Total Pageviews

Monday, 12 July 2010

தோமஸ் அல்வா எடிஷன் ( ஒருபக்க வரலாறு)

தோமஸ் அல்வா எடிஷன்
-------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்
தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.

மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு
விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி
செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்
பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.

எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல...படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.

உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை
அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே
இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’
பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!

1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில்
கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த
தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்
பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத
இவரது தன்மையே!
-------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
---------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------

Thursday, 8 July 2010

பழங்களிலுமா கைவரிசை... றொம்பத்தான் ஓவரா போறாங்க...:O ( படங்கள்)

---------------------------------------------------------------------------------------

இவங்க தொல்லை தாங்க முடியல...  பழத்தை எடுத்தமா... சாப்பிட்டமா... தோலை றோட்டில வீசினமா....
என்று இல்லாமல்... வேலை மினக்கெட்டு இதெல்லாம் செய்யுறாங்க... இந்த நேரத்துக்கு... எவனையாவது போட்டு கொடுத்திடமாட்டம்...

நான் ரசித்தேன்... நீங்க ரசித்தால் வோட் போடுங்க... இல்லை என்றால் கொமென்ட் போடுங்கோ...
---------------------------------------------------------------------------------------















































































































































































































































































































---------------------------------------------------------------------------------------

Tuesday, 6 July 2010

"ஏலியன்ஸ்"... பேய்... கடவுள்... (நாம் - ஏலியன்ஸ் 02 of 06)

 நாங்கள்தான் ஏலியன்ஸாக‌ இருப்பமோ!!! (Proofs)
--------------------------------------------------------------------------------------
இன்று ஒரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பதிவெழுதி இருக்கிறேன்... போன மாதம் 12 பதிவுகள்தான் இட முடிந்தது இந்த மாதம் முக்கியமான பல பதிவுகளை எழுதுவேன்... (லெமூரியா, ஏலியன்ஸ், நொஸ்ராடாமஸ் (இறுதி)...)

இன்று ஏலியன்ஸ் சம்பந்தமான சில முக்கியமான... ஆனால் சிக்கலான விடையங்களை எழுத இருக்கிறேன்... இதில் எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது... உங்களின் பின்னூட்டல்கள் மூலமாக இந்த பதிவினை பிரஜோசனமாக்குங்கள்... :)

--------------------------------------------------------------------------------------
முன்னைய பதிவுகள்...
--------------------------------------------------------------------------------------


நாங்கள்தான் ஏலியன்ஸாக இருக்கலாம் என போன பதிவில் நான் கூறியிருந்தேன்... அதை பார்ப்பதற்கு முன்னம் சில சம்பவங்களை பார்த்தால் பொருத்தமாக இருக்கும்...

1954 ம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபலமாக பேசப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின் படி....

அமெரிக்காவின்  குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் பல பகுதிகளைச்சேர்ந்த மக்களால்... தாம் விசித்திரமான உயிரினங்களை( மனிதர்களை) கண்டதாக வெவ்வேறு இடங்களில் பொலிஸ்ஸாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இவர்கள் அனைவரினதும் புகார்களிலும்... "குட்டையான உருவமும், பெரிய தலையும், நீண்ட கைகளும், விசித்திரமான நீளமான கண்களும் கொண்ட மனிதர்களை (?) தாம் கண்டதாகவும்.... அவர்கள் தம்மை கண்டதும் ஓடி மறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்...
மேலும் அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள் மயக்கமுற்று சுயனினைவின்றி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்...
சிலர்... தாம் அவர்கள் வந்திறங்கிய இயந்திரத்தை/பறக்கும்தட்டை கண்டதாகவும் கூறியுள்ளார்கள்...

( ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பலர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த தகவல்களை பதிவு செய்தமையால்... இது நம்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது...
குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் என்பதன் மூலம்... அவர்களின் வேகம் சம்பந்தமாகவும் நங்கள் இந்த பதிவுகளை கணக்கெடுக்கலாம்... )

--------------------------------------------------------------------------------------

இது போன்றே... பொதுவாக அனைத்து பறக்கும்தட்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ளது...

நாங்கள் இங்கு கவணிக்க வேண்டியது...

அவர்கள் கூறிய உடலமைப்பைத்தான்...

அவர்கள் கூறிய உடலமைப்பில்... கைகள் நீளமாகவும் உடல் குட்டையாகவும் தலை பெரிதாகவும் இருந்ததாக கூறியுள்ளார்கள்...
இதுதான் இங்கு முக்கியமானது...
ஏனென்றால், விஞ்ஞானிகள் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியில் என்ன என்ன உடல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறுகிறார்களோ... அதையொத்தே இந்த சம்பவங்களின் போது கூறப்பட்ட ஏலியன்ஸின் உருவ அமைப்பும் இருக்கிறது.... ( விஞ்ஞானிகளால் எதிர்கால மாற்றம் சம்பந்தமாக கூறப்பட்ட விளக்கங்கள் முதல் 2,3 ம் பதிவுகளில் இருக்கிறது... வாசிக்காதவர்கள் வாசிக்கவும்... :) )

அத்தோடு இதுவரை பார்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களின் போதும்...
ஏலியன்ஸின் உருவமென அடையாலம் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களிலுமே ஏலியன்ஸின் உருவ அமைப்பு மனிதனின் உருவ அமைப்பினைஜொத்ததாகவே உள்ளது. ( சில சம்பவங்களில் வேறு அமைப்பு கூறப்பட்டாலும்... அதாவது பல கைகள் என்பது போன்ற உருவங்கள் கூறப்பட்டாலும்.... அவையும் நாம் பூமியில் காணும் ஏதோ ஒரு உயிரினத்தின் சாயலை ஒத்ததாகவே உள்ளதை காணமுடியும்....)

இதன்னடிப்படையில் பார்க்கும் போது... ஏலியன்ஸ் என பொதுவாக கூறப்படும் உடலமைப்பானது எமது புலன்களால் உணரப்பட்ட உருவங்களை அடிப்படையாக கொண்டே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நான் ஏற்கனவே செவ்வாயும் மனிதனும் நாமும் பதிவில் கூறியதன் படி...

ஓரனு அமீபாவாக உருவான  உயிரின ஆரம்பம்...
கலன்களின் பிரிவின் போது ஏற்பட்ட சிறு...சிறு தவறுகளின் காரணமாகவும்... பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்கலப்பினாலும் பல உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து... இன்று உச்சக்கட்டமான பரிணாமமடைந்த மனிதன் உருவாகியுள்ளான்...
இந்த பரிணாம வளர்ச்சி நிண்டுவிடும் என கூற முடியாது... பரிணாமவளர்ச்சி என்பது தொடர்ச்சியானது... ஆகவே... குரங்கிலிருந்து மனிதன் வந்தது போன்று... மனிதனிலிருந்தும் இன்னொரு மேம்பட்ட உயிரினம் உருவாகும் என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளத்தக்க வெளிப்படை உண்மை.
நோர்மலாகவே... ஆதிகாலத்து மனிததுக்கும் நமக்கும் பல வித்தியாசங்கள் உருவாகிவிட்டன... மூக்கு , விலா எலும்பு என பல படிகளில் நாம் பரிணாம் அடைந்துவிட்டோம்...
ஹீ....ஹீ... இன்று கூட சூழல் மாற்றங்களால் தேவையற்றதாக கருதப்படும் முடிகூட கொட்டுகிற... ( இது சம்பந்தமாகவும் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம்...) மொட்டை விழுபவர்கள் இனி கவலைப்படதேவையில்லை.... ஹீ...ஹீ.... பரிணாம ரீதியில் அவர்கள் எம்மைத்தாண்டிக்கொண்டிருக்கிறார்கள்....

ஆனால்....

வேற்றுக்கிரக வாசிகளாக கருதப்படும் ஏலியன்ஸும் மனிதனின் உடலமைப்பை ஒத்திருக்கும் என கூறுவது ஒரு நெருடலான விடையம்.
ஏனென்றால்... பூமியில் அணுக்கலன்களில் ஏற்பட்ட தவறுகளால்த்தான் இன்று நாம் உருவாகியுள்ளோம்..
இதே படியில்... தவறுகள் ஏற்பட்டால்த்தான்... 2 கை,2கால்,ஒரு முகம் என மனித அமைப்பையோ அல்லது பூமியின் இயற்கை உயிரின அமைப்பையோ ஒத்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால்... இதே தவறுகள் ஏற்பட வேண்டுமெனின்... பூமி இருக்கும் அதே அண்டவெளி சூழ் நிலை இருக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் குறைந்தது... ( சாத்தியமும் இருக்கிறது... அதை இதில் கூறினால் இடம் ஓவராக நீண்டுவிடும் என்பதால் எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்...)

நாங்கள் முக்கியமாக இன்னொரு விடையத்தையும் இங்கு பார்க்கனும்...

அதாவது....
மனிதன் எவ்வளவுதான் கெட்டித்தனமானவனாக இருந்தாலும் இயற்கையின் அமைப்பை மீறி... எம்மால் சிந்திக்க முடியாது...
சும்மா பார்த்தாலே இது தெரியும்... கார்,பிளேன்,கப்பல் என எதைப்பார்த்தாலுமே ஏதோ ஒரு வகையில் இயற்க்கையாக உள்ள அமைப்பை ஒத்தே இது இருக்கிறது...
காரணம் மனிதனின் மூளையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணக்கருக்கள் இவை... இது மாறுவதற்கு சந்தர்ப்பம் மிக...மிக குறைவு...

அதனால்... கூட ஏலியன்ஸின் உருவங்களை மனிதனுடம் ( எமக்கு உட்பட்ட இயற்கையுடன் ) ஒப்பிட்டு கூறுகிறார்களாக இருக்கலாம்...

ஏற்கனவே இந்த ஏலியன்ஸின் அமைப்பு பற்றி...
கிரேக்க , எகிப்திய‌ , புராதன குகைகளில் காணப்பட்ட குறிப்புக்களைப்பார்த்திருந்தோம்...
அந்த‌ குறிப்புக்களில்... மனிதனுடன் இணைந்து செயற்படுவது போன்றுள்ளது... இது ஒரு முக்கியமான விடையம்...
காரணம்... எகிப்திய பிரமிட்களின் கட்டிட அமைப்புக்களில் பயண்படுத்தப்பட்டுள்ள... தொழில் நுட்பங்களில்... பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரங்கள்... பூமியின் விட்டங்கள்... மற்றும் சில முக்கியமான தொழில் நுட்பங்கள்... பயன்படுத்தப்பட்டுள்ளன... முக்கியமாக வட்டத்துக்கு... பயன்படுத்தப்படும்... "ஃபை ( 22/7 = 3.14...)" பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவு அவர்களுக்கு ஏலியன்ஸ் ( எதிர்கால நாம்(?) ) கொடுத்ததாக இருக்குமா...
என்பதையும்... காலப்பயணம் சம்பந்தமான சில விடையங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

பதிவு நீண்டு விட்டது...

--------------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில்... மாற்று உலகக்கோட்பாடு பற்றியும்... நமது தொழில் நுட்ப அறிவுக்கும் அவர்களின் அறிவுக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தையும்... நாம் அதை எப்போது எட்டுவோம் அன்பது பற்றியும்...
சில வியப்பான புராதன ஹிந்து, கிரெக்க சம்பவங்களையும் பார்ப்போம்... அந்த பதிவு விரைவாக எழுதுவேன்... இனி நீண்ட இடைவெளிகள் ஏற்படுவதை இயன்றவரை குறைக்க ட்ரை பண்ணுகிறேன்....

--------------------------------------------------------------------------------------

இங்கு... நான் எழுதியிருப்பது எனது கருத்துக்களைத்தான்... உங்களது பின்னூட்டங்கள்தான், இந்த பதிவினை பிரிஜோசனமாக்கும்... :)

--------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected