Total Pageviews

Monday 24 May 2010

நாங்கள் (தமிழர்) ஏன் இப்படி இருக்கம்??? ( :@ )

**************
----------------------------------------------------------------------------------
ம்ம்... மற்ற தொடர் பதிவுகளை எழுத முதல்... இந்த பதிவை நான் எழுதனும்... இது கூட செய்யலனா எப்படி...

ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள மனிதனும்... இதனால்... நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்பான் என்பது உண்மை...
அதிலும்... தமிழர்களாகிய நாம்... இதை கண்டு... பொத்திட்டு இருந்தால் அதை விட கேவலமானது ஒன்றுமில்லை... ஆனாலும் என்ன செய்ய அதைத்தான் நாங்கள் செய்துட்டு இருக்கம்...

அது எங்கட பிழை இல்லை... இதெல்லாம்... எங்கட முன்னோர்கள் காலத்திலேயே எங்க ரெத்தத்துடன் கலந்து போய்விட்ட ஒரு ரெக்னிக்கலான வீரம்...

அது எப்படி எங்களிட இரத்தத்துடன் ஒன்றித்துப்போனது என்பதை பார்க்க முதல்...
----------------------------------------------------

போன கிழமை... இலங்கை இறுதியுத்தத்தில் ஒரு இளைஞனை வெட்டி வெட்டி கொல்லும் காட்சியை லங்காசிறீ உட்பட அனைத்து பிரபல தமிழ் இணையத்தளங்களும்... பிரசுரித்திருந்தன... கூடவே... சனல் 4 ஆல் வெளியிடப்பட்ட அதிர்ச்சி மிக்க காட்சிகளும் வீடியோவா ஓடிச்சு...

அந்த இளைஞனை வெட்டி கொல்வதை பார்க்கும்போது... ******** (வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.)
இறக்கிறதுக்கு கொஞ்ச நேரம் முதல் வரைக்கும் எங்களது ஒட்டுமொத்த உரிமைக்காகவும் போராடிய அந்த அப்பாவி சிரித்து இருக்கார்...

(படங்களையோ... வீடியோவையோ பெருசா இணைக்க வரும்பவில்லை... பார்க்க பார்க்க... ம்ம்ம்.... என்ன சொல்றதென்டே தெரியல... )

இதெல்லாம் பாத்திட்டும்... நாங்க வழமை மாதிரி சோத்து பானையை காலி செய்றம்... டி.வி ல முக்கியமான மானாட மயிலாட போன்ற பயன்மிக்க நிகழ்ச்சிகளை பார்த்து அறிவை வளத்துக்கிறம்...
போதாததுக்கு... தூரத்தில நிக்கிறவனைப்பார்த்து சிரிச்சுக்கொண்டே பக்கத்தில இருக்கிறவனுட்ட அவனை போட்டு கொடுக்கிறம்...
இப்படி கனக்க அன்றாட நடவடிக்கைகளுக்கு மத்திலயும் ... நாங்கள் எங்கட நடிகர்களின் படங்களை ஃபெஸ்ட் ஸோ பாக்கிறதையும் மறக்காம கடைப்பிடிக்கிறம்...

இதெல்லாம்... ஒரு பிளைப்பாவே நாங்க வச்சுகிட்டிருக்கம்...

அதுக்காண்டி... சாப்பிடாம, டீ.வி பாக்காம இருக்கனும் என்று சொல்ல வரல...
குறைந்த பட்சம் ஒரு சின்ன எதிர்ப்பையாவது நாங்கள் காட்டனுமே... இப்ப இல்லாட்டியும் இனி வரப்போகும் காலங்களிலும் நாங்கள் இதுவரை விட்ட தவறை செய்யக்கூடாது...

அது தான்.... நம்மட அரசியல்ல இருக்கிற கேவலமான சில ஜென்மங்களை இனியும் நம்பக்கூடாது... அதுகளை விரட்டுவது கடினம்தான்... ஆனா... "புதுசா தேர்தல்ல நிக்கிறவனை நாங்க எப்படி நம்பிறது...??? இவரும் இப்படிதான் இப்ப இருப்பாரு பிறகு பதவி வந்தா மாறிடுவாங்க..." என்ற மொக்குத்தனமான எதிர்வுகூறல்லகளை விட்டுட்டு வர்களுக்குள் இருக்கிற நல்ல கொள்கையுள்ளவர்களை உயர்த்தனும் என்று நான் நினைக்கிறேன்...
இவ்வளவு நாளா இந்த உலகமகா நடிகர்களை ( அரசியல் புள்ளிகள்) நம்பி ஏமாந்த நாங்க ஏன் புதுசா வாறவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க கூடாது... ( இது இலங்கை விடையத்தில் தலைகீழா போனது வேற விசையம்...)

இந்திய அரசியலை பற்றி கதைக்கிற உரிமை எங்களுக்கு பெருசா இல்லை... ஆனா... நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதுக்கு இந்தியாவும் முக்கிய காரணாம்... அதுவும் ஒரே மொழி பேசிட்டு தொப்புள் கொடி உறவு... அந்த உறவு... இந்த உறவுனு... சென்டிமென்டா மட்டும் ஃபீல்ங்கொடுத்து அரசியலை ஓட்டுற சில மனித உருவில் உலாவிக்கொண்டிருக்கிற சுயநல வாதிகளும் காரணம்...

சோனியாகாந்தி உண்மைலையே ஒரு சிறந்த பெண்மனிதான்... அதிலும் சிறந்த மனைவி... எப்படியோ... தன்ற கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்கிட்டா...
என்ன... இப்ப எங்கள்ளையும் கனக்க சோனியாகாந்திகள் உருவாகி இருப்பார்கள்... என்றைக்காவது ஒரு நாள் அதற்கு யாராவது பதில் சொல்லித்தான் ஆகனும்.

சரி... எங்கட நாட்டு பச்சோந்திகளை பார்த்தா...

முதல்ல தாங்களும் சேர்ந்து... தனி நாடு என்டுதுகள்... இப்ப கொஞ்சனாலுக்கு முதல்ல... தங்களுக்கு ஏதாச்சும் நடந்திட கூடாது என்ற பரந்த மனப்பாங்கோடு... ஒரே நாடு சமத்துவ தீர்வு... என்கிற இனி நடக்க சந்தர்ப்பம் மிக..மிக... குறைவான ஒரு கொள்கையை உருவாக்கிட்டு இருக்குதுகள்...

இவர்கள்தான்... போன வருடம் இலங்கையில் கொடூரமான யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது... இந்தியாவுக்கும்... வேறு சில நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராமல்... காத்துக்கொண்ட எங்கள் தலைவர்கள்....
என்ன தங்களை வோட்டு போட்டு...  வேட்டி சட்டை( சிலது கோட்டு சூட்டு) போட்டுட்டு பாராளுமன்றத்திற்கு தங்களது உருமைக்காக அனுப்பி வைத்தவங்கதான் அடிபட்டு சாகிறாங்க என்கிறத மறந்துட்டுதுகள்.

இதெல்லாம் பழசு...

இப்ப பாருங்க...
வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பக்காவா இருக்கு...
இப்ப தங்கட வெளி நாட்டு பயணங்களை மேற்கொண்டு ஏதாச்சும் செய்யலாமே....
ம்ம்ம்ஹீம்ம்ம் மாட்டாங்க... அதுக்கு காரணம் இருக்கு... அதை இறுதில சொல்லிறன்...

அடுத்தது... எங்கட வெளிநாட்டு தமிழ் பெருமக்கள்...
யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது... ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தாங்கதான்.... ஆனா, இப்ப ஏன் செய்றாங்க இல்லை... பிடிபட்ட சனங்களை விடுவிக்கிறதுக்காகவாவது செய்யலாமே... அது தான் இல்லை என்றாலும்... யுத்தத்தில நடந்த கொலை குற்றங்களையாவது கண்டித்து செய்யலாமே....
மாட்டம் ஏன்னா நாங சேஃப்ஃபா இருக்கம்... இதுக்கும் காரணம் இருக்கு... அது பிறகு...
( போன முறை மாரி... ரெயினுக்கு முன்னுக்கு படுத்து ஆர்ப்பாட்டம் என்கிற பேர்ல... தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இடைஞ்சல் கொடுக்காது... எங்க்ட உண்மையான பிரச்சனை என்ன என்பதை அந்த அந்த நாட்டு மக்களுக்கு சென்றடையத்தக்க முறையில வேறு வேறு மொழிகள்ள துண்டு பிரசுரங்கள் அடுத்து கொடுத்தாவது... வேற்று நாட்டு மக்களிட ஆதரவை பெற்றுக்கொண்டாலே போதும்... நாங்கள்... பாதி ஜெய்த்திடலாம்... )


இப்ப பாருங்க சுரேஷ் என்கிறவர்... படிச்சமா... உழைத்தமா... இருந்தமா... என்றில்லாமல் எங்களுக்காக... எங்களையும் மேம்படுத்தனும் என்கிறதுக்காக பாடுபட்டு... இப்ப அமெரிக்க அரசால்... 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு... வாதாடி வெளியேவர காசு இல்லாமல்... இருக்கார்...  எங்களுக்காக பாடுபட்ட இவருக்காவது நாங்கள் உதவுவமா...
ம்ம்ம்...ஹீம்ம்ம்...



கடுப்பில இதையே எழுதினா... எழுதிட்டே இருக்கலாம்... அதால... நாங்கள் ஏன் இப்படி இருக்கம் என்கிறதை கொஞ்சம் பார்ப்போம்....

----------------------------------------------------
பழைய அரசகாலத்தில்... மக்களுக்கு 72 வகையான சலுகைகளை (இவை அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான சிலதையும் கொண்டது) அரசர்கள் கொடுப்பது வழக்கம்...
ஆனால், அவர்கள் தமக்கு சார்பாக இருக்கக்கூடியவர்களுக்கே இதில் உன்னுரிமை கொடுத்தார்கள். இதை எதிர்த்து சில குழுக்கள் உருவானபோது... அதுக்குள் இருக்கும் ஒருவன்... அதை அரசரிடம் போட்டுக்கொடுத்து தான் ரொம்ப நல்லவனாகி அந்த குழுவையே அழித்துடுவான்...
இப்படி ஆரம்பத்தில எங்களுக்குள்ளயே மாறி மாறி குழிவெட்டிட்டு இருந்த நாங்கள்...
முகமதியர் படையெடுப்பின் போது... ஒரு படி மேலே போய்... அவ்ர்களுக்கு ஒட்டு மொத்தமா போட்டு கொடுத்து எங்களது நாட்டையும்... விட்டு கொடுத்து... அவர்கள் தந்த சலுகைகளை வாய் பிழந்து பெற்றுக்கிண்டு ஸேஃப்ஃபா இருந்தம்....
அதோட... வணிகத்துக்கு என்று வந்தவர்களுக்கு... எங்கட நாட்டுல அது இருக்கு... இது இருக்கு... மொத்தத்துல நாங்க இலிச்ச வாயர்கள்... என்று காட்டி... நாடு பிடிக்கும் ஐடியாவையும் கொடுத்தம்... காரணம்... அவர்களிடம் இருந்த தங்க காசை பெற்றுக்கொண்டு நாங்க ஸேஃப்ஃபா இருக்கத்தான்...

பிறகும்... அவர்களுக்கு... எங்கட நாட்டு வளங்களை அப்படியே கொடுத்து... அவர்கள் கொடுக்கும் பிச்சைக்காசை வாங்கி நாமுண்டு எங்கட பிள்ளைகள் உண்டு என்று ஸேஃப்ஃபா இருந்தம்...
இப்ப கூட இதைத்தான் மறைமுகமா ஏற்றுமதி வருமானம் என்கிற பேரல செய்றமாக்கும்...

இப்படி காலம் காலமாக... அடிமையாக இருந்தாலும் பறவாயில்லை... நாங்க ஸேஃப்ஃபா இருக்கனும் என்று எங்கட ரெத்தத்தில விதைக்கப்பட்ட அந்த அடிமைத்தனம்தான்... நாங்கள் இன்றும் இப்படி இருக்க காரணம்...

மொத்தத்தில... "எங்கள்ள தப்பில்லை.... அவங்கதான் காரணம்" என்று சொல்லி... அமைதியாக போறன்... பின்னுக்கு உலகமே கை கொட்டி சிரிச்சாலும் பறவாயில்லை... நான் ஸேஃப்ஃபா இருக்கன்...

பார்த்திங்களா... வடிவா பாருங்க... நான் இதில எழுதி இருக்கிறதில... ஒரு அர்த்தமுமே இருக்காது...
எல்லாம் சும்மா... ஜோக் இக்கு எழுதினன்...
ஏதாச்சும் பிழை இருந்தா மன்னிச்சுக்குங்க... ( ஃபுள்ளா பிழை என்றாலும் ஓ.கே)

ஓ.கே.... நான் படிக்கனு... ஒன்லைன்ன சட் பண்ணனும்... நாளைக்கு மட்ச் பாக்கனும்... பதிவை கொளோஸ் பண்ணுறன்...

ஏன்னா....

நானும் தமிழன்... ஸேஃப்ஃபா இருக்கிற தமிழன்...
----------------------------------------------------------------------------------

8 comments:

  1. *//அந்த இளைஞனை வெட்டி கொல்வதை பார்க்கும்போது... ******** (வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.)//*
    me too :(

    *//இப்படி காலம் காலமாக... அடிமையாக இருந்தாலும் பறவாயில்லை... நாங்க ஸேஃப்ஃபா இருக்கனும் என்று எங்கட ரெத்தத்தில விதைக்கப்பட்ட அந்த அடிமைத்தனம்தான்... நாங்கள் இன்றும் இப்படி இருக்க காரணம்...//*
    mmm


    - Devi Priya

    ReplyDelete
  2. M
    india, china irukkumpothu
    ennathaan seiya mudiyum?

    ReplyDelete
  3. ஏன் வெளிநாட்டில் கூட 3 லட்சம் பேர் இருந்தால் ஆர்ப்பாட்டத்துக்கு வருவது 50 ,000 பேர் தான் . . இங்கட் தான் உயிர்ப்பயம் ஸேபா இருக்கிறம் எண்டா வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு என்ன பயம் . ஒன்றுமில்லை . எல்லாம் அலட்ச்சியம் தான் ...இவனுங்களை திருத்த முடியாது ...

    ReplyDelete
  4. நன்றி... Devi Priya..
    ------------------
    நன்றி... Anonymous...
    நாங்களும் மாறனுமே...
    ------------------
    நன்றி... S.Sudharshan...
    ம்ம்ம்... ரொம்பகஷ்டமான வேலைதான்... :(

    ReplyDelete
  5. வரலாற்றில் எங்காவது தமிழன் ஒற்றுமையாக இருந்ததாக காட்டப்பட்டுள்ளதா? நான் என் குடும்பம் என்ற சுற்று வட்டத்திற்குள் சுயநலமாய் வாழ்வதே தமிழரின் இயல் குணம் மாற்ற முடியுமா? வீட்டிற்குள் இருந்து நடக்கின்ற அநியாயங்களுக்காக நாம் கருப்பு உடையணிந்து உண்ணாமல் மெளனவிரதம் இருக்கலாம் அதையே வெளியே செய்தால் பக்கத்து வீட்டு தமிழனே காட்டிக் கொடுத்து விடுவானே. வாசலில் வெள்ளை வண்டி வந்து நிற்கும். சாட்சி சொல்லக் கூட வெளியெ வரமாட்டார்கள். இதை மாற்றயாரால் முடியும்? தலைவிதியென்று இருக்க வேண்டியது தான். தவறுகளை கண்டு கொதித்தெழுந்தவர்களையே காட்டிக் கொடுத்து பதவிசுகம் தேடியவர்கள் எளிய தமிழர்கள். வெட்கம்...!

    யாழ்

    ReplyDelete
  6. supparkaruththu yaal

    ReplyDelete
  7. நன்றி....நன்றி & Anonymous ...
    நீங்கள் சொல்வது என்னைப்பொறுத்தவரைக்கும் 100% உண்மைதான்...
    ஆனா, இதை நாங்கள் சொன்னா... நீங்களும் நானும்... ஏதோ தமிழரை கேவலப்படுத்துறம் என்பார்களே... அதால இதை சொல்லாமல் எங்கட வேலையை பார்ப்பம்... என்ன....
    நீங்கள் சொல்வது என்னைப்பொறுத்தவரைக்கும் 100% உண்மைதான்...
    ஆனா, இதை நாங்கள் சொன்னா... நீங்களும் நானும்... ஏதோ தமிழரை கேவலப்படுத்துறம் என்பார்களே... அதால இதை சொல்லாமல் எங்கட வேலையை பார்ப்பம்... என்ன....

    ReplyDelete
  8. ///வரலாற்றில் எங்காவது தமிழன் ஒற்றுமையாக இருந்ததாக காட்டப்பட்டுள்ளதா?/// சரிதான்...ஆனாலும் நம்மை பார்த்துதானே அய்யா ஆரியன் (சிங்களவனும் ஆரியனே) பயப்படறான்...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected