Total Pageviews

Thursday 5 August 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி??? )... 08)

தவறை திருத்திட்டேன்... :)
---------------------------------------------------------------------------------------
நீண்ட காலமாக எனக்கு குழப்பமாக இருந்துவந்த... ஒளியின் வேகத்திலான காலப்பயணம் (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி சார்பானது.) தொடர்பான சில தகவல்களை வாசித்தேன்... கொஞ்சம் தெளிவாகி இருக்கு...
ஏற்கனவே, நான் இந்த வேகம் சம்பந்தமாக எழுதிய போது... எஸ்.எம்.எஸ் என்பவர்... எனதும், சந்துரு என்பவரது கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து சொல்லி இருந்தார். அவர் சொன்னது சரியானதாக பட்டதால்... பிறகு அவருக்கு பதில் தருவதாக கூறியிருந்தேன்... இன்று அந்த வேகம் தொடர்பாக நான் விளங்கியதை இயன்ற வரை விளக்கமாக எழுத ட்ரை பண்ணுறேன்...
---------------------------------------------------------------------------------------
நான் முதல் கூறியதன் படி...
ஒளியின் வேகத்தை தாண்டும் போது இறந்த காலத்தை அடையலாம் என்று கூறியிருந்தேன். அது உண்மை. ஆனால், ஒளியின் வேகத்தை தாண்டாமல் அண்மிப்பது தொடர்பாக ஒன்றும் தெளிவாக எழுதி இருக்க வில்லை... ( காரணம், அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வில்லை...)
எஸ்.எம்.எஸ் என்பவரின் கருத்துப்படி... நாம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் எதிர்காலத்துக்குத்தான் செல்ல முடியும் என கூறியிருந்தார்... அதுவும் சரிதான்...
---------------------------------------------------------------------------------------
தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி...

நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது... அதாவது... 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்...

உதாரணத்துக்கு...
கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...
எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்... அதாவது... வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )

அப்படி என்றால்... 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்... வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்... ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்... 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது... வெளியாளுக்கு 31 வயது).
அதாவது... அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்...
அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே... நமது எதிர்காலத்துக்குரியது...

( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது... எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்... அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்... நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்....
ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது... இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்... அதுவும் சரிதானே???? :) )
---------------------------------------------------------------------------------------
 சரி...
அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி...

அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்... ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்...
உதாரணமாக...
நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்... ஒரு 10 ஆண்டுகளில்...
பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்... வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள்.

நாம் வேகத்தை எவ்வ‌ளவு கூட்டினாலும்... எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது... ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்...
ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமாம்...
இந்த பின்னோக்கி போகும் வேகம்... இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்...

( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்... என்பது சரியா இருக்கலாம்... ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை... காரணம்... வேகமாக காட்சிகள் மாறும்... காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது... நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்... ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்... :) )

இதெல்லாம் சரி...  நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்... இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்... நம்ம தாத்தா... கொள்ளுத்தாத்தா... அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்...
ஆனால்...
ஜோசித்து பாருங்கள்... இது சாத்தியமானால்... பல குழப்பங்கள் ஏற்படும்...

இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)... பதிவு நீள்வதாலும்... நிறித்திடுறேன்...
---------------------------------------------------------------------------------------
அப்படி வேகத்தை அடைந்தால்... என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்...
இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்... விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்... அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்... விளங்காதவர்கள்... அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்... :)
---------------------------------------------------------------------------------------

12 comments:

  1. நீங்கள் எழுதி இருப்பவை ரொம்ப குழப்பமாக இருக்கு... ஒரு (அசையும் அல்லது அசையா) காட்சி உங்கள் பார்வையை அடைய ஒளியின் வேகம் தேவைப்படுகிறது, அதாவது மூன்று செகண்டுகளுக்கு முன்பு நடந்தது ஒளியின் வேகத்தால் உங்களை அடைந்து தெரிகிறது என்றால் அதே காட்சியை நீங்கள் இரண்டு செகண்டுக்குள் பார்க்கும் வேகத்தில் (ஒளியை எதிர்கொண்டு) முன்னோக்கி பயணித்து பார்த்தாலும் உங்களுக்கு கிடைக்கும் காட்சி, நீங்கள் காட்சி (அங்கு) நடப்பதற்கு முன்பே பார்த்ததாகச் சொல்ல முடியாது. அதாவது கடந்த காலம் ஒன்றினுள் நீங்கள் பயணிக்க முடியாது.

    ReplyDelete
  2. இரண்டு பக்கமும் போய்விட்டு வந்து சொல்லுங்க...யாராவது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சபாஷ்..அப்படியே அந்த Parallel Universe Theory பற்றியும் சொல்லுங்கோ..அதன் மூலம் தான் கடந்த காலத்துக்கும் பயணிக்க முடியுமாம்..!
    காலப்பயணம் பற்றி நான் திரட்டிய தகவல்கள்...(ஹி..ஹி..ஹி..சுட்டவை சுடாதவை எல்லாம் சேர்த்து...)

    ReplyDelete
  5. puriyala anna adutha pathiva etherpathirukran

    ReplyDelete
  6. Sweatha Sanjana9 August 2010 at 04:39

    I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  7. நன்றி... கோவி.கண்ணன் ... :)
    நன்றி உங்கள் கருத்துக்கு... கொஞ்சம் ஜோசிச்சிட்டு தெளிவா பதில் எழுதுறேன்...

    நன்றி...வடுவூர் குமார் ... :)
    கண்டிப்பா சொல்லுறன்... உங்களுக்கு சொல்லாமலா?

    நன்றி...D.Gajen... :)
    இதில இன்னும் கொஞ்சம் சொல்ல இருக்கு...
    அது இன்னும் தேடல தேடிட்டு கதைப்பம்... ஒரு அஸ்ரோனொமி காரர்ட கென்டக்ட் கிடைச்சிருக்கு... கேட்டு பார்ப்பம்... :)
    உங்கடைய கட்டாயம் பாக்கிறேன்....

    நன்றி...Anonymous... :)
    ஆஹ... ஓ.கே... நான் அடுத்ததில ஏலுமான வரைக்கும் எழுதுறேன்... பதிவு வரவர லேட் ஆவதுக்கு ஸொறி...

    நன்றி...Sweatha Sanjana... :)
    இணைஞ்சிடுறேன்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  8. nalla pathivu anaal thatha patty a pakkalam endru solvathu konjam over naam kaalasakarathil pinnoki ponalaum naam avargaalai kana eyalathu anaal munnoki selkayil ethir kala santhathiyarai kaana eyalum.... as per logic erantha allathu udaintha porul ottathu allathu thirumpathu

    ReplyDelete
  9. neenga solvathu sarithaan yendralum irantha kalathirku povathu sathiya matrathu .oruvar einstenidam irantha kallathirku poha mudiuma yena ketta podhu avar kuriya padhil
    " mudiyathu apadi pir kaalathil yaravthu kandu pidithu irupaarhalaanal nammai vandhu santhithu irupaarhal"
    so irandha kalathirkku poha mudiaathu

    ReplyDelete
  10. tnx.... sibi & fareed...
    Next post la answer panna try panran... back pannalaam endurathukku... :)

    ReplyDelete
  11. அய்யோடா...எத்தனை முறை கூறுவது..
    நீங்கள் பூமியில் இருந்து ஒளியின் வேகத்தில் பயணித்து
    எங்காவது சென்று திரும்பினாலும் பூமியின் நேரம் ஒன்றும் மாறுவது இல்லை.வேண்டுமானால் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நீங்கள் சனிக்கோளுக்குச் சென்று திரும்பி இருக்கலாம்.சனிக்கோளில் நடந்ததை எங்களிடம் கூறலாம்.அதை விடுத்து எங்கள் தாத்தாவின் தாத்தாவின் தாத்தாவைப் பார்ப்பீர்கள் என்று கூறுவது மூடத்தனம்..அறிவீனம்..இது புரிய குறைந்த அறிவு போதும்.

    ReplyDelete
  12. நன்றி... ராவணன்...
    ஓம்... ஐன்ஸ்ரைனும் முட்டால்தனமாத்தான் இந்த தியரியை வெளியிட்டிருக்கிறார்... இந்த விஞ்ஞானிகளும்... அதை தேவையில்லாமல் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    நானும் தேவையில்லாமல் எழுத... அதையும் நண்பர்கள் வோட் போட்டு பப்ளிஸ்பண்ணி... ஃபேஸ்புக்கில் ஸ்யார் பண்ணிக்கொண்டிருக்கிறாங்க...
    உங்களைப்போல அறிவாளிகள்தான் இந்த உலகத்தை திருத்தனும்... நீங்கள் சொல்லுங்கள்... லொஜிக் மாறாம திங் பண்ணிறம்... ( ஆட்டு மந்தைல ஒராடு கட்டையைத்தான்டினால்... அதே மாதிரிதான் மற்றவையும் தான்டும்.. கட்டை இல்லாடியும்... அந்த மாதிரி நாங்க மரபு மாறாம திங் பண்ண நீங்கதான் உதவனும்... ப்ளீஸ்...) :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected