அதிகாலை 8 மணிக்கு தாத்தா எழும்பினார்... பக்கத்தில் பாட்டி டீ போடாமல் இருப்பதைக்கண்டு கடுப்பாகி போனார் தாத்தா... தாத்தா : என்னடி... இன்னும் டீ போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ? பாட்டி : பால் முடின்சு போச்சு... வாங்க மறந்திட்டன் அதுதான்... தாத்தா : ம்ம்ம்... நேற்றே சொல்லி இருக்கலாம்ல... காலைல அலைய விடுறாள்... இரு போய் வாங்கிட்டு வாறன்...
பல கலைப்படைப்புக்களை கணவனும் மனைவியும் ரசித்துப்பார்த்துக்கொண்டு சென்றார்கள்...
ஒரு மூலையில்.. இலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது....
மனைவி : என்னங்க... ஏன் இவளவு நேரமா இந்த ஓவியத்தையே பார்த்திட்டு இருக்கிங்க?
கணவன் : பாரேன்... எவளவு அழகா இருகு என்டு...
மனைவி : சரி சரி... இலையுதிர்காலம் வர இன்னும் நாளிருக்கு... வாங்க போகலாம்...
X : 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்? எழுத்தாளர்: ஒரு வாரம். டாக்டர்: இரண்டு வாரம். வக்கீல்: ஒரு மாதம். ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் என்பது!!...
உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!
2010 ம் ஆண்டில் நான் பார்த்த படங்களுள் எனக்கு பிடித்த படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு இதில் பாரிய மாற்றம் இருந்தால்... உங்கள் வரிசையை கீழே கொமென்டில் போடவும். பிடித்திருந்தால் வோட் போடவும். :)
------------------------------------------------------------------------------------------
அங்காடித்தெரு.
அருமையான படம்...
சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு (சென்னை) வேலைதேடிவரும் இளவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அவர்களின், ஏழ்மையின் காரணமாக... எப்படியெல்லாம் வேலையிடங்களில் நடத்தப்படுகின்றனர்... என்பதை வெளியாருக்கு வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டியது..
இப்படியான சூழ் நிலையில்... அவர்களினுள் எழும் காதல், எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கின்றன என்பதை... ஹீரோயிஸத்தையும் தாண்டி... ஒவ்வொரு பாத்திரத்தினூடும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர்.
இறுதியில் எது உண்மைக்காதல் என்பதை உணர்த்தும் படம்.
என்னால் மறக்க முடியாத காட்சி...
காதல் கடிதம் பிடிபட்டதும்... காதலன் ஏழ்மை/குடும்பத்தை காக்கவேண்டிய நிலையின் காரணமாக, அதை மறுத்து தனது காதலியை பலர்முன்னிலையில் கேவலமாக திட்டுகிறார்... இருந்த ஒரே சந்தோஷமும் போய்விட்டதே என்ற ஏக்கத்தில்... காதலி தற்கொலை செய்துகொள்கின்றார். மறக்க முடியாத காட்ச்சி இது.
கஜினி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரே உணர்வை எனக்குள் ஏற்படுத்திய படம்.
சுதந்திரத்துக்கு முன்னான இந்தியாவில் நடந்ததாக கதை கூறப்படுகிறது.
சாதாரண சலவைத்தொழிலாளிக்கும்.. பிரிட்டுஸ் பிரபுக்களின் மகளுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்... பிரிவு என்பவை சிறப்பாக காட்டப்பட்டன. கதை ஃப்லாஸ்பாக்கில் சொல்லப்பட்டதும்... இறுதியில் அந்த மூதாட்டி காதலனின் சமாதியில் இறப்பதும் மிக அருமையாக இயக்கியுள்ளார் இயக்குனர்.
பிடித்த காட்சி :
சுதந்திர தினமன்று நடக்கும் காட்சிகளும்... கடைசியாக, பலூன் டையரில் போட்டு காதலனை ஆற்றில் தப்பசெய்துவிட்டு... செல்ல எத்தனிக்கும் போது... ஆர்யா... கையால் படகைப்பிடிப்பதும்... துடுப்பால் விரல்களின் அடித்து பிடியை தளர செய்வதும் அருமை. பின்புல இசை மேலும் இந்த காட்சியை பிடித்ததாக்கியது. http://alivetorrents.com/torrent/8695352/madarsapattinam-2010-tamil-dvdrip-x264-1cdrip
நான் மிக மிக ரசித்துப்பார்த்த திரைப்படம். எந்த ஒரு காட்சியுமே ஸீரியஸ் இல்லாமல் போனாலும்... அனைத்துமே மனதில் படும்படியாக இருந்தது. ஆர்யா சந்தானம் வரும் அனைத்துக்காட்சிகளுமே சுப்பர்.
என் மனதில் வடிவேலுவுக்கு அடுத்த இடம் இப்போ நண்பேன்டா சந்தானத்துகுத்தான்.
படத்தின் கதை என்றால் என்ன சொல்றது... உதவாக்கரையாகத்தெரியும் ஒருவன் காதலித்து பிறகு கரம் பற்றுவதற்காக முன்னேறும்... அதே கதைதான். ஆனால், நகைச்சுவையாக சொல்லப்பட்ட விதம் சுப்பர்.
அருமையான திரைக்கதை. காதலும் அதன் பிரிவுகளும் அருமையாக காட்டப்பட்ட படம். சிப்பு, திரிஷ்யாவின் இயல்பான நடிப்பு... ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளை அடிப்படையாக கொண்டாலும் இந்தப்படத்தை ஒரு படி மேல் நிறுத்தியது.
இந்தப்பட உணர்வுகள் எழுத்தில் எழுதமுடியாதவை. படத்தின் முடிவு எடுத்த விதம் தான் என்னை மிக கவர்ந்திருந்தது.
ஒருத்தன் காதல் வரும்போது... எவ்வளவு மாறுதலுக்கு உட்படுகின்றான் என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டது. (இராமாயணக்கதைதான்... இராவணன் முன்னிலைப்படுத்தப்பட்டது. )
இறுதிக்கட்டத்தில்... பிருத்விராஜின் சந்தேகமும் அதை தொடர்ந்த காட்சிகளும் இரு முடிவுகளை எடுக்கத்தக்கனவாக இருந்தது.
1) உண்மையிலேயே சந்தேகம் கொள்கிறார். ஐஸ்வர்யாவும்... விக்ரம் அவளவு நாளாக நடந்துகொண்ட முறையிம் ஈர்ப்புக்கொண்டு அவரிடமே சொன்னது போல் போகின்றார்.
2) விக்ரமை வீழ்த்துவதற்காக மனைவி மீது சந்தேக்ப்பட்டது போன்று பிருத்விராஜ் நடிக்கின்றார்.
படத்தின் பெரிய குறை... ஏன், விக்ரம் (வீரய்யா) தீவிரவாதப்போக்குக்கானான் என்பது காட்டப்படவில்லை.
பிந்தங்கிய கிராமத்தில்... சிறுவயதிலேயே உருவாகும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இறுதியில்... ஒருவரின் சந்தேகத்தால் ஏற்படும் பின் விளைவுகள் இறுதி 20 நிமிடங்களில் படத்தை புரட்டிப்போட்டுவிடுகின்றது. " நாசமா போவா... நால்லாவே வாழமாட்டாய்..." போன்ற வசனங்களுக்கேற்ப வாழ்க்கை மாறுவதாக காட்டப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
பிடித்த காட்சி :
கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது... "எங்களை நாய்மாதிரி அலைய விட்டுட இல்ல... கஞ்சா கேஸ்ல போட்டு வெளிலயே வராம பண்றன்டா... எப்டி வாழ்றா என்று பார்ப்பம்... " என்று... ஓடிவந்த ஜோடியை திட்டும் போதுகாட்டப்படும் முகபாவனைகளும்... அதை தொடர்ந்த சில காட்சிகளும் அருமை. http://alivetorrents.com/torrent/9092215/mynaa-2010-tamil-lotus-dvd-rip-v99
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான சையன்ஸ் ஃபிக்ஷன் படம். ரஜனியின் நடிப்பு மிகவும் கவர்ந்திருந்தது எனக்கு... தான் ஏன் சுப்பர்ஸ்டார் என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோவுக்கு உணர்வு கொடுத்தால்... ஏற்படத்தக்க சிக்கல்களை ரோபோ மனித காதல் மூலம் காட்டி இருந்தார்கள்.
திரைக்கதையில்... சயன்ஸ்ஃபிக்ஷன் என்று பார்க்கையில் பெரும் குறைபாடுகள் இருந்தன.
கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட படம். ஒரு சாதாரண மனிதன் எப்படி கொலைகாரருடன் தொடர்பேற்படுகிறார். காமத்தால், எப்படி கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார்கள். அதை மறைக்க முழு நேர கொலையாளியாக மாற நேரிடுகிறது என்பதை எல்லாம் காட்டிய படம். இதனிடையே... அழகான காதலும் இழையோடுகிறது. ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கும் காதலர்களுக்கும் ஒருவகையுல் எச்சரிக்கை மணியடித்த படம்.
வழமையான கதைதான்... சமீப காலமாக தனுஷே இப்படிப்படங்கள்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
எனினும் இந்தப்படத்தில்... குடும்பம் என்றால் எப்படி இருக்கனும்... மரியாதை என்றால் என்ன... கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம். என்பதை சிறு சிறு விடையங்களினூடாகவும் காட்டியுள்ளார்கள்.
பிடித்த காட்சி...
தான் கற்பனையாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் நியமாக வந்துவிட்டதாக எண்ணி... பிரமையடையும் விவேக்கின் காட்சிகளை விரும்பி ரசித்தேன்.
தனது அண்ணன் மீது கைவைத்த மகனை எட்டி உதைக்கும் காட்சியும் ரசித்தேன்.