Total Pageviews

Saturday 27 November 2010

டாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )

------------------------------------------------------------------------------------------
2040...
3ம் உலக யுத்தம் முடிவடைந்த காலப்பகுதி அது...
புதிதாக அமைக்கப்பட்ட ஹோலில்... வரலாற்று ஆய்வாலர்களும், தொல் பொருள் நிபுணர்களும்... அந்த நபரின் உடைமைகள் மற்றும் புத்தகத்தை வைத்து தீவிரமான ஆராச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்...
"எப்படி இவ்வளவு துள்ளியமாக இதை எல்லாம் கூறினார்?... எல்லாமே சரியாக இருக்கிறதே... அப்படியானால் அடுத்து வரப்போகும் அந்த அரச வம்சம் எது?" என்ற கேள்விகளே அனைவரையும் தீவிரமாக கட்டிப்போட்டிருந்தன.
அடுத்து,
மக்கள் எந்த நேரத்தில் புரட்ச்சி செய்வார்கள் என்ற குழப்பமான சூழ் நிலை என்பதால்.... அரசாங்கத்தினால் உடனடியாக ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பிக்குமாறு நெருக்கடி வேறு.

சிறிது நேரத்தில்... குழுவின் உபதலைவர் மார்க்ஸ், சம்பந்தமில்லாத இருவருடனும் ஆராய்ச்சி சாலையில் நுழைகின்றார்.
"இவர்கள் இருவரையும் வைத்து நாங்கள் இவளவு காலமாக தேடிய கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற்று விடலாம்...." என்று குழு உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு... அவர்கள் சம்பந்தமான பதிவுகள் அடங்கிய கோப்பை போட்டுக்காட்டினார்...
காட்சி முடிவில்... குழு உறுப்பினர்களின் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது. அன்று இரவே... அந்த நபர்களை ஆராய்ச்சிக்குட்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இரவு 8 மணி...
ஆய்வு கூடம் நிசப்தமாக இருந்தது... அந்த நபர் பயண்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தது...
ஒரு பத்து நிமிடத்தில் மார்க்ஸ் அந்த குறிப்பிட்ட நபர்களுடன் ( நிர்வீன் மற்றும் டேவ்) உள் நுழைகின்றார்...
முதலாவதாக நிர்வீன்... முன்வந்து அந்த பொருட்களை உத்துப்பார்க்கின்றார்... குறிப்பாக சேதமாகி உக்கிப் போய் இருந்த அந்த கோல வடிவான பொருளை...

************
4027 ம் ஆண்டு...
ரீஷியோ... ஆய்வு சாலையில்...
" ஏ.பி 455 ஃப்லைட் விபத்துக்குள்ளாகி விட்டது... வேற்றுக்கிரகத்தினரின் கதிர்கள்தான் இதற்கு காரணமாக இதுவரைக்கும் அறியப்பட்டுள்ளது. இன்னொரு முக்கிய விடையம்... அப்போது அந்த ஃப்லைட் ஹிஸ்ரி பொக்ஸ் உடன்... இறந்த காலத்தில் பயணித்துக்கொண்டிருந்தது... இதனால்... எமது சமுதாயத்திற்கும் பாரிய பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது... எந்த கதர் அதைத்தாக்கியது என்பது சம்பந்தமாக இதுவரை சர்வதேச விண்வெளி குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை..." என்ற தகவல்... அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அனைவரதும் மூளைக்கு உணர்த்தப்பட்டது...

குறிப்பிட்ட நபர் ஒருவர் "ஹிஸ்ரி பொக்ஸை" நோக்கி வந்துகொண்டிருக்கிறார்... வேறு வழி இன்றி, அழிக்காமலேயே உடனடியாக உங்கள் தொடர்புகளைத்துண்டித்து விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பீப்!!!! "

************

நிர்வீன் உசாராகிக்கொண்டு.. "இவளவும்தான் என்னால்... கூற முடிகிறது.... தலை கடுமையாக வலிக்கிறது... எனக்கு றெஸ்ட் வேண்டும்..." என்று கூறி ஓய்வறையுல் ஓய்வுக்குச்சென்றுவிட...  முடிவை எதிர்பார்த்த ஆய்வாலர்கள் மேலும் பலத்த குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

அடுத்ததாக டேவ்... அந்த மேசையின் அருகில் சென்று... அந்த நபரின் படத்தை உத்துப்பாக்கின்றார்...

************

1532 ம் ஆண்டு...
ஊரெங்கும் கொள்ளை நோய்... என்னால் பலர் காப்பாற்றப்பட்டு க்கொண்டிருக்கிறார்கள். 1534 என்னால் எவளவு முயன்றும் எனது மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை... எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது... ஊர் சொத்துக்களை விட்டு போவதற்கு முடிவுசெய்துவிட்டேன்...

ஒரு காட்டு வளி பிரதேசத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்... தூரே ஏதோ சில இரும்பு சாமான்கள் தெரிகின்றது... அதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்... 
காலில் தடக்குப்பட்ட கோலவடிவான அந்த பொருளை எடுத்து பார்த்தேன்...
அந்த கோலத்தின் ஒரு முனைவில் சிறிய ஒரு துவாரம்... அதனூடு பார்த்த போது...பல காட்சிகள்... எங்களை போன்ற மனிதர்கள் ஆனால் வித்தியாசமாக... ஒன்றுமே புரியவில்லை... நான் எங்கேயோ இருப்பது போன்ற ஒரு உணர்வு...
பத்திரமாக வேறு எவரும் அந்த இடத்தை நெருங்க முதல்... அந்த கோலத்தை எடுத்துக்கொண்டு தங்கிவதற்கு ஒரு இடம் தேடி சென்றேன்... ஒரு பாதிரியாரின் உதவியுடன் ஒரு வீடு கிடைத்தது எனக்கென...

அங்கு வைத்து அந்த கோலப்பொருளை பார்க்கையில்தான் விளங்கியது...  எமது எதிர்கால உலகத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் தான் அவை என்பது.
அதை அப்படியே வெளியில் சொல்ல எனது மனம் விருப்பவில்லை.... நான் பார்த்த எதிர்கால சம்வங்களை கதைகளாக எழுத ஆரம்பித்தேன்... 
கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினால் பலத்த எதிர்ப்பும் கொளை மிரட்டலும் வந்ததால்... நான் பார்த்தவற்றை கவிதை வடிவில் எழுதி வைத்தேன்...

நான் எழுதிய புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது... அதற்காக என்னை பிரபல ஓவியரின் உதவியுடன் வரைந்துகொண்டிருக்கிறேன்...

************
இரவு 02 மணி...

டேவ்... நீண்ட பேச்சுக்குபின் நிகழ்காலத்துக்கு வருகிறார்....  நிர்வீன் போன்றே கடுமையான தலை வலியுடன்... ஓய்வுக்கு செல்கிறார்.

அப்போது தான் ஆய்வாளர்களுக்கு உண்மை புலப்படுகிறது....
நொஸ்ரடாமஸ் கணித்ததாக கருதப்பட்டதெல்லாம்... உண்மையிலேயே... எமது எதிர்கால சமுதாயத்தால் பதிவு செய்யப்பட்ட வரலாற்று சம்பவங்கே என்பது. அதி நவீன சூரிய சக்தியில் இயங்க கூடிய அந்த கருவியில் பதியப்பட்ட அவற்றை பார்த்துத்தான் நொஸ்ரடாமஸ் எதிர்காலத்தை எழுதி இருக்கின்றார்.
நாம் நினைத்தது போன்று அவர்... நட்சத்திரங்களை மட்டும் கொண்டு கணிப்பிடவில்லை... வானத்தை அடிக்கடி பார்த்தார் என்பது... அந்த காட்சிகளில் கண்ட விமானங்களை பார்க்கும் ஆவலுக்காகத்தான்.

உடைத்து எறியப்பட்ட அந்த கருவியின் பாகங்களை வைத்துக்கொண்டு எமது நாட்டை ஆழப்போகும் அந்த அரச வம்சத்தை கண்டுபிடிக்கவே முடியாது என்ற உண்மை புரிந்து... இரவோடு இரவாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பாரிய தேடலுக்கு முடிவுகட்டிய... அதீத‌ இ.எஸ்.பீ மனிதர்களான நிர்வீனுக்கும் டேவ்கும் அரசினால் தனிப்பட்ட ரீதியில் கெளவ்ரவம் அளிக்கப்பட்டது... :)
------------------------------------------------------------------------------------------

இது எனது இரண்டாவது விஞ்ஞான புணைக்கதை முயற்சி (முதலாவதுக்கு இதை கிளிக் பண்ணவும்)... தவறுகள் இருக்கும். சுட்டிக்காட்டவும்.
இ.எஸ்.பி... மனிதர்கள் பலவகையுள்ளனர்.
இதில்... இறந்தகாலத்தை காணகூடியவர்களதும்...  எதிர்காலத்தை காண கூடியவரினததும் எண்ணம் பயண்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள்... விரைவில் "கனவும் நனவும்" அல்லது "மூளையும் அதிசய சக்திகளும்" பதிவின் இரண்டாம் பிரிவில் எழுத முயற்சிகிறேன்... :)
------------------------------------------------------------------------------------------


5 comments:

  1. வித்தியாசமாக இருக்கு

    ReplyDelete
  2. நன்றி... KANA VARO :)& jaisankar jaganathan :)

    ReplyDelete
  3. கதை நன்றாகச் சொல்லப்பட்டிருக்கு..
    எழுத்துப்பிழைகளை கொஞ்சம் சரி செய்யுங்கள் "வளாகம்" பிரபு..!

    ReplyDelete
  4. நன்றி... சின்னப்பயல்:)
    ஹீ ஹீ... நெடுக இதே பிரச்சனை தான்.. :( முயற்சிக்கிறேன்... :)

    நன்றி... Tamilulagam :)
    இணைச்சிட்டா போச்சு...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected