Total Pageviews

Thursday 11 November 2010

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா??? :O

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா???
-------------------------------------------------------------------------------------------
ஜோசியம் பொய் பொய் என்று பொதுவா எல்லோரும் சொல்கிறார்கள்... அது உண்மையா... என்று சும்மா ஜோசித்து எழுதின பதிவு இது.
பொய் என்று சொல்கிறவர்களில் எனக்குத்தெரிந்து பல பிரிவுகள் இருக்கு...
1. தங்களை வித்தியாசமாக / நாகரீகமாக காட்ட நினைப்பவர்கள்.
2.ஜோதிடத்தில் தீமையான பலன்களை மட்டும் அதிகம் கொண்டவர்கள்.
3.ஜோதிடத்தை உண்மையிலேயே நம்பாதோர். (ஜோதிடத்தின் தவறுகள் அறிந்தவர்கள் அல்லது விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.)

முதல் 2 பிரிவும் தேவையில்லை... 3ம் பிரிவுதான் முக்கியமானது... 3ம் பிரிவை வைத்து இதை எழுதுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடம், பொதுவாக நட்சத்திரங்களையும் அவற்றின் கூட்டங்களையும் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த நட்சத்திரங்களை வைத்து... மனிதனின் வாழ்க்கை காலத்தை தீர்மானிக்க முடியும் என்பதுதான் சற்று குழப்பமானதாகவும், சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவும் இருக்கிறது.

எனினும், நாங்கள் இங்கு ஒன்றைக்கருத்திற்கொள்ள வேண்டும்.
கலீலியோவின் டெலஸ்கோப் கண்டு பிடிப்பின் பின்னரே.. விஞ்ஞான உலகில் இந்த நட்சத்திரங்கள் கோள்கள் தொடர்பான அறிவு பெரும் வளர்ச்சியடைந்தது. இது நடந்தது 17 ம் நூற்றாண்டிலேயே...
அப்படி இருக்கையில் எவ்வாறு... ஜோதிடங்கள் ஏற்கனவே இந்த நட்சத்திரங்களை தெளிவாக வைத்து கணிப்பிடப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழும்.

இதற்கு நாங்கள் இன்னும் முன்னோக்கி பார்க்க வேண்டும்...

எகிப்திய பிரமிட்டுக்களில்... அண்டத்திலுள்ள (தென் அரைக்கோலம்) நட்சத்திரங்கள் அடங்களான அனைத்தின் நிலையான இருப்பிடங்களையும் பாறைகளில் உருக்கலாக உருவாக்கும் முயற்சி நடை பெற்றதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ( சில வேளை ஏற்கனவே உருவாக்கப்பட்டு சிதைவடைந்ததைத்தான்... நாங்கள் தவறாக உருவாக்கும் முயற்சி என்கிறோமோ தெரியவில்லை. )
இதிலிருந்து எமக்கு தெரிகிறது... 
நாங்கள் இப்போது 400 வருடங்களுக்குள் உறுதிப்படுத்திய நட்சத்திரம் தொடர்பான‌ விடையங்கள்... ஏற்கனவே பண்டைய நாகரீக மக்களால் தெளிவாக அறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது என்பது.
அத்துடன் அவர்கள் எவ்வளவு அறிவில் மேம்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதும் தெரிகிறது.
( அப்படியான அறிவுச்சமுதாயம் ஏன் திடீரென அடியோடு அழிந்தது??? இந்த கேள்விக்கு இன்னொரு பதிவில் சில காரணங்களை பதிவாக இடுகிறேன்.)
-------------------------------------------------------------------------------------------
எனினும்... இந்த ஜோதிடங்கள், தெற்காசியாவையே (இந்தியா) பிறப்பிடமாக கொண்டதாக கருதப்படுகிறது...
இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே... 
காரணம், எகிப்திய நாகரீகத்தின் முன்னோடி தென்னாசிய பகுதியினூடாக் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே முன்னைய லெமூரியா கண்ட பதிவுகளில் சான்றுகளுடன் எழுதி இருந்தேன். 
லெமூரியா கண்ட அழிவில் தப்பிய மக்கள் கூட்டங்களே இந்த ஜோதிடம் தொடர்பான அறிவை பரப்பி இருக்கலாம். 
லெமூரியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் முதலில் காடாக இருந்த இந்தியாவை நாடாக்கி வாழ்ந்ததாலும்.... இன்றளவிலும் ஒரு தனி நாடாக விளங்குவதாலும் இந்தியா ஜோதிடத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
சரி... வரலாற்றை விட்டு நவீன உலகத்தோடு தொடர்பு படுத்திப்பார்ப்போம்.

இன்று... சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் முதல் கொண்டு... பல்வேறு ஊடகங்கள், அமைப்புக்கள் உலகம் முழுவதுமே சேர்வேக்களை எடுத்து... அதிலிருந்து  சில முடிவுகளை எடுக்கின்றனர்.
உதாரணமா... எந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிகம் கோபபட்டுகிறார்கள் என்றெல்லாம், 10000 இக்கு மேற்பட்டவர்களை கருத்துக்கணிப்பு செய்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதே போன்ற ஒரு மிகப்பெரியளவிலான கருத்துக்கணிப்பு... ஏன் பண்டைய எம்மை அறிவால் மிஞ்சிய(??) சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடாது? 
நாம்... சாதாரண விடையங்களில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புக்களை அவர்கள்.. பிறந்த நாள், நேரம்,இடம் என்பவற்றை வைத்தும்.... அண்ட வெளியுடன் ஒப்பிட்டும் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளது.
வாய்ப்பே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமான அறிவற்ற எண்ணம்... எங்களால்... எப்படி பிரமிட்களை அவர்கள் கட்சிதமாக உருவாக்கினார்கள் என்பதே கண்டு பிடிக்க முடியவில்லை. கி.மு 10000 ,5000 ஆண்டுகள் பழமையான இதையே தெளிவாக்க முடியவில்லை எனும் போது... லெமூரியாவை அடிப்படையாக கொண்ட சமுதாய தேடல் என்பது சாத்தியம் குறைந்ததுதானே?
(ஆனால், கண்டுகொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது.)

அப்படி, பண்டைய மக்களால்... மிகப்பெரும் கருத்துக்கணிப்பினாலும், அண்டத்துடனான ஒப்பீட்டாளும் உருவாக்கப்பட்டதே இந்த "ஜோதிடம்" என்பது எனது கருத்து.
-------------------------------------------------------------------------------------------
மேலும்... முக்கியமான ஒரு விடையம்...

சனிக்கோளில் கிட்டத்தட்ட 7 1/2 அண்டுகளுக்கு ஒரு முறை காந்த புலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்... அந்த மாற்றத்தினால் புவியின் காந்த புல ஈர்ப்பில் கூட மாற்றம் உணரப்படுகிறதாம். ( இது நவீன விஞ்ஞானம் கூறியுள்ளது.)  
அந்த மாற்றம் தான் பண்டைய ஜோதிடத்தின் படி 7 1/2 சனி என கூறப்படுகிறதாகவும் இருக்கலாம். 
(காந்த புல மாற்றங்கள் மனித மூளையை பாதிப்பது அனைவரும் அறிந்ததே... )

இன்று... சனி கிரகமாற்றம் 7 1/2 ஆண்டுகள்கொரு முறை என்று கண்டுபிட்த்த நாம்... போக போக மற்றதையும் கண்டுகொள்ளுவோம்.

என்னதான் இவளவு சொன்னாலும்... இன்று இருக்கும் ஜோதிடமுறை நிச்சயமாக மாற்றமடைந்து நம்பகத்தன்மையற்றதாகவே இருக்கும்.
இடை இடையே தோன்றிய அரசர்கள்... தமது சுய நலம் கருதி பல மாற்றங்களை ஜோதிடத்தில் செய்திருப்பார்கள். ( மேலே குறிப்பிட்ட படி 2ம் வர்க்க எதிர்ப்பாளிகள்). அதனால், இன்று நடை முறையில் இருக்கும் ஜோதிடம் பொய்யானதாக இருப்பதாகவே தோன்றுகிறது.
சும்மா... நாள் எல்லாம் சொல்லி... அன்று இப்படி நடக்கும் என்று சொல்லின்டு தெரிவதெல்லாம் சும்மா பில்டப் கேசுங்கதான்.
மேலும் பரிகாரம் என்கிறதெல்லாம் பொய்... மனத்திருப்திக்காகவும்... ஜோதிடர்களின் பணத்திருப்திக்காகவும் இடையே ஒட்டிக்கொண்ட இணைப்புக்கள்.
அண்டம் ஒருவரின் விதியைத்தீர்மானிக்கிறது என்றால்... அதை மாற்றவே முடியாதே. ( ஒரு மண்ணும் விளங்கவில்லை பதிவை படிக்கவும்... அதில் இருக்கும் சம்பவங்கள்... நாங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களா... என்ற என்னத்தை தோற்றுவிக்கும். :) )

தவறுகளை மறக்காமல் சுட்டிக்காட்டவும். மாற்றுக்கருத்துக்களை சொல்லவும்.
பிடித்திருந்தால் வோட்டும் போடவும்... :)
-------------------------------------------------------------------------------------------

12 comments:

  1. இன்றைய ஜோதிடத்தில் எனக்கும் நம்பிக்கை இல்லை. //லெமூரியா கண்ட அழிவில் தப்பிய மக்கள் கூட்டங்களே இந்த ஜோதிடம் தொடர்பான அறிவை பரப்பி இருக்கலாம்.//என்கின்ற கூற்றில் உன்மை இருக்கலாம். 1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் *Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார்.ஹெர்மப்ரோடைட்* (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வினமானது இன்றைய ஜந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில லெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    (விக்கிப்பீடியா) லெமூரியாவில் வாழ்ந்த மக்கள் லெமூரியாவின் அழிவிற்க்கு பின் இடம் பெயர்தார்கள் என்பதற்க்கும் நம்பகமான தகவல்கள் உள்ளன.

    1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).<(விக்கிப்பீடியா) *ஹெர்மப்ரோடைட் (hermaphrodite)என்றால் இரு பாலின் உடலி அல்லது ஆண் பெண்தன்மையுள்ள ஜந்து.http://en.wikipedia.org/wiki/Hermaphrodite.http://www.youtube.com/watch?v=6vNzBW0ZNzA நன்றி:விக்கிப்பீடியா. நன்றி:youtube *Book of Dzyan படிக்க:http://books.google.co.in/books?id=8Lky8T9SSbYC&printsec=frontcover&dq=Book+of+Dzyan&source=bl&ots=mUSDYt4pmX&sig=tdDayiI95uVlIWhiRFKiQ42WKA8&hl=en&ei=K8_cTN72A8eecNTB2YIM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CB4Q6AEwAQ#v=onepage&q&f=false. தொடர்ந்து உற்ச்சாகமாய் எழுதுங்கள்.உங்களிடம் நாங்கள் அநேக விஷயங்களை தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறோம்.நன்றி.

    ReplyDelete
  2. //"நாமெல்லாம் ஏற்கனவே புரோகிறாம் பண்ணப்பட்டு இயங்குகிறோமாக்கும்.//

    நல்ல பதிவு ! நம் இன்று பயன்படுத்தும் அனைத்தும் கருவிகளும் கணினி உள்பட ஏற்கனவே நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என தோன்றுகிறது ! இதில் ஜாதகம் உளவியல் மருத்துவம் செய்ய வாய்ப்பு இருக்கும் என்ன எண்ண தொடருகிறது !

    ReplyDelete
  3. I just remember Birbal and akbar story in which Birbal tries to boil the rice or dhal by using fire atleast five feet away from it!!!

    ReplyDelete
  4. நான் தினமும் படிக்கும் வலைத்தளங்களில் உங்களுடையதும் ஒன்று நீங்கள் எழுதிய ஏலியன்ஸ் பற்றிய பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.எப்படி இவ்வளவு விஷயங்களையும் சேகரித்தீர்கள்.

    நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி... புலிகுட்டி :)
    வாவ்... உங்கள் தகவல்களுக்கும் லிங்களுக்கும் நன்றி... வாசிக்க ஆர்வமாக இருந்தேன்... கிடைத்துவிட்டது... மேலும் வாசித்து விட்டு இது பற்றி லெமூரியா பதிவில் எழுதுகிறேன்...
    ஓம்... நிச்சயமாக எழுதுவேன்...
    உங்களிடமே அதிக விடயங்கள் தேங்கி நிற்கின்றனவே... நீங்கள் ஏன் பதிவு எழுதவில்லை????
    எழுதுங்கள்... தமிழில் தகவல்கள் குறைவாக இருக்கின்றன... எழுதினா...அழிவை தாமதப்படுத்தலாம்... :)
    ------------------------------------------
    நன்றி...rajan :)
    ஆம்... பண்டைய நுட்பங்கள் அப்படித்தானே இருக்கின்றன... :)
    ஓம்... இருக்கலாம்... ஆராவது இதை பெரிதாக ஆராய்ந்தால்தான் உண்டு.. :(
    ------------------------------------------
    நன்றி...Anonymous :)
    அவ்... வடிவாக நினைவில்லையே... :( வாசித்திட்டு ஜோசிக்கிறேன்... :)
    ------------------------------------------
    நன்றி...THOPPITHOPPI :)
    நன்றி உங்கள் வருகைக்கு... மாதம் 15 பதிவுகள்தான் இட முடிகிறது. :(
    எல்லாம் சின்னன்ல இருந்து வாசிச்சதுதான்... வளர்ந்தோன ஜோசிச்சதால எழுதுறேன்... அதுதான் சம்பவங்களின் இடம், காலம் என்பவற்றை உறுதியாக சொல்ல முடியவில்லை...
    நன்று வாழ்த்துக்கு... தொடர்ந்து எழுதுவேன். :)

    ReplyDelete
  6. உங்க கற்பனை சக்தி ரொம்ப கூர்மையா இருக்கு.

    ReplyDelete
  7. நன்றி... chandru2110 :) & Dhosai :)

    ReplyDelete
  8. நல்ல பதிவு ..தொடருங்கள்.!

    ReplyDelete
  9. நன்றி... சின்னப்பயல் :)

    ReplyDelete
  10. சோதிடம் பொய் என்று சொல்வது உண்மை....

    சோதிடம் உண்மை என்று சொல்வது பொய்....

    இதுதான் சோதிடம்.

    ReplyDelete
  11. thank you ....

    ReplyDelete
  12. மிக அருைமயாக உள்ளது

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected