Total Pageviews

Tuesday 11 January 2011

பறந்துபோன மனிதர்... ( ESP * மூலையும் அதிசய சக்தியும்* )

------------------------------------------------------------------------------------------
இது இந்த வருடத்தின் முதலாவது பதிவு... :)
ESP பற்றிய தொடர்பதிவின் இரண்டாவது பதிவை இடலாம் என்றிருக்கிறேன். போன பதிவில் புவியீர்ப்பு சக்தியை மீறி பறப்பது பற்றி எழுத உள்ளதாக குறிப்பிட்டிருந்தேன்... இன்று அதை ஆரம்பிப்போம்.

அமெரிக்காவில்...
மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்...
பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்... டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்... மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்... ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்...

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது... சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது... அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்... ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து... எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!

கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்... மற்றைய அறையில் இருந்தவர்களிடம்... இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்... மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரண்மாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.
இந்த சம்பவம்.... ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.

இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்... அப்போ ஆர் என்பதை பின்னர் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------
அடுத்த சம்பவம்...
உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்... இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்...
( சம்பவ இடம்... மற்றும் பெயர்கள் நினைவில்லை... வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்... தெரிந்தவர்கள் பின்குறிப்பில் சொல்லுங்கள். )

நீண்டகாலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்.... பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.
மேடையின் நடுவே இரண்டு தராசும்... மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.
முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது... கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்... 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.... அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.

அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்... அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை... இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது...
மேலும் குறுகிய நேரத்தில்... அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது... அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது... அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் .. :P

இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்... அனைவருமே வியந்தார்கள்... பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை... ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்... அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.

------------------------------------------------------------------------------------------

அது இருக்கட்டும்... இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை?
என்றால்... அதற்கு பதிலும் இல்லைத்தான்... அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?... அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்... ஒப்பீடுகளுடனும்... அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்...

அதுவரை... நான் கூறப்போகும் சம்பவங்களை ஊகித்தவர்கள் அல்லது ESP யை யூஸ்பண்ணி கண்டு பிடித்தவர்கள்.. கொமென்ட்ஸில் போடவும்... :P :)

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------
நேரம் இருந்தால் இதையும் பார்த்து கருத்து சொல்லவும்... :)


------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. very intresting, i am waiting for your next post. Pls post soon. thanks

    ReplyDelete
  2. நன்றி..kaja :)
    இந்த மாசத்திலேயே அடுத்த பகுதியும் எழுதிவிடுவேன்.. :)

    ReplyDelete
  3. very interesting..............
    go on...................

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected