Total Pageviews

Tuesday 2 November 2010

வேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)

பரிமாணங்கள்
--------------------------------------------------------------------------------------------
( ஒரு இடைவெளிக்கு பின்ன‌ர் எழுதுகிறேன்... ம‌ற்ற‌ ப‌ல‌ ப‌திவுக‌ளும், சில‌ர் கேட்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில்கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. முக்கிய‌மாக‌... அறிவிய‌ல்,வ‌ர‌லாற்று ப‌திவுக‌ளுட‌ன், ஏன் நியூம‌ர‌லொஜி ப‌திவு என்று கேட்டிருன்தார். அத‌ற்கு ஒரு சின்ன‌ கார‌ண‌ம் இருக்கிற‌து. ச‌ரி பிழை தெரியாது.)

--------------------------------------------------------------------------------------------

இன்று... ஏலியன்ஸ் நாங்கள் அல்ல, உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள்தான்.. என்ற ரீதியிலான சில சம்பவங்களை அல்லது கருத்துக்களை பார்ப்போம்.

முன்னைய பதிவுகள்...
போன பதிவில்...
நாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது கலக்ஷியை எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்... அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை... ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது கலக்ஷியைத்தான்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

--------------------------------------------------------------------------------------------

முதலே சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல்... நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட டெலஸ்கோப் இந்த கேள்விக்கு விடையளிக்கும்.

நவீன ரக டெலஸ்கோப்களின் மூலமாக, எமது சூரிய கிரகம், கலக்ஷியைத்தாண்டி வேறு கலக்ஷிகளைக்கூட பாக்க முடிகிறது.

அவ்வாறான... டெலஸ்கோப்களின் உதவியுடனேயே, பல கலக்ஷிகள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

அவ்வாறு பார்க்கப்பட்ட கலக்ஷிகளில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில கலக்ஷிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு கலக்ஷியின் உருவத்தைத்தான்... இப்போது நாங்கள் எமது கலக்ஷியின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது கலக்ஷியை நாம் படம் பிடிக்கவில்லை. (இப்போது எங்களது கலக்சி போன்று நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )

--------------------------------------------------------------------------------------------

இதுக்கும் ஏலியன்ஸிக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்...
கலக்ஷியில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.

ந‌ம‌து க‌ல‌க்ஷியை ஒரு அப்ப‌த்துட‌ன் ஒப்பிட‌ முடியும். அப்ப‌த்தின் சைட்டிலிருக்கும் மொறு மொறு ப‌குதியில்தான் நம‌து சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று... இந்த கலக்ஷியின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல கலக்ஷிகள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.

அத்தோடு... இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இப்படிப்பட்ட... இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.
இப்போது சும்மா எமது கலக்ஷியை ஜோசித்து பார்த்தாலே... எமது சைட்பக்கம் போல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன... அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( நாமே இருப்ப‌து என்ப‌து ஒரு திய‌ரி... )

அதேபோன்று.. எம‌து க‌ல‌க்ஷி மைய‌த்தை நோக்கிய‌ திசைக‌ளில் கூட‌ வேற்று உயிரினங்க‌ள் இருக்க‌லாம். ஆனால், அங்கு எம‌து... சூரிய‌குடும்ப‌ம் (முக்கிய‌மாக‌ பூமி) இன் கால‌நிலை இருக்க‌ ச‌ன்த‌ர்ப்ப‌ம் ஒப்பீட்ட‌ள‌வில் குறைவு. எனினும்.. அன்த‌ சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாச‌மான‌ உயிரின‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.

--------------------------------------------------------------------------------------------

அப்ப‌டியானால்... அந்த‌ உயிரின‌ங்க‌ள் எங்க‌ளோடோ அல்ல‌து நாங்க‌ள் அவ‌ர்க‌ளோடோ... தொட‌ர்புகொள்ள‌வில்லையா என்ற‌ கேள்வி எழுகிற‌து.

ம்ம்ம்ம்....
ச‌ம்ப‌வ‌ம் ச‌ரியாக‌த்தெரிய‌வில்லை... சிறு வ‌ய‌தில் வாசித்த‌து...

செய்ம‌தி ச‌மிக்ஞைக‌ளை உள்வாங்குவ‌த‌ற்காக‌ அமைக்க‌ப்ப‌ட்டிருந்த கலத்‌தில்... வித்தியாச‌மான‌ ( கிட்ட‌த்த‌ட்ட‌ "பீப்" ஒலி) ஒரு ச‌த்த‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. செய்ம‌திக் கோலாறுக‌ளினால் உருவாகி இருக்க‌லாம் என‌ முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌ போதும்... அது இல்லை என‌ உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு...மேல‌திக‌ ஆய்வுக‌ள் செய்த‌ போதுதான் க‌ண்டுகொள்ளப்ப‌ட்ட‌து... வேற்று உல‌க‌த்திலிருன்து பிர‌ப‌ஞ்ச‌த்தை நோக்கி விட‌ப்ப‌ட்ட ச‌மிக்ஞைதான் அது. சுமார் ஒரு கோடி ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மிக்ஞை அது. நாம் திரும்பி அனுப்பினால் கூட‌... இன்னும் ஒரு கோடி ஆண்டுக‌ளின் பின்ன‌ரே அவ‌ர்களால் அதை உண‌ர‌ முடியும்... அதை உண‌ர‌ அவ‌ர்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை... நாங்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை.

இதிலிருந்து, எங்கேயோ... எம‌து ப‌ரிமான‌த்தை ஒரு ப‌ரிமாண‌மாக‌ கொண்ட‌ உயிரின‌ம் இருக்கிற‌து என்ப‌து தெளிவாக‌ விள‌ங்குகிற‌து.

--------------------------------------------------------------------------------------------

அப்ப‌டியானால்... நாங்க‌ள் ஒன்றுமே அனுப்ப‌வில்லையா?

அனுப்பினோமே... :) அதை விரிவாக‌வும் மேலும் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளுட‌னும் அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.

--------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. tnx Dhosai...
    Koncham overa illaya ithu? :P

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லும் சம்பவம் நடந்தது 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி.ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது "வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த "வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம். நன்றி:தினமலர்.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119097

    ReplyDelete
  3. நன்றி...புலிகுட்டி :)
    மிக்க நன்றி... உங்கள் தகவல் மிக்க பின்னூட்டத்துக்கு.
    இந்த நியூஸ்தான் திரிபடைந்து வாசித்திருக்கிறேன்... தெளிவக விளக்கம்தந்தமைக்கு மிக்க்க நன்றி... :)
    உங்களது புளொக் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இப்படியான தகவல்களுக்காக ஏங்கி நிற்கிறது தமிழ் உலகம். :(

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected