Total Pageviews

Wednesday, 10 August 2011

ஹனுமார் vs ஹியூம் (ESP மனிதர்) (மூளையும் அதிசய சக்திகளும். )

மிக மிக நீண்ட இடைவெளிக்கி பின்பு மீண்டும் பதிவு இடுகிறேன்... இனியாவது மாதாந்தம் 10 பதிவுகள் வரையாவது இட முடியும் என நம்பிக்கையுடன்.. :)
------------------------------------------------------------------------------------------
ESP மற்றிம் மூளையின் அதிசய சக்திகள் பற்றிய இறுதிப்பதிவில் "ஹனுமார்" ஒரு ESP மனிதராகத்தான் இருந்திருபார் என எழுதி இருந்தேன்... அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது, கூடவே சந்தேகங்களும்...
அதில் ஒருவர் கேட்ட சந்தேகத்திற்கான விடைப்பதிவாகவும்... ஆர்வலர்களுக்கான தகவல் பதிவாகவும் இது இருக்கும். :)
------------------------------------------------------------------------------------------
// ஹனுமார் மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது?
அதுவும் ESP ஆ? //

இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்... விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP  மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது...

டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்...  கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் "எனது நண்பன் "எட்வின்" இறந்து விட்டான் என தோன்றுகிறது" எனக்கூறினான்...  இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்... நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை... ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )

ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்... இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்... ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு... தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை  ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான  ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. :)

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்... அவற்றை தெளிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம் :) )

அதேவேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹனுமார் ஒரு ESP  மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகள் எய்தி இருக்க கூடும்.
------------------------------------------------------------------------------------------
அடுத்து...
சிவனிற்கு நெற்றிக்கண் இருந்ததாக கூறப்பட்டுள்ளது எந்தளவுக்கு உண்மை... நெற்றிக்கண் என்றால் என்ன... இப்போது மனிதர்களிடம் அந்த 3ம் கண் எங்கே போனது? போன்ற சுவாரஷ்ய தகவல்களை அறிவியல் கண்ணோடு பார்ப்போம்.
மேலும்...
ஏன் இப்போது எம் அனைவரிடமும் புதைந்துள்ள இந்த சக்திகளை மூளையில் இருந்து வெள்ப்படுத்த முடியவில்லை என்பதையும் ஆராய்வோம். :)
------------------------------------------------------------------------------------------
பதிவில் நல்ல தகவல்கள் இருக்கின்றன என கடுதினால் வோட் போடவும்.
அல்லது, குறைகளை கொமென்டில் சுட்டிக்காட்டவும். + உங்கள் கருத்துக்களையும். :)


"daniel douglas hume"தகவல்கள் உறுதிக்கு :
The Encyclopedia of Witches and Witchcraft. , The hanuted museum.
மனிதரும் மர்மங்களும்.
- valaakam*-

------------------------------------------------------------------------------------------
தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)

எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
------------------------------------------------------------------------------------------

5 comments:

 1. Dear Sir
  These powers are called siddhis and every sidha has got these powers. No doubt Hanuman is a Sidhha Purusha and with great practice and meditation Siddhas have acquired the powers and ESP is a different one. Here one gets this power naturally. May be because of the residual powers of the past lives and their good karmas. There are numbner of sidhhis and I do not want to list them here and you must be knowing about this.

  With regards
  S Subramanian

  ReplyDelete
 2. S Subramanian -கருத்தை நான் வழிமொழிகிறேன். ESP பிறக்கும் போதே இருக்குற மூளையின் ஆற்றலா இல்ல தியானம், தவம் மூலம் கிடைக்கும் ஆற்றலும் இதில் சேருமா? இவையும் மூளையும் சக்திகள் தானே, தெளிவுபடுத்துங்கள்..

  ReplyDelete
 3. நன்றி...
  உங்கள் வருகையை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். :)

  நன்றி...
  ஆம் நீங்கள் சொன்னதன் பின்னர் தான் சிந்தித்தேன்... சொல்வது சரி.. ; தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் விளக்கம் தர முனைகிறேன்.
  என்பது மூளையின் விசேட சக்தியாக மட்டுமே கருதி எழுதி உள்ளேன். ( தானாக வெளிப்படுவது, தியானங்கள் மன அடக்கங்கள் மூலம் வெளிப்படுத்துவது 2ம் ஒன்று என.)
  ஹனுமாரை குறிப்பிட்டதன் காரணம், அவர் ஒரு மனிதர் தான் என்பதை காட்டவே.

  கர்ம விதிப்படி தானாகவே வெளிப்படும் என்பதற்கு ஹியூமின் குறிப்பில் இருந்து அடுத்த பதிவில் விடைதருகிறேன். :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails