Total Pageviews

Saturday, 2 October 2010

நானும் பார்த்திட்டேன்... எந்திரன்... :( விமர்சனம் + டவுண்லோட் மூவி)

எந்திரன்
-------------------------------------------------------------------------------------------------
அப்பாடி... நானும்... எந்திரன் பார்த்தாச்சு... நேற்றே பார்த்தாச்சு...  காச்சலோட போய் பார்த்திட்டமாக்கும்...
நோர்மலா... இங்க... இம்புட்டு சனம் டியேட்டர்க்கு முன்னால் நிண்டதை பார்த்ததே இல்லை... ( பாஸ்கரன் ஃபிலிம்கும் 2ம் நாள் போனேன்... வெறும் 19 பேர்தான் இருந்தார்கள்... :) நேற்று... தலைவா... என்ற வாசகத்தோட எல்லாம் வந்திருந்தார்கள்...
சரி... இனி படத்தில் நான் பார்த்ததையும்... எதிர் பார்த்ததையும்... விமர்சனம் என்கிற பேர்ல எழுதிறேன்...

-------------------------------------------------------------------------------------------------

ஆரம்ப காட்சியிலேயே... ரஜனி + சந்தானம்,கருனாஸ்... ரோபோ தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்... அவர்கள் எதிர் பார்த்தது போன்றே... ரோபோ கச்சிதமாக வருகின்றது... அதற்கு... ரஜனியின் முக அமைப்பு போன்றே தோல் போடப்படுகிறது...
( அப்படி போட்டதால்தானே ரஜனி படம்... :) )
ரஜனியின் தாய் மூலமே... அதற்கு... சிட்டி என்ற செல்ல பெயரும் சூட்டப்படுகிறது...
என்ன தான் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும்... சமூக நடை முறைப்பாவை சொற்கள்... மற்றும் சூழலுக்கு பழக்கப்படுவதற்காக... சமூகத்தில் விடப்படுகிறது. கொமான்ட்களால்... உருவாக்கப்பட்டமையால்... அதானால்... ஒரு சொல்லிற்கு ஒரு அர்ததை மட்டுமே எடுக்க முடிகிறது... உதாரணமாக... டி.வி யை போட சொல்ல... போட்டு உடைக்கிறது.
சமூகத்தில்... நடமாடும் போது... ரோபோக்கலால்... ஏற்படக்கூடிய... வினை, தீவினைகளை நகைச்சுவையாக காட்டியுள்ளார்கள்... :)

இந்த ரோபோவிற்கான அங்கீகாரத்தை பெறுவதில்... ரஜனியின் புரொஃபஸரால் பிரச்சனை உருவாக்கப்படுகிறது...
அதை சரி செய்வதற்காக... ரோபோவுக்கு... உணர்ச்சிகள் கற்றுத்தரப்படுகிறது...
ஒரு கட்டத்தில்... ரோபோ சிட்டி... ரஜனியின்... காதலியான ஐஸ்வர்யாவை லவ் பண்ண ஆரம்பிக்கிறது.
அப்போதுதான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இதற்கிடையில்... ரஜனியின் புரொஃபெஸர்... ரோபோ சிட்டியுடன்... தொடர்பு கொள்கிறார்...
இருவரும் பேசிக்கிண்டிருக்கும் போது... ரஜனி இடையில்... யாருடன் பேசிக்கிண்டிருக்கிறாய் சிட்டி... என்கிற போது... அது முதல் முதலாக... தானாகெ பேசுவதாக பொய் சொல்கிறது... ( மனிதனுடன்... இணைந்து பழகியதால் ஏற்பட்ட நோய்... ஆனால், பின் கட்டங்களில்.. சிப் மாற்றப்படும் வரையுல் அது பொய் சொல்ல வில்லை என காட்டப்பட்டு சொதப்ப படுகிறது. :( )
ரஜனியின் விருப்பப்படி... அதை இந்திய இராணுவத்தில் சேர்ப்பத்தற்காக.. முண்ணோட்ட பரீட்சையின் போது... அது... காதல் வரிகளைக்கூறி... சொதப்ப... கோவமாகும் ரஜனி... அதை உடைத்து குப்பையில் போடுகிறார்...

இதற்கிடையில்... வெளி நாட்டு கங்களுடன் தொடர்புடைய புரொஃபொஸர்... உடைக்கப்பட்ட ரோபோவைத்தேடுகிறார்... அது சிக்குகிறது... சிப் மாத்துகிறார்... தானாக இயங்க ஆரம்பிட்த்து.. தனக்கென ஒரு சாம்ராஜ்ஜத்தை உருவாக்குகிறது ரோபோ...
இறுதியில்.. அதை எப்படி ஜெயித்தார்... ரஜனி என்பதை... காட்டியுள்ளார்கள்.




-------------------------------------------------------------------------------------------------

உடைக்கப்பட்ட ரோபோ... தானாக தன்னை பொருத்திக்கொண்டு... காருக்குள் ஏறுகிறதாம்... ஆருக்கு பூச்சுத்துறாங்கள்... பின்னாடி ஒரு கட்டத்தில்... கரண்ட் கட்டாகி கொஞ்ச நேரத்திலேயே... ரோபோக்கல்... செயலிழக்கத்தொடங்குகின்றன.
அப்படி என்றால்... குப்பையில் போட்டு ஒரு நாளுக்கு மேலான... ( காட்சிகளை பார்க்கவும்.) இந்த ரோபோவிற்கு எப்படி... சார்ஜ் வந்தது??? முக்கியமான இடத்தில் இந்த பிழை... அட்லீஸ்ட்... மின்னல் ஒன்று பட்டு சார்ஜ் ஆவதாக ஆவது காட்டி இருக்கலாம்.

இறுதி கட்டங்களில்.... தொழில் நுட்பத்தை கோமாளித்தனமாக காட்டியுள்ளார்கள்... அதுவும் கதை 2010 இல் நடப்பது போன்று அமைத்து... நடை முறைக்கு சாத்தியமே இல்லை என்பதை காட்டி விட்டார்கள்... ( இப்போது தான்... நினைப்பதை... எழுத்தாக்கும்... புரொசசரே கண்டு பிடித்துள்ளார்கள். )

ரோபோ... அசுர பலம்...ஓ.கே.... ஆனால், அந்த கார் ஃபைட்டின்போது... மற்ற கார்கலெல்லாம்.. அடிபட்டு நொருங்குகிறது... ரோபோ + ஐஸ் பயணிக்கும் கார் மட்டும் ஸ்ரோங்கா பாய்கிறது... பற்க்கிறது... அப்படியே கார்ட்டூன் மாதிரி...
அவளவு சுடுகிறார்கள்... ரோபோக்கு பாதிப்பில்லை ஓ.கே... ஐஸ்ஸிக்குமா????

பாட்டுகளில்... ஒன்றுதான்.. ரசிக்கும் படியான காட்சி அமைப்பு... மற்றவை... கோமாளித்தனமானது... நண்பன் சுதர்சன் சொன்னது போன்று... 100 பேர் பின்னுக்கு நின்டு ஆடுகிறார்கள்...

பெரிய பட்ஜெட்... சங்கர் படம் என்பதற்காக ஓவரா... செலவு பண்ணி இருக்கார்கள்... கதையை இன்னும் ஸ்ரோங்காகவும்... அதற்கேற்ப தொழில் நுட்பத்தில் செலவையும் கூட்டி இருக்கலாம்.

-------------------------------------------------------------------------------------------------

பெண்ணை காப்பாற்றும் காட்சியில்....
ட்ரெஸ் இல்லை... என்று ரஜனி சொல்ல... உயிர் இருக்கு... என்று ரோபோ சொல்வது... சுஜாத்தாவின் நுட்பத்தை காட்டுகிறது. ( இப்படி பல இடங்களில் வசங்கள் இருக்கின்றன.)

ஸெட்கள் எல்லாம்... உயர்தரம்... :)

எல்லாத்திற்கும் மேலாக... ரஜனியின் நடிப்பு சுப்பர்... அதுவும்... பிற் பகுதியில்... சிப் மாற்றப்பட்ட வில்லன் ரோபோ நடிப்பு + ஸ்டைல் சூப்ப்பர்ர்ர்ர்... இனியாவது... அடுத்த சுப்பர் ஸ்டார் என்று... சிலரை நினைக்கிற ரசிகர்கள்... புரிந்து கொள்ள வேண்டும்... அதற்கு அனைவரும் ரசிக்கத்தக்க "நடிப்பும்" தேவை என்பதை... :)

மொத்தத்தில்... இது ஷையன்ஸ் ஃபிக்ஷன் என்று சொல்ல முடியாது... ரஜனி படம்தான்... + சங்கர் படம்....
ஆனால்... தமிழ் சினிமாவுக்கு புதிது. உலக சினிமாவுக்கு... பழசு...

தமிழ் சினிமாவில்... தொழில் நுட்பம் வழர்ந்து விட்டது.... ரசனையும்... சிந்தனை திறனும் வள‌ரவில்லை... :(
ரஜனி ரசிகர்களுக்கு... திருப்தி... கொண்டாட்டம்... சுஜாத்தா ரசிகர்கழுக்கு... ஏமாற்றம்...

-------------------------------------------------------------------------------------------------


அட... டவுன் லோட்டும் போட்டாச்சு... கமெரா கொப்பி போல... நான் பண்ணல... வேர் பண்ணுமோ தெரியல... ட்ரை பண்ண இதை கிளிக் பண்ணவும்...  ( டொரன்ட் ஃபைல்)


-------------------------------------------------------------------------------------------------

Wednesday, 22 September 2010

பிரம்ம குமாரிகளுக் 63 ம்... ( நேரடி அனுபவம்.)

------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளுக்கு முதல்ல... அட்வான்ஸ் லெவல் எடுத்திட்டு வெட்டியா இருந்தப்ப... அம்மா பகவானின் பூசைக்கு சென்று.. அங்கு நானும் எனது நண்பர்களும் பார்த்ததை ( கேவலங்களையும் சிறு பிள்ளைத்தனங்களையும்) எழுதி இருந்தேன்...
இன்று... அதே வெட்டியாக இருந்த நேரத்தில்... "பிரம்ம குமாரிகள்" என்ற அமைப்பினரிடம் சென்றிருந்ததைப்பற்றி இன்று கொஞ்சம் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.. :)

------------------------------------------------------------------------------------------

ஒரு நாள்... மாலையில்... கிறிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தோம்... போற றோட்ல... "பிரம்ம குமாரிகள்" தியான வகுப்பு... என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். எங்களுக்கும்... நீண்டகாலமாவே.. இந்த தியானத்தை செய்தா மனம் கட்டுப்பாட்டுக்கு வரும் என்றெல்லாம்... டீச்சேர்ஸ் அட்வைஸ் பண்ணுவாங்கள்...
ஆகவே, நாங்கள் அந்த வகுப்புக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.அ

அடுத்த நாள்... காலைல 4.50 மணிக்கெல்லாம் கஸ்டப்பட்டு எழும்பி... குளிச்சிட்டு... 5.30 எல்லாம் செட்டாகி அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்த இடத்துக்கு பொய்ட்டோம்... 6 மணிக்கு தொடங்கும் என்று ஏற்கனவே விளம்பரத்தில பார்த்தம்.
வழமைக்கு மாறாமல்... அவர்களும் 6.15 எல்லாம் எங்களை ஹோலுக்குள் கூட்டிட்டு போய்... தூரத்தில நேர ஒரு லைட் எரிஞ்சு கொண்டிருந்தது... அதைப்பார்த்து தியானமிருக்குமாறு சொன்னார்கள்.
நாங்களும் ஏதோ தியானம் என்கிற பெயர்ல அதை பார்த்திட்டே அமைதியாக இருந்தோம்... ( சுற்றுப்புறம் உண்மையிலேயே அமைதியாக இருந்தது... ஆர்வமாகவும் இருந்தது.)
அந்த லைட்டின் கீழே.. ஒரு படமிருந்தது... ( நாங்கள்... அவர் தியானத்தில் பெரியவர் ஆக்கும்... அதுதான் வச்சிருக்கிறார்கள் என்று நினைத்தோம்... :)

30 நிமிடங்களின் பின்னர்... வெள்ளை புடவையுடன் ஒருவர் வந்தார்... அவர்தான் எங்களுக்கு தியானம் சொல்லித்தருபவராம்... ஒரு ஸெடியூல் தந்தார்கள்... கிழமையில் 3 நாட்கள் தியான வகுப்பு... 20 நிமிடம் தியானம்... 20 நிமிடம்... பஜனை... 20 நிமிடம் கலந்துரையாடலாம்...

இப்படி எழுதினா பதிவு நீண்டுடும்... முக்கியமானதை எழுதுறேன்...

------------------------------------------------------------------------------------------

முதல் நாள் வகுப்பு....
சில படங்களுடன் வந்து அமர்ந்தார்கள்... அதில் ஒரு படத்தில்.. பெரிதாக ஒரு வட்டம்... அதில் 4 பெரிய பிரிவுகளும்... இறுதியில்... ஒரு சின்ன பிரிவும் இருந்தது...
அவர்களின் விளக்கம்...
முதலாவது... தங்க காலமாம்... அதில் இராமர், ஜேசு (மதங்கள் கடந்தே இயங்குவதாக கூறிக்கொள்கிறார்கள்) படங்கள் போடப்பட்டிருந்தது... மிகவும் சிறந்த முறையில் ஆட்சி நடை பெற்று அனைத்து மக்களுமே சந்தோஷமாக இருந்த காலமாம் அது...
இரண்டாவது... வெள்ளி காலமாம்... இதில் முதல் காலத்தில் தவறு விட்டவர்கள் சில துண்பங்களுடனும்... பொதுவாக சந்தோஷ்மாகவும் வாழ்ந்த காலமாம்... துவார பாலகர்களின் படங்கள்...
4 ஆவ்து... இப்போது நாங்கள் இருக்கும் காலமாம்... முழுவதும் துண்பமாம்...
5 வது குறுகியகாலம்... வைரக்காலமாம்... அதறுகு எங்களை தயார்படுத்துவது தான்  இந்த மைப்பின் நோக்கம்/கடமை எல்லாமேயுமாம்....

அந்த ஒவ்வொரு காலமும்... 2500 வருடங்களைக்கொண்டதாம்... கடைசி மட்டும் 100 வருடங்களைக்கொண்ட காலமாம். அப்போ நாங்கள் கேட்டோம்... இராமாயணம்/ மகாபாரதம் நடந்த யுகமெல்லாம் நீண்டகாலத்தை கொண்டிருக்கே... நீங்கள் வெறும்... 2500 என்கிறீர்களே என்று....
அதற்கு அவர்களி பதில் சுப்பரா இருக்கும்...
பதில் இதுதான்...
" நீங்கள் எல்லாம் 63 வது பிறவியின் ஆரம்ம நிலை.. அதுதான் இப்படியான கேள்விகள் கேக்கத்தோன்றுது... "
இது மட்டும்தான் எல்லா கேள்விக்கும் பொதுவான பதில்...

நாங்கள் 63 ம் பிறவி என்பதால மட்டும்தான் இவர்களிடம் வந்தோமாம்... மற்றவர்கள்... 63 அடையலயாம்... பக்குவப்படலயாம்... 63 இல் இங்கு வந்து தூய்மை அடைந்தவர்கள் 64 ஆவது பிறவியில்... வைர காலம் எனும் சந்தோஷங்கள் மட்டுமே நிரம்பிய உலகத்தில் பிறப்போமாமாம்...

நாங்கள்... லவ் பண்ண கூடாதாம்... கல்யாணம் கட்ட கூடாதாம்... அப்போதானாம்... மற்றவர்களிட பாவம் சேராமல்..தூய்மையடைந்து... 64 பிறவியின் பின்னர்... நட்சத்திரமாவமாம்... ( ரொம்ப கேவலமான அறிவியல் தத்துவம் இது.. )

பிச்ச காரர்களுக்கு பிச்சையும் போட கூடாதாம்... போட்ட அவர்களின் பாவம் தொத்திக்குமாம்... ஆனா, அன்பா பழகனும் எல்லோருடனும் என்று இன்னொரு நேரம் அட்வைஸ்....
( இடைல ஒருக்கா... போன பிறவியில பிச்சைக்காரர்களுக்கு உதவாததால தான் இவர்கள் இந்த பிறவியில் பிச்சையா என்ரார்கள்... அப்படி என்றா... நாங்கள் இந்த பிறவியில் உதவாவிட்டால்???? கேக்கல... கேட்டா அதே 63 தான் பதில்... :) :)

ஆர் மேலயும்... பற்றிருக்க கூடாது என்பது... இவர்களின் முக்கியமான கட்டளை....
ஆனால், வகுப்பு முடிந்து சில நெரங்களில்... தம்பி நீங்கள் என்ன படிக்கிறீர்கள்... என்ர பேரப்பிள்ளை அது படிக்கிறாள்... நல்ல கெட்டிக்காறி... இப்படி கனக்க சொல்லுவார்கள்... இது பற்றில்லை போல...

------------------------------------------------------------------------------------------

அது கிடக்கட்டும் ஆர் அந்த படத்திலுள்ளவர் என்றால்... அதற்கான விளக்கம்...
ஏதோ பெயர் சொன்னார்கள் நினைவில்லை... அவர்தான் 64 பிறவிகளையும் வாழ்ந்து முடித்த ஒரே ஒருவராம்... 8 வது அவதாரம் என்றுகூடி சொல்லலாமாம்...

வைர வியாபாரியா இருந்த அவருக்கு... ஒரு நாள் திடீரெண்டு ஒரு ஒளி வந்து அனைத்து பிரபஞ்ச உண்மைகளையும் சொல்லிச்சாம்... ( அவரை ஒளி சூழ்ந்து இருந்ததை அவரது மகள் பார்த்தாவாம்... + பின்ன்ர்.... அவரின் சிஷ்யர்கள் சிலரும் பார்த்தார்களாமாம்... சாட்சி இல்ல என்று நாங்கள் சொல்ல கூடாதே... )
அவருக்கு விளக்கப்பட்ட அந்த உண்மைகள்... எங்களால புருஞ்சுக்கவே முடியாதாம் இப்போது...
அவர் அந்த உண்மைகளில் சிலதை எழுதி வைத்துவிட்டு இறந்து நட்சத்திரமாகிவிட்டாராம்...
அவர் எழுதியதை தான் முரளி என்கிற பேர்ல... தியானத்தின் பின்னர்... வாசிக்கிறார்கள்...

நாங்களும் பொழுதுபோக்காக 3 நாள் போனோம்....
4அம் நாள்... இறுதியாக நாங்கள் சென்ற நாள்...

இந்தியாவிலிருந்து சில பிரம்ம முமாரிகளும்... சகோதரர்களும்... (  ஆண்களை அப்படித்தான் சொல்லுவார்களாம்)...
நாங்கள் ஹோலில் இருந்தோம்... கதைச்சிட்டு இருக்கும் போதே... எங்கள் கொஞ்சப்பேரைக்காட்டி... இவர்கள் நல்ல பிள்ளைகள்... எங்கள் குறூப்பில் சேர்துகலாம் என்றார்கள்.... எங்களுக்கு.... வடிவேலுவுக்கு சொன்ன மாதிரி..."இவன் ரொம்ப நல்லவன்டா" அப்பிடி இருந்த்து.... அன்டையோடு எஸ்கேப்....

------------------------------------------------------------------------------------------

தியானத்தை பலரும் விரும்புவார்கள் என்றகாரணத்தினால்... அதை ஒரு சாட்டாக வைத்து... இப்படி ஒரு தனிப்பட்ட மனிதனை கடவுள் என்று கூறுவதும்... அறிவியலே இல்லாமல்... முட்டால்தனமால லொஜிக்கில்லாத பின்னனிகளைக்கூறி சமுதாயத்தை ஏம்மாற்ற முனைவது கேவலமானது...
( 8 தொடக்கம் 15 வயதான பாடசாலை மாணவர்கள் பலர் உள்ளார்கள் இவர்களது வகுப்பில்... அவர்களை பற்றற்றவர்களாக்கி... சுய சிந்தனையில்லாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)
இப்படியான... குழுக்களுக்கு... பாட சாலைகளின் முன்னால்... விளம்பரஙள் வைப்பதற்கே அனுமதியளிக்க கூடாது...

------------------------------------------------------------------------------------------

போன அம்மா பகவான் அனுபவத்தில்... ஏன் ஹிந்துக்களை பற்றி எழுதுகிறீர்கள்... மற்றைய மத்ததில் இப்படி தப்பு நடக்குது தானே... என்ற பொருளில் கொமென்ட்ஸ் வந்தது...
மற்றையவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்பதற்காக நாமும் தப்பானவர்களை வழர்க்கனுமா???
எங்களது இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை புரிந்தாலே எல்லாம் புரியும்... தூதர்கள் தேவையில்லை...
"ஏலியன்ஸ் பேய் கடவுள் விளங்க முடியா பரிமாணங்கள்" என்பதன் பிற்பகுதியில்... இவற்றிற்கான பதில் சொல்ல முனைவேன். :)

------------------------------------------------------------------------------------------

இங்கு குறிப்பிட்ட அனைத்துமே.... நேரடியாக பார்த்தறிந்த உண்மைகள்... தேவைப்படின்... இடம்... பெயர் குறிப்பிட முடியும். மற்ரைய இடங்களில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது.

------------------------------------------------------------------------------------------
அட நானும் 150 பதிவுகள் எழுதிட்டனே... :D
 150 மெம்பேர்ஸும் இருக்காங்க... நன்றி மெம்பேர்ஸ்கும்... வருகைதரும் அனைவருக்குமே... :)

------------------------------------------------------------------------------------------

Tuesday, 21 September 2010

வாவ்வ்வ்வ்... கச்சிதம்... :) (படங்கள்)

------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போன்ற பதிவை... இன்னொரு பதிவர் இட்டிருந்தார்... அது ரசிக்கும் படியாகவும்.. ஜோசிக்கும் படியாகவும் இருந்தது...
இப்போது... நான் கண்ட சில நிறுவனங்களின் லோகோக்களின் வியப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)
------------------------------------------------------------------------------------------

Eat Innovations

இதில என்ன திறமையான உருவாக்கம் இருக்கு என்று சொல்லவேதேவையில்லை...
eat என்பதற்கு ஏற்றவாறு ஒரு கரண்டியிலிருந்து ஆவி போவதுபோன்று கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------


Freedom

இறுதி M இல் இருந்து ஒரு பறவை சுதந்திரமாக பறப்பது போன்று மிக அர்த்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------



Human

பெயருக்கு ஏத்தவாறு மனித உருவாக்கத்தின் அடிப்படையான விந்தனு பெயரினுள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------


Wine Searcher

மிகச்சிறப்பாக இரண்டு வைன் போத்தல்களை குறிக்கும் அதே வேளை Searcher
எனும் சொல்லுக்கு ஏத்தவாறு கண்ணாடி போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------



Cinema Café

படச்சுருள் ஒரு கஃபே பப் போன்ற உருவத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------



One To Love

பெயருக்கு ஏத்த மாதிரி... 1 சரிந்த 2... மொத்தமாக பார்க்கையில் 1 to Love என வரும்வகையில் சிறப்பாக அமைத்துள்ளார்கள்.


------------------------------------------------------------------------------------------



Code Fish



அடிப்படை கோட்களைக்கொண்டே மீன் போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------


Enough

கடைசி h ஒரு பெரிய முடிவுக்கோட்டுக்கு மட்டு படுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------

Coffee



என்ற சொல்... கஃபே பப்பிலிருந்து வரும் புகையால் உருவாகியதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது.


------------------------------------------------------------------------------------------



LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected