பாதையூடாக உரு அசையும் விளைவு
-----------------------------------------------------------------------------------------
இதுவரை ஃப்லாஷ் ரியூட்டோரியல் பற்றி பெரிதாக ஒரு கொமன்ட்ஸ் உம் வரவில்லை. ( இமெயிலிலும் வரவில்லை).(இது வீண்வேலையோ எனத்தோன்றுகிறது.) அதனால், இவ் ரியூட்டோரியல் தொடரை விரைவில் நிறுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். மிகவிரைவில் வளாகத்தில் அனைவரும் விரும்பும் வகையில் அனைத்து விதமான பதிவுகளும் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
இனி தொடருக்குள் நுழைவோம்...
-----------------------------------------------------------------------------------------
Flash இல் ஒரு உருவை எவ்வாறு குறிப்பிட்ட பாதையூடாக அசைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.
செய்முறை-1
தேவையான அளவில் Movie ஐ உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்.செய்முறை-2
Layer 1 ல் Right Click செய்து வரும் Box ல் 7 ஆவதாக உள்ள Add Motion Guide என்பதை Click செய்யவும்.
இப்போது Layer 1 ற்கு மேலே Guide… எனும் புதிய வகை Layer காணப்படும்.
Layer 1: Frame 1 இல் Ovel tool (O)
மூலமாக stage இல் ஒரு வட்டத்தை வரையவும்.
வரையும்போது வட்டமும்,கோடும் ஒரே Layer ல் வராமல் வரையவேண்டும். கடினமாக இருப்பின் இன் மேலே காணப்படும் Lock Key ஐ பயன்படுத்தி Lock பண்ணி வரையவும். இரண்டையும் வரைந்தபின்னர் அதே Key ஐ பயன்படுத்தி UnLock பண்ணவும்.
செய்முறை-3
பின்னர், Layer 1 மற்றும் Guide… Layer இன் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select செய்து) KeyFrame இனை உருவக்கவும்.
செய்முறை-4
Layer 1 இன் 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வளைகோட்டின் முடிவெல்லையில்வைக்கவும். அதேபோல், Layer 1 இன் 1 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வளைகோட்டின் ஆரம்ப எல்லையில்வைக்கவும்.
Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காணமுடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காணப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
----------------------------------------------------------------------------------------
எதாவது விளக்கம் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்.












