாத்தான் இருக்கும்... உருமையாளர்கள் யாராவது இருந்தால் ரென்ஸனாகி... ரைட்ஸ் பிரசனை எடுத்திடவேண்டாம்... :P )
---------------------------------------------------------------------------------
ஸென்டிமென்ட்...
* வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார்.
பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.
* பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால் உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்!
* அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது....
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது!!
* நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு...
யார் உனக்காக வாழ்கிறார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...
* ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெறமுடியும்(மாம்)...
எதை பெற எதை இழக்கிறோம் என்றதுதான் முக்கியம்... :)
* நாங்க நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கனும்...
கடல் போல் காத்திருக்கும் வெற்றிக்காக...
* நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்துதான் கிடைக்கின்றனவாம்....
ஆனால், அனுபவம்... தவறான முடிவுகளிலிருந்துதான் கிடைக்கிறது...
* என்னைவிட புத்திசாலிகளுமிருக்காங்க... என்னைவி முட்டாள்களுமிருப்பாங்க... ஆனா, எனக்கு நிகரா நான்தானிருக்கேன்... lol... :P
* துன்பம் பாதி... இன்பம் பாதி... இதுதான் வாழ்க்கை...
இன்பம் குறைவாவும்... துன்பம் அதிகமாகவும் தெரியும்... இது தான் நமது பார்வை...
* வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
* நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்!
லவ்வு... ஃபீலிங்ஸ்ஸு...
* எந்தப் பொண்னுமே உண்மையான காதல ஏத்துக்கிறதில்ல...........ஏன்னா உண்மையான காதல் அவங்ககிட்ட இல்லை...
* ஒரு நாள் நீ என்னை நினைப்ப நானும் நினைத்தேன்.
ஒரு நாள் நீ என்னை MIss பண்ணுவ நானும் MIss பண்ணினேன்.
ஒரு நாள் நீ என்னை நினைச்சு அழுவ நானும் அழுந்தேன்.
ஒரு நாள் நீ என்னை LOve பண்ணுவ அப்போது நான் உன்னை LOve பண்ண
மாட்டேன்.
* கத்தியால குத்தினா கூட கத்தி வலியை வெளிப்படுத்துவோம்,
கத்தினாலும் குறையாத இந்த காதல் வலியை கத்தாமலையே வச்சிருக்கோம்...
* ஒன்றை இழந்து தான் ஒன்றை அடைய வேண்டும் - ஆனால்
அவளோ காதலனை இழந்து கணவணை அடைந்தாள்.-
நானோ காதலியை இழந்து...மதுவினை அடைந்தேன்.!
லவ்... அட்வைஸ்ஸு...
* அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்...
அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.
* உலகில் மிகப்பெரிய பூ எது....?பெண்.உலகில் மிகவும் அழகு எது....?பெண்.உலகில் அற்புதமான விடயம் எது...?பெண்.கடவுள் எது...?பெண்.
காதலிபவனுக்கும்....காதலித்தவனுக்கும்......!!
* காதலின் சின்னம் கேட்டேன் கல்லறை என்றாள், கல்லறைக்கு வழி கேட்டேன் என்னை காதலி என்கிறாள்.
* நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்!!!!!!!!!!
* பிகரோட பீச்ல மணல் வீடு கட்டி விளையாடினதோட அருமை அவள் அண்ணா ரவுண்டு கட்டி அடிக்கும் போது புரியும்.
* காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது...
* விண்ணுக்கு ராக்கெட் அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது ரொம்ப கஷ்டம்....!!!
* பெண்களும் இசை தான்.பழகிப்பார் சங்கு சத்தம் வரும்!
* காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும்
* லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி! அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி
* எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish...
* Boy : I Love You
girl : I hate you
Boy : Nalla think panni sollu
girl : sure I hate you
Boy : Waiter enakku mattum Bill Podu
...girl : hay...hay I Love You da
* பசங்க ஏன் லவ் பன்றாங்கான Friends இருக்காங்க எப்படியும் Loveva சேர்த்துவச்சுடுவாங்க ..!என்ற நம்பிக்கைலதான் ...ஆனா பொண்ணுங்க ஏன் Love பன்றாங்கான ..Parents இருக்காங்க கண்டிப்பா எப்படியாவது பிரிச்சு வச்சுடுவாங்க என்ற நம்பிக்கைலதான் ....
புலம்பல்...
* அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை....ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை....பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை....என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?
* 12B ஷாம்க்கு மட்டும் பஸ்ஸில ஏறினா சிம்ரன் ஏறாட்டி ஜோதிகா எண்டு இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏறினாலும் ஏறாடியும் இறங்கினாலும் தாவினாலும் குதிச்சாலும் ஓடினாலும் ஒரு சப்பை figure கூட கிடைக்க இல்ல......
* உலகத்தில் இத்தனை பெண்களிருந்தும் என்னையேன் யாரும் காதலிக்க மாட்டேங்கிறாங்க... (Fan Group)
---------------------------------------------------------------------------------
















































