Total Pageviews

Tuesday, 16 August 2011

தமிழர். :) ( எந்திரன்+உத்தம புத்திரன்* )

மிகப்பிந்திய பதிவு இது...

எந்திரன் படத்தைப்பார்த்த பின்பு எழுதி இருக்க வேண்டியது...
------------------------------------------------------------------------------------------
எந்திரன் படம் பற்றி எனது விமர்சனம் எதிர் மறையாக இருந்தாலும்..; அதில் வந்த ரோபோ கரக்டரின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.

முக்கியமாக.. தற்போது எம்மிடையே அரிதாகிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கிய விடையம் "மரியாதை".
பலரும் மரியாதையான பேசத்தகுந்த "தமிழ்" வார்த்தைகளை பாவிப்பதை தவிர்க்கிறார்கள்.
மரியாதையான சொற்களை ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதை வழமையாக்கிக்கொண்டுள்ளோம்.
( சிலர், தமிழில் பேசுகிறோம் என்றுவிட்டு... ஆங்கிலத்தை நேரடியாக தமிழ் பேசித்தெரிகிறார்கள்... அது வேறுவிடையம். )

எந்திரன் படத்தில் "சிட்டி றோபோ" பேசும் தமிழ் உண்மையிலேயே இனிமையானது.
மிகவும் தரமான தமிழ். ( சில சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது சரியே... காரணம் அந்த சொற்களுக்கு தமிழ் பதம் பாவணையற்றதாக அல்லது முரணானதாக இருக்கின்றது.)
சிட்டி பேசும் போது " நீங்கள்" என்பதையே அதிகமாக "முன்னிலையை" குறிக்க பயண்படுத்துகிறது.
ஆனால்,
பரவலாக... நாம் நீ என்ற சொல்லையே பயண்படுத்துகிறோம்.
இதில் என்ன தவறு என்றால்... நாம் சிறுவர்களையும் " நீ, வா, போ" என்றே பேசுகின்றோம்.
( இந்திய சினிமாக்கள் / நாடகங்களில் பார்த்தது. இலங்கையில்... வயது குறைந்தவர்களுடன் மரியாதையாக பேசுகையுல் " நீர், வாரும், உமது என்ற சொற்கள் பாவணைப்படுத்துவதுண்டு. )
மொழியை கற்றுக்கொள்ளும் அவர்களும் அதையே வழமையாக்கிகொள்கிறார்கள். பின்னர் வழர்ந்த பின்பு... ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பொழுது, ஆங்கில வழக்கப்படி " நீ" என்பது தான் முன்னிலையை ( எந்த வயதினரானாலும் சரி) குறிக்கப்பயண்படும் சொல் என நினைத்து நடந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றி... தமிழர்களிடையே அன்பான அழகுத்தமிழை பேசப்பழகிக்கொள்ள வேண்டும்.
பேச்சுத்தமிழில் கூட... மரியாதை இருக்க வெண்டும். அப்போது தான், நாம் சொல்லிக்கொண்டு தெரிவது போன்று "தமிழ் இனிமையான மொழி" என்பதை தக்கவைக்கவும் நிரூபனமாக்கவும் முடியும்.
மரியாதை நிமிர்த்தம் பேசப்படும் சொற்களை ஆங்கிலத்தில் இருந்து எடுத்துப்பேசுவதை தவிர்க்க/ குறைக்க வேண்டும்.

இந்த விடையத்தில், வசனத்திற்கு பொறுப்பான சுயாத்தாவுக்கும் அதை அப்படியே படமாக்க நினைத்த சங்கருக்கும் நன்றி கூறவேண்டும்.
மேலும், பலதரப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜனி அதை கச்சிதமாகவும் அழகாகவும் இலகுவான உரை நடையில் பேசியதும் வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விடையம்.
சில சிறுவர்கள் அதைப்பார்த்து பேசிக்கொள்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
எனினும் ரஜனி சிகரட் பிடித்தால் பிடிப்பவர்கள்... அவர் இனிய தமிழில் பேசினால்.. அதை கண்டுக்காம இருந்து... நாம் " அன்னம் - கெட்டதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அன்னம்" என்பதை நிரூபித்துக்கொள்கிறார்கள்.

பதிவு நீண்டுவிட்டது.. எனினும் இன்னொரு படத்தையும் குறிப்பிடவேண்டும்.

அது தனுஷ் நடித்த... "உத்தம புத்திரன்" 


குடும்பங்களிற்கு இடையில் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் உறவுகளை பற்றிய படம் என்றே சொல்லலாம் அதை. 
படத்தின் கதை என்னவோ பழசாக இருந்தாலும். உறவுகளுக்குள் மண்டிக்கிடக்கும் அடிப்படை பாச உணர்வுகளையும்..; கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் எனக்கு விளங்கப்படுத்திய படம் அது.


வெளி நாட்டு கலாச்சாரம் என்கிற பெயரில்.. பலர் உறவுகளை மதிப்பதில்லை, பேணுவதில்லை. அதே நேரம், வெளி நாட்டவர்கள் எமது காலாசார முறையை போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
நாம் வெளினாட்டு மல்டி கலாச்சாரத்திற்குட்பட்டு குறுகிய வட்டமாக்கிக்கொள்கிறோம் உறவுகளை. ஆனால், அதே மேற்கத்தைய கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல பண்புகளை விட்டு விடுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------
மொத்ததில் தனித்துவம் இழந்த கலாசாரத்துடன் இருப்பது எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த பதிவை இட்டேன்.
( இதில் கூறி இருக்கும் குறைகள் அனைத்தையும் நானும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். குறைக்க நினைத்துக்கொண்டே:) )
------------------------------------------------------------------------------------------

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected