Total Pageviews

Thursday 4 November 2010

மனிக் டிப்ரஷன்... (மன நோய்!)

மனிக் டிப்ரஷன்...
------------------------------------------------------------------------------------------
மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது.
ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று ந்டந்துகொள்வார்கள்.
அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய்.

சந்தோச மன நிலையில், இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்கும். தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள்.
இப்படி, சந்தோஷமாக நடந்துகொள்பவர்... அடுத்த நாள், சோர்ந்து தளர்ந்து மனமுடைந்து காணப்படுவார்கள்.

நேற்று நான் ஏன் அப்படி செய்தேன், ஏன் அப்படி சொன்னேன், ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று துக்கப்படுவார்கள்.
அந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக மிக மனம்சோர்வடைந்திருப்பார்கள். இந்த நிலையில்... இவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாது இருக்கும்... அன்றாட உடல் பராமரிப்பை செய்ய மாட்டார்கள். வாழ்க்கை துளைந்துவிட்டதுபோன்று நடந்துகொள்வார்கள்.

காரணங்கள்...

பல கார்ணிகள் பின்னனியாக இருக்கலாம். அவையெல்லாம் ஒன்றுடனொன்று ஒத்துப்போவது போன்றிருக்காது.
பரம்பரை கூட இந்த நோயில் செல்வாக்கு செலுத்துவதாக கருதப்படுகிறது. குடும்ப நிலையும் காரணமாக அமைகிறது.
அதீத நினைவுகளால் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம்தான் இந்த மூட் அவுட் நிலைக்கு காரணமாக இருக்கிறது.

இன்னும் சிலர்.. இள்மைக்காலத்தில் நடந்த துன்ப நினைவுகளின் தொடரொலிகள் என்கிறார்கள். சில்லல்கள் நிறைந்த குடும்ப நிலையில் வளரும் குழந்தைகள் இந்த நோய்க்கு இலக்காவதுமுண்டு. இப்படி சீரற்ற குடும்ப நிலையில் வளர்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும்... மனப்போக்கு.. திடமில்லாததாகவும், எளிதில் உடையக்கூடியதாகவுமிருக்கும்.
ஒரு பிரச்சனை வரும் போது... அல்லாடிப்போவார்கள். பிரச்சனைக்கு முகம் கொடுக்கத்தயக்கம் என்பன இந்த நோயை உண்டாக்கும்.
மேலும்.... மிக உற்சாகம் காட்டுவதும், அளவுக்கு மீறிய செலவு, தாந்தோன்றித்தனமான நடத்தை, தப்புவதற்காக எடுக்கும் அவசர முடிவுகளும்... இந்த நோயை ஏற்படுத்தும்..

பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முரண்பாடான முடிவுகளை எடுத்துவிட்டு... அடுத்தவர் மீது... குற்றம் சாட்டுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும்.
மற்றவர்கள் மீது... கண்டிப்பு காட்டுவதும், மற்றவர்கள் மீது பிழை பிடிப்பதும், பாய்ந்து விழுவதும்... இவர்களை மற்றவர்களின் தயவிலிருந்து தள்ளிவைக்கும்.

ஒருமுகப்படுத்தாத சிந்தனைகள்... வயிற்று உளைவு... ஓங்காளம்... வாந்தி... என்பன இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
------------------------------------------------------------------------------------------
மன நோய் தொடர்பாக நான் வாசித்த புத்தகத்திலிருந்த தகவல்கள் இவை... பலருக்கு உதவக்கூடும் என்பதால் பதிவு செய்கிறேன். நல்லம் என்றால் வோட் போடவும்... :)
------------------------------------------------------------------------------------------
நன்றி :
இராஜேஸ்வரி...
பாலசுப்ரமணியம்...
------------------------------------------------------------------------------------------


7 comments:

  1. எனது தளத்திற்கும் வருகை தந்து கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் நன்றி...
    யோகி ஸ்ரீ ராமானந்த குரு :)

    ReplyDelete
  3. whats the treatment to this desease??

    ReplyDelete
  4. பயன் உள்ள் தகவல். நன்றி

    ReplyDelete
  5. நன்றி...நிலாமதி... :) & Anonymous. :)
    @Anonymous... அஹ்... அதை எழுதாமல் விட்டுவிட்டேன்... எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. useful info dear...
    Thank You

    ReplyDelete
  7. nithy thanks for the info

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected