Total Pageviews

Monday 14 February 2011

காதலர்தினத்தில் சுட்ட கவிதை... :D (+ jokes)

------------------------------------------------------------------------------------------
ஹீ...ஹீ... சொந்தமாத்தான் கவிதை வரல...  காதலர் தினத்துக்கு .... ஃபேஸ்புக்கில் கனக்க கவிதைகள் இருந்தன... சிலது சுப்பர்... சிலது சப்ப... சிலது லொல்லு... :D
எனக்குப்பிடித்த சுப்பர்களையும்... லொலுக்களையும்... சுட்டு இங்க போடுகிறேன்... :D

------------------------------------------------------------------------------------------
எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பதல்ல காதல் . . .
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . .
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்பதே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

------------------------------------------------------------------------------------------
உனக்காக உயிரை விடுவனே தவிர
உயிருக்காக உன்னை விடமாட்டேன்....
I Love You....
------------------------------------------------------------------------------------------
நீ என்னை மிஸ் பண்ணி இருக்கலாம், நீ என்னை நிராகரித்து இருக்கலாம், ஏன் நீ என்னை மறந்துகூட இருக்கலாம், ஆனால் ஒரு நாள் என்னை நீ பார்க்க விரும்பினால், என்னை தேடாதே, சும்மா ஒருமுறை உந்தன் நிழலைப்பார், நான் அங்கிருப்பேன். என்னை நம்பு!!
----------------------------------------------------
மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ....!
---------------------------------------------------
காதலர் தினம்
இருப்பதால்
தானோ என்னவோ
தெரியவில்லை
"பெப்ரவரி"
மாதத்துக்கும் கூட
ஆயுள் குறைவு.
------------------------------------------------------------------------------------------
அட சீ!
காது குடைவதில்
உள்ள சுகம் கூட
காதலில் இல்லை
------------------------------------------------------------------------------------------
அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.

பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
பையன்: டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

நாங்கல்லாம்
சுனாமில ஷ்விமிங்க
போடுறவங்க...
------------------------------------------------------------------------------------------
boys love சொல்லும் போது girls சொல்லும் top 10 answers..

10. No idea
9. friends ஆக இருக்கலாம்
8. செருப்பு பிய்யும்
7. i hate love
6. i hate u
5. parents திட்டுவாங்க
4. யோசிச்சு சொல்லுரன்
3. இப்போ வேண்டாம்
2. நான் படிக்கணும்
1. sorry நான் வளாகம் றைட்டர் மாதிரி ஒரு நல்ல பையன தான் love
பண்ணுவன். :P
------------------------------------------------------------------------------------------

இதில சிலது அவர்கள் சுட்டத நான் சுட்டிருப்பேன்...
உரிமையாலர்கள் மன்னிக்கவும்.... :D
பிடித்திருந்தால் வோட் போடவும்... இல்லைனா கொமென்டில் சொல்லவும்... :)

------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------

7 comments:

  1. ஹி ஹி ..எல்லாம் நல்ல இருக்கு அதென்ன வளாகம் ரயிட்டேர் மாதிரி :P :D

    ReplyDelete
  2. நாங்களும் வருவோம்ல்ல...

    ReplyDelete
  3. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
    அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

    ReplyDelete
  4. நாங்க ஓட்டும் போடுவோம்ல்ல..

    ReplyDelete
  5. சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் சுட்டுரிக்கீங்க. ஆனா உங்களை ரொம்ப நல்லவன் சொன்னதுதான் அதிகமா சுட்டுவிட்டது.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. நன்றி... S.Sudharshan :)
    ஹீ ஹீ... அவர் ரொம்ப நல்லவர்ல அதான் அப்டி விரும்பினம்னா பாருங்களேன்...
    ---------------------------------------
    நன்றி... sakthistudycentre-கருன் :)
    உங்களைதானே பார்த்திட்டு இருக்கேன்... நீங்க வராம விட்ட கடுப்பாகிடுவம்ல... :D :P
    ---------------------------------------
    நன்றி...கே. ஆர்.விஜயன் :)
    என்ன செய்ய உண்மைய சொன்னா உலகம் ஒத்துகுதில்லையே... இப்போ பாருங்க நீங்க கூட ஒத்துக்க மாட்டன் என்கிறிங்க. :P
    ---------------------------------------
    நன்றி...நிலாமதி :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected