Total Pageviews

Friday 11 February 2011

மொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)

-------------------------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் தற்போது ஏறத்தாழ 6700 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது 100% உண்மையான தகவல் என உறுதிப்படுத்த முடிவதில்லை... காரணம், எழுத்துருவற்ற பல மொழிப்பாவனைகள் இருக்கின்றமையாகும்.
உலகின் பல பாகங்களிலும் ஆங்கிலம் முதன்மையாக பேசப்படுகின்றது... அடுத்த இடத்தை பிரென்ச் பெற்றுள்ளது... இவை பல நாடுகளில் அரசகரும மொழியாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. எனினும்... சீனமொழியே அதிகமானோரால் பேசப்படும் மொழியாக இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில்... இங்கில்ஸ், அரபு, சீனம் (மண்டரின்), ஸ்பானிஷ், ஃப்ரென்ச், ரஷய்ன் போன்ற 6 மொழிகளும் அலுவலக மொழிகளாக உள்ளன.

எனினும் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடும் போது சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக... பலர் பேசும் மொழிவேறாகவும்... தாய் மொழியை வேறாகவும் கொண்டிருப்பதால், எந்த வர்க்கத்தில் சேர்ப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------


அதிகமானோரால் பேசப்படும் 20 மொழிகள் இவைதான்...

மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்

-------------------------------------------------------------------------------------------


18வது மொழியாக எமது தமிழ் மொழியுள்ளது... இனி அதன் முக்கிய சிறப்புக்களை கொஞ்சம் பார்க்கலாம்...

தமிழ் திராவிட மொழிகளுள் முக்கியமான ஒரு மொழியாகும்... செம்மொழியாக்கப்பட்ட சிறப்பும் உடையது.
தென்னிந்தியா, இலங்கை, சிங்ப்பூர், மலேசியா, மொரிஸியஸ் நாடுகளில் வரலாற்று ரீதியாக பேசப்பட்டுவரும் மொழியாக உள்ளது. மேலும் தற்போது... உலகின் பல்வேறு நாடுகளில் கணிசமான அளவில் தமிழ்மொழி பேசப்படுகிறது. ( நாடு இல்லாததால் நாடு நாடாக அலைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்... lol :P )

சமஸ்கிரத எழுத்துக்கள் தமிழிலும் பயண்படுத்தப்படுவதனாலும்... வேறு சில காரணங்களாலும், தமிழ் மொழியானது சமஸ்கிரத மொழியிலிருந்தே தோன்றியது என்ற கருத்து உள்ளது. அது தவறான கருத்தாகும்... தமிழ்மொழியின் குழூகுக்குறியாகவே சமஸ்கிரதம் இருந்ததாக சான்றுகள் உள்ளன. ( லெமூரிய பதிவை பார்க்கவும் மேலதிக விளக்கத்துக்கு... )

2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளும், ஆத்தி சூடியும் கூட... இன்றும் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது மொழி நடை நீண்டகாலமாக குறிகிய மாற்றத்தையே அடைந்திருப்பதைக்காட்டுகின்றது.
இவ்வாறான இலக்கிய பேணல்கல் வேற்று மொழிகளில் குறைவானதாகவே உள்ளது.

( திருக்குறள் போன்றவை இலக்கிய நடையில் எழுதப்படாமல்... அக்கால பேச்சு நடையிலேயே எழுதப்பட்டும் இருக்கலாம்... அவை காலத்தால் இலக்கியமானதாகி இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், நீண்டகாலமாக குறுகிய மாற்றம் அடைந்ததாலோ என்னவோ... இன்று தமிழை தாய்மொழியாக கொண்டபோதும்.... அதை பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர் பலர்... (இது ஒரு தனிப்பதிவாகவே எழுத வேண்டிய விசயம். ) )

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 100 000 கல்வெட்டுக்களில் 55 000 கல்வெட்டுக்களுக்குமேல் தமிழில் எழுதப்பட்டவை.
பிராக்மி எழுத்துக்களுடன் நெருக்கமான தொடர்பைக்கொண்டு எழுதப்பட்டுள்ளவையே அதிகம்.. :)
தமிழ் இலக்கியங்கள் நீண்டகாலமாக நிலைத்து நிண்டமைக்கு...
ஓலைச்சுவடிகளில் எழுதி... காலம் காலமாக பிரதியெடுத்து வந்தமையும்... வாய் மொழிமூலமாக அனைத்து இலக்கியங்களையும் கற்பித்ததுமே காரணமாகும்.
த்மிழ் இலக்கணங்களைக்கூறும் தொல்காப்பியமானது கி.மு.200 ம் ஆண்டளவில் எழுதப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியதென கருதப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------

இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருந்தும்... தமிழ் மொழி முன்னோக்கிய வழர்ச்சிப்பாதையில் செல்வதாக கொள்ளமுடியாது...  இன்னும் காலம் செல்ல செல்ல... தேய்வடைந்தே செல்லும்... காரணம்... இன்றைய உலக முறைக்கேற்ற போல் நாம் மாறவில்லை...
பணத்தை நோக்கமாக கொண்டே இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது பல தளங்கள்... ஆனால், தமிழ் கல்வியை கற்பிக்கும் நோக்கம் இருப்பதில்லை.
அந்த குறையை போக்க வேண்டும் முதலில்... அப்போது தான் தமிழ் அழிவை தாமதப்படுத்தலாம்... :)

-------------------------------------------------------------------------------------------

7 comments:

  1. காலத்திற்கு தேவையான பதிவு :-)

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்
    நன்றி

    ReplyDelete
  3. சரியான பதிவு இக்காலகட்டத்திர்க்கு தேவையான பதிவு,,,,,

    ReplyDelete
  4. நல்ல பதிவு...பிழைகளைத்திருத்தி வெளியிடுங்க பிரபு...:-)

    ReplyDelete
  5. நன்றி...S.Sudharshan :) ,akulan:) ,செந்தில்குமார் :)
    -------------------------------------
    நன்றி...சின்னப்பயல் :)
    ஆம்... அதிக எழுத்துப்பிழைகள்... :( திருத்த முயற்சிக்கின்றேன்... :)

    ReplyDelete
  6. நல்ல பதிவு. தமிழ்ப் பற்று உள்ளவர்களே தமிழை வளர்க்கவும், குறைந்தது நலிந்து கோளாமல் இருக்கவும் முயல்வார்கள் எனலாம்.
    தமிழ்ப் பற்று என்பது தமிழை பயிற்று மொழியாக உயர்நிலைப்பள்ளி வரை படித்தவர்களுக்கே இருப்பதைக் காண முடிகிறது. எழுபதுகளுக்குப்பின், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகமாகி, ஆங்கில பயிற்று மொழியில் கற்பவர்களே மிக அதிகம் ஆகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலோனார் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வீட்டிற்குள் அதுவும் தாயிடம் பேசுவது மட்டுமே தமிழாக இருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் சிந்திப்பது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நினைக்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் பள்ளி பயின்றோர் இது குறித்து கருத்து தெரிவித்தால் நன்றி உடையனவனாக இருப்பேன்.

    ReplyDelete
  7. நன்றி nerkuppai thumbi ...
    நிச்சயமாக நீங்கள் சொன்னது சரி...
    நாங்கள் தமிழைக்காக்கவில்லை... :( வேண்டப்படாத மொழியாக்கிக்கொண்டிருக்கிறோம்.. :/

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected