Total Pageviews

Thursday 20 May 2010

பாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு)

பாப்லோ நெருடா...
----------------------------------------------------------------------------------

ஏலியன்ஸ்...பேய்..கடவுள் , லெமூரியா பதிவுகள் எழுதுவேன் என்று கூறியிருந்தேன்...
சில காரணங்களால்...(கொலிஜ்) இன்று எழுதி முடிக்க முடியவில்லை...
சும்மா போடுறதில அர்த்தமே இல்லை...
சனிக்கிழமை இரவு... அந்த பதிவில் ஒன்றைப் போடுவேன்...
அதை தொடர்ந்து மற்றதும் போடுவேன்...

----------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் 1973-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும்,எதிர்ப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களும் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், 69 வயதான புரட்சிக்கவி பாப்லோ நெருடா, ராணுவ நடவடிக்கையைக் கண்டு கொதித்தெழுந்தார். புதிய ஆட்சியை விமர்சனம் செய்ததால், பாப்லோ
நெருடாவுக்கு மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படாமலே மரணமடைந்தார் பாப்லோ.

அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய புரட்சிக் கவிதைகளுடன், ‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே!’ என்ற அவரது மந்திரச் சொல்லும் படிக்கப்பட்டது. அதைக் கேட்டதும்,
மக்கள் கோப‌ம் அப்படியே புதிய ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது.
பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி, பெரும் புரட்சி நடந்து, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது.

லத்தீன் அமரிக்காவில் உள்ள சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் இருக்கும் ‘பார்ரல்’ என்கிற சிறு கிராமத்தில் 1904-ம் ஆண்டு பிறந்தார் பாப்லோ நெருடா.
இவர் பிறந்த ஒரு மாதத்திலேயே அவரது தாய் மரணம் அடைய, வளர்ப்புத் தாயிடம் வளர்ந்தார். கவிதை எழுதுவதில் மிக ஆர்வமாக இருந்த பாப்லோ, பதினைந்தாவது வயதிலேயே ‘மழை எங்கே பிறந்ததோ..?’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 19 வயதில் வெளியிட்ட, ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்’ என்ற அவரது கவிதைத்
தொகுப்பு, அவருக்கு நாடெங்கிலுமிருந்து பெரும் புகழைக் கொண்டுவந்து சேர்த்தது.

அந்த வயதில் செக்கோஸ்லாவாக்கியா நாட்டின் புரட்சிக் கவிஞன் ‘நெருடா’
எழுதிய கட்டுரை ஒன்றில், ‘நாட்டில் குற்றம் நடப்பதைக் கண்டு ஒதுங்கி
நிற்பவர்கள், வாழ்வில் எதையும் சாதிக்கமாட்டார்கள். குற்றம் கண்டு
கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே! அவனால் நாட்டையே தட்டி எழுப்ப
முடியும்’ என்ற வரிகளைப் படித்தபோது, ரத்தத்தில் மின்சாரம் பாய்ந்தது போல
ஒரு துடிப்பும் உத்வேகமும் பெற்றார் பாப்லோ. நெருடாவின் ரசிகனாகி, அந்தக்
கவிஞனின் பெயரையே தன் பெயருடன் இணைத்துக்கொண்டு, ‘பாப்லோ நெருடா’ என்ற பெயரில் புரட்சிக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இருபத்துமூன்றாம் வயதீலேயே பெரும் கவிஞராகப் புகழ் பெற்று, சிலி நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ‘குற்றம் கண்டால் கொதித்தெழ வேண்டுமென’ புரட்சி விதையை மக்கள் மனங்களில் தூவினார்.

ஸ்பெயின் நாட்டில், 1936-ம் ஆண்டு உள்நாட்டுக் கலவரம் நடந்துகொண்டு
இருந்தபோது அந்நாட்டுத் தூதராக இருந்த பாப்லோ, புரட்சிப் படையினருக்கு
கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுத்தார். புரட்சியைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டி, அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஸ்பெயின். தாய்நாடு திரும்பிய பாப்லோ, அப்போதைய சிலி அதிபரின் போக்கு முதலாளித்துவத்தின் பக்கம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து, ‘நம் நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார் அதிபர்’ என்று ஆவேசமாகக் குற்றம்சாட்ட, நாட்டில் கலவரம் தூண்டுகிறார் எனக் குற்றம்சாட்டி, அவரை பொலீஸ் கைதுசெய்ய விரைந்தது. பாப்லோ உடனே நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யா, கியூபா, பொலிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கே நடந்த புரட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பொலிவியாவில் சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடா எழுதியது.
‘ஒரு கண்டத்தின் தலைவிதியையும், அதன் கனவுகளையும் உயிரோட்டமாகச்
சித்திரித்தவர்’ என்று பாப்லோவுக்கு 1971-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது. ‘தனி மனித துதிபாடலை ஒழிக்க வந்திருக்கும் எனக்கு சிலை
அமைத்துவிடாதீர்கள்’ என்று தன்னைப் புகழ வந்தவர்களிடமிருந்து விலகி
ஓடினார் பாப்லோ. குற்றம் கண்டு கொதித்தெழுந்து இறுதிவரை
போராடியதால்தான் இன்றளவும் புரட்சிக் கவிஞராக மதிக்கப்படுகிறார் பாப்லோ!

----------------------------------------------------------------------------------

3 comments:

  1. இந்த கிழட்டு பய சீக்கிரம் சாகமாட்டேன்க்ரா,இவனுக்கு இவனுக்கு குஷ்பு,ரஞ்சிதா,ஷகிலா மூலம் பாராட்டுவிழா எடுத்து,பாடையில அனுப்பனும் ,அப்பத்தான் நான் முதல்வர அமர்ந்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்க முடியும்.பேரன் தயாநிதி

    ReplyDelete
  2. பேரன் தயாநிதி21 May 2010 at 17:35

    பேரன் தயாநிதி
    இந்த கிழட்டு பய சீக்கிரம் சாகமாட்டேன்க்ரா,இவனுக்கு இவனுக்கு குஷ்பு,ரஞ்சிதா,ஷகிலா மூலம் பாராட்டுவிழா எடுத்து,பாடையில அனுப்பனும் ,அப்பத்தான் நான் முதல்வர அமர்ந்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்க முடியும்.

    ReplyDelete
  3. tnx harani... & பேரன் தயாநிதி...
    he...he... :P

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected