Total Pageviews

Sunday 16 May 2010

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் (ஒரு பக்க வரலாறு )

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்
---------------------------------------------------------------------------------
அது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே
டைம் டோக் ஷோ  நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன
இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும்
அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி
இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால்
நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த
உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று
தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார்.
ஒக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வோர்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின்
மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச்சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன்கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன்இருப்பைத உணர்ந்தார். வீல்சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினைமுடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல்வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம்நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சொஃப்ட்வெயார் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும்ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நேர்ஸ்ஸை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்!

---------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
---------------------------------------------------------------------------------
அடுத்து வரும் பதிவுகளில்... 'ஏலியன்ஸ் பேய் கடவுள்..." , " லெமூரியா..." அல்லது " நொஸ்ராடாமஸ்" தொடர்களை தொடர்ந்து எழுதுவேன்... :)
---------------------------------------------------------------------------------

11 comments:

  1. He is a role model.

    ReplyDelete
  2. நல்ல பதிவு நல்ல கருத்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
  3. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
    அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
    Feel பண்ணக்கூடாது..

    ReplyDelete
  4. lishanthmithra18 May 2010 at 08:48

    really super!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  5. ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம்
    இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.
    really nice.....

    ReplyDelete
  6. நன்றி... Tamil,கரிகாலன்,பிரசன்னா,MinMini.com,lishanthmithra,S.Sudharshan...

    MinMini.com...
    சொல்லவே இல்ல...
    சுப்பர்... முயற்சி... வாழ்த்துக்கள்...
    என்னையும் ஒராலா போட்டதுக்கு நன்றி!!! நன்றீ!!!

    ReplyDelete
  7. நல்ல பதிவு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று உங்கள் வலைப் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளீர்கள், சத்தியமாக இருக்கிறார் என்பதற்கு இந்த ஆசாமியே ஒரு அத்தாட்சி. மூணு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டான் என்று சொன்ன பிறகும் இத்தனை வருடங்களாக வாழ்ந்திருக்கிறாரே அது இறைவனின் செயல்தான். அறிவியலுக்கு இவர் ஆற்றிய பங்கு என்னவென்றுதான் இன்னமும் புரியவில்லை. Richard P Feynman, Gellman ஆகியோருக்கு அப்புறம் Theoretical Physics எந்த முன்னேற்றமும் அடையவில்லை. இந்த ஆசாமி கண்ணில் காணமுடியாத, உண்மைதானா என்று சரிபார்க்கவும் முடியாத விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறான், கொஞ்ச நாளைக்கப்புறம் அப்படியே அந்தர் பல்டியடித்து மாற்றிப் பேசிக் கொண்டும் இருக்கிறான். அதுமட்டுமல்ல, இவர் கண்ணசைவை வைத்தே வெளியுலகுடன் தொடர்புகொள்ள ஒரு 'சொப்ட்வெயர்' செய்யும் அறிவையும் ஒருத்தருக்குக் கொடுத்து, பார்த்துக் கொள்ள ஒரு 'நேர்சை'யும் கொடுத்துள்ளான் இறைவன். இந்த ஆள் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்கிறான், ஆனாலும் அது சரியா தப்பான்னு யாருக்கும் தெரியாது! ‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ -இது எந்தக் கொம்பனாலும் பதிலளிக்க முடியாத கேள்வி, கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டால் மட்டும்தான் பதில் கிடைக்கும். கடவுள் மறுப்பாளர்கள் இப்படித்தான் இதற்க்கு எடக்கு முடக்காக பதில் சொல்வார்கள்.[

    ReplyDelete
  8. .[ஒரு வேண்டுகோள்:கொம்ப்யூட்டர்-Computer Voice-வொய்ஸ் software-சொஃப்ட்வெயார், Nurse-நேர்ஸ் என்று போட்டிருக்கிறீர்கள். இதெல்லாம் கூடப் பரவாயில்லை, Talk show என்பதை என்று டோக் ஷோ எழுதியுள்ளீர்கள், குழம்பிப் போய் விட்டேன்! இனி ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் போட்டுவிட்டால் சவுகரியமாக இருக்கும். மேலும் ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்பதற்கு நேரிடையாக அவர் ஆங்கிலத்தில் என்ன சொன்னார் என்றும் போட்டால் எளிதில் புரியும். நன்றி.

    ReplyDelete
  9. Hawkins is a Pressure cooker

    stephen HAWKING is his name.

    ReplyDelete
  10. நல்ல பதிவு!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected