Total Pageviews

Friday, 16 July 2010

எனக்கொரு உண்மைதெரிஞ்சாகனும்... :O

--------------------------------------------------------------------------------------
எனக்கொரு உண்மைதெரிஞ்சாகனும்...
அதுதான்... தமிழ், தமிழ் என்று சிலர் ஓவரா சத்தம் போடுறாங்களே... அதுக்கு பெயர் என்ன...
தமிழ் பற்றா... அல்லது தமிழ் பற்றாலராமாமா....

இதை எழுதி முடிக்கும் போது சில நேரம் சிலருக்கு... நான் தமிழ் எதிர்ப்பாளியாகி இருப்பேன்...

சரி...
கடைசியா நான் பார்த்த, வாசிச்ச சில விடையங்கள் எனக்கு விளங்கவே இல்லை... உங்களிடமிருந்து ஏதாச்சும் விளக்கம் கிடைக்கும் என்றுதான் அதை இங்கே எழுதுறேன்...

இந்தியா, ஐரோப்பா எல்லாம்... தமிழ் தமிழ் என்று... கத்துறாங்களே...
ஆனால்... கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னர்... இலங்கையில் அமுழ்ப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் பற்றி ஒருத்தரும் கதைக்கிறாங்களில்லை...

--------------------------------------------------------------------------------------

முன்வைக்கப்பட்ட சட்டத்தின் சாராம்சம் இதுதான்...
இனி புதிதாக இலங்கையில் கோவில் கட்டுவதென்றால்... அதை இலங்கை அரசால் அமைக்கப்பட இருக்கும் புதிய அமைப்பொன்றிடம் அனுமதிபெற்றே கட்ட வேண்டும்...

இதில என்ன கதைக்க இருக்கென்று நினைசாங்களோ தெரியல... ஆனால்... இது ஒரு முக்கியமான விசையம்...

இலங்கையின் அரசியல் அமைப்பின் படி...
பதவிக்கு வரும் அரசாங்கம் பெளத்த மதத்தினை பாதுகாக்க வேண்டும் ( இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே பெளத்த மதத்தினை பின்பற்றுகிறார்கள்... சில தமிழர்களும் பின்பற்றுகிறார்கள் (அது தவறென்று சொல்ல வரவில்லை)... )
இலங்கை ஒரு சமத்துவ மத அமைப்பைக்கொண்ட நாடு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே... ( ஹீ...ஹீ... இனத்துக்கே சமத்துவமில்லை மதத்துக்கா??? )

ஒரு உதாரணத்துக்கு பார்த்தால்...
இனி யாழ்ப்பாணத்திலோ... இலங்கையில் வேறு பகுதிகளிலோ... ஒரு இந்து கோவிலை... கட்டவதென்றால், நாம் புதிதாக அரசால் நியமிக்கப்பட இருக்கும் அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், அந்த அமைப்பு எப்படியும் பெளத்த சாசனப்படியே இயங்கப்போகிறது... ஆகவே... இலகுவாக அனுமதி கிடைக்கப்போவதில்லை...
அதேவேளை... ஒரு விகாரையைக்கட்ட அனுமதிக்கும் போது... உடனடியாக அனுமதி கிடைக்கும்.

ம்ம்ம்... இந்த சட்டம் நீண்டகால திட்டத்தினடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது...

போர்த்துக்கேய, ஆங்கில படையெடுப்புக்களின் போது... அவர்கள் சில சலுகைகளுடன் கிறிஸ்தவ தேவாலையங்களை நிறுவியதும்... நாங்கள் என்ன செய்தோம்... உடனடியாக மதம் மாறி அவர்கள் பின்னால் போனோம்... ( இதற்கு எமது மதத்தில் இருந்த சில மோட்டுத்தனமான கட்டுப்பாடுகளே காரணம்( உதாரணம்: சாதிகள்)... இப்போது கட்டுபாடற்றுப்போச்சு அது வேறுவிடையம்...)

இப்போது கூட.... சிலர் இந்துவாக இருந்தாலும்... கிறிஸ்தவர்களாக தங்களைக்காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்... நான் நேரடியாக இதைப்பார்த்திருக்கிறேன்... ஃபாஸனாப்போச்சு இது...
இதுக்கு அடிப்படைக்காரணம் எங்களது மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை விளங்காமையும்... விளங்கப்படுத்தாமையும்... மற்றது... கிறிஸ்தவ மதத்தின் நவீனத்தன்மை... உதாரணம்... கோட்டு... சூட்டு....

கிறிஸ்தவராக எப்படி நாம் மாறினமோ அதே போல்... ஒரு சிறு பகுதியாவது காலப்போக்கில் பெளத்தமாக மாறும்... காரணம், பெளத்தம் அடிப்படையில் இந்துவிலிருந்து ஆரம்பமாகி... சமத்துவமான உலக வாழ்க்கைக்கேற்ற கருத்துக்களைக்கொண்டுள்ளமையால்... இலகுவாக மதம்மாற்ற முடியும்...
அதேவேளை... மதம்மாற்றுகையில் இலங்கை அரசின் அடிப்படை நோக்கமான சிங்களமயமாக்கலும் நடைபெறும் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை...

இங்கு இந்துக்களுக்கு சார்பாக நான் எழுதி இருகிறென்... மதமற்றவர்களாக தமிழர்கள் கருதப்பட்டாலும்... அவர்களில் ஆதிக்கம் செலுத்திய மதம் இந்துமதம்தான்... ஆகவே... நான் தமிழர்களை இந்துக்களாக குறிப்பிட்டுள்ளேன்...

--------------------------------------------------------------------------------------

அடுத்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையும் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதைக்காட்டுகிறது...

அமுழாக இருக்கும் இந்த சட்டத்தின் படி...
இனி இலங்கையில்... அரச ஊழியர்கள்... கட்டாயம் இரண்டு பாசைகளும் பயின்றிருக்க வேண்டும்...

அதன்  முதற்கட்டமாக சிங்கள ஊழியர்களுக்கு... தமிழ் பயிற்றுவிக்கப்பட இருக்கிறதாம்...
இரண்டாம் கட்டமாக தமிழ் ஊழியர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது...

இதுவும் ஒரு ரெக்னிக்கலான விடையம்தான்...

அதாவது... இந்த கற்பித்தல்கள் எல்லாம் முடிந்த பின்னர்...
யாழ், தமிழ் பகுதிகளில் பெரிய பதவியில் இருப்போருக்கு சிங்களத்தில் சுற்றறிக்கைகளை அனுப்பினாலும்... சிங்களம் கற்ற அவர்களால் அதை வாசிக்க முடியும்... எனவே... பேசாமல் சைன் வச்சுட்டு தான் உண்டு தன்ற வேலையுண்டு என்டு இருந்துடுவார்கள்...

எனவே, இலங்கை அரசின் நீண்டகாலத்திட்டத்துக்கமைய இலங்கையை தனிச்சிங்கள மயமாக்கும் இலக்கு இலகுவாகவும்... நுட்பமாகவும் நிறைவேறப்போகிறது....

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போதுதான்... தமிழ் மொழி அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்...
அந்த ஒப்பந்தத்திலிருந்த வடக்கு கிழக்கு மாகாணம் சம்பந்தமான சரத்து எப்படி மீறப்பட்டதோ... அதே படியில் மீற முடியும்...

ஹீ...ஹீ... இந்தியா, சீனாவுக்கு பயந்து இந்த ஒப்பந்தத்தில் என்ன மீறினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்... பிறகு... இலங்கை சீனாவுக்கு சார்பாக செயற்படும் என்கிற பயம்...
அதே மாதிரி.... மத்திய அரசுக்கு எதிராக ஒரு சவுண்கூட கொடுக்க மாட்டார்கள் தமிழ் நாட்டு ஆளும் கட்சியினர்... அவர்களுக்கு தமது ஆட்சி கவிண்டுடுமோ என்கிற பயம்...




--------------------------------------------------------------------------------------

மொத்தத்தில் தேவையான விடையங்களுக்கு நாங்கள் குரல் கொடுக்க மாட்டோம்...
நடக்க சந்தர்ப்பமே இல்லாத விடையங்களைப்பற்றி வாய்கிழியப்பேசுவோம்...
இதுக்கு பெயர்தான் தமிழ் பற்றா...

இந்த பதிவில் கனக்க எழுத நினைத்தேன்... பதிவு நீளமாகிவிட்டது...
ஃபேஸ்புக்கில் தமிழை வைத்து நடக்கும் கூத்தையும் ( நல்லதும் செய்கிறார்கள் சில குழுவினர்... )
சமீப காலமாக... தமிழ் பற்று என்கிற பேர்ல அர்த்தமில்லாமல் நடக்கும் சில விடையங்களையும்...
ஐரோப்பியரின் தமிழ் பற்று எந்தளவுக்கு இருக்கிறது...
என்பதையெல்லாம் எழுதனும்...
எழுதுவேன்...
--------------------------------------------------------------------------------------

Thursday, 15 July 2010

நடந்தது இதுதான்... குருதி...

குருதி
-------------------------------------------------------------------------------------
இது நடந்தது 400 வருடங்களுக்கு முன்னர்... ஆனால், இன்று உலகம் இயங்கிக்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது.

1578 ம் ஆண்டு...
இங்கிலாந்தில் பிறந்தார் ஹார்வே... தனது ஆரம்ப படிப்பை ஒக்ஷ்ஃபோர்ட் பல்கலைக்களகத்தில் பயின்றுவந்தார்.
ஈரோப் மத்திய‌ மருத்துவ அமைப்பின் பரிந்துரையினால் இவரை இத்தாலியில் புகழ்பெற்ற "பாடோ" யூனிவெர்சிட்டி அழைத்தது. அங்கு தனது மேற்படிப்பைத்தொடர்ந்தார் ஹார்வே.

1602 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ஹார்வே... எலிசபெத் மகாராணியின் தனிப்பட்ட மருத்துவராக பணியாற்றிய மருத்துவரின் மகளை திருமணம்செய்துகொண்டார். 1618 ம் ஆண்டு கிங்ஸ் சார்ல்ஸ் 1 இன் பிரதான மருத்துவராக நியமனம் கிடைத்தது. ( அதற்கு முன்னரே கிங் ஜெம்ஸின் ஃபிஸிசியனாக பணியாற்றினார்.)

அரச மருத்துவராக நியமனம் கிடைத்தமையினால் ஹார்வே தனது ஆராச்சிகளை இலகுவாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அவரை நீண்ட நாட்களாக குழப்பிவந்த மனிதனின் குருதிசுற்றோட்டம் தொடர்பான ஆராச்சிகளில் நேரடியாக இறங்கினார்....

-------------------------------------------------------------------------------------

அதுவரைகாலமும்...

1500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க ஃபிஸிஸியன் கலனால் எழுதப்பட்ட நூலிற்கமையவே மனிதனின் குருதிசுற்றோட்டம் இருக்கிறது என நம்பப்பட்டது...
கலானின் கருத்துப்படி... உணவு ஈரலிலினால் குருதியாக மாற்றப்பட்டு உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதற்கு தசை துணையாக இருக்கிறது என்பதேயாகும். ( நரம்புகலில் காற்றுமட்டுமே இருப்பதாக நம்ப்பட்டதாம்... )

இந்த கொள்கை நீண்டகாலமாக வில்லியம்ஸ் ஹார்வேயை குழப்பத்துக்குள்ளாக்கியிருந்தது.
அதனால்... அவர் தனது ஆராச்சியில் மும்முரமாக ஈடுபட்டார்... இதற்காக அவர் சில விலங்குகளை ஆராச்சிக்குட்படுத்தினார்.

அப்போது... விலங்குகளில் இரண்டுவிதமான நரம்புகள் இருப்பதை கண்டுகொண்டார்.
அந்த இரண்டு நரம்புக்கலங்களையும் பார்க்கும் போது...  ஒன்றில் இரத்தம் அதிகமாக பீச்சியடிக்கப்படுவதையும் மற்றதில் குறைவாக இருப்பதையும் அவதானித்தார்.... அதேவேளை... இரண்டினது செயற்பாடும் ஒரே நேரத்தில் இருப்பதைக்கண்டு கொண்டார்.
இதிலிருந்து, இரண்டுவகை நரம்புகளுமே பொதுவான ஒரு அமைப்புடன் தொடர்பு பட்டிருக்கும் என்பதையும்... அது பம்பி போல் தொழிற்படும் என்பதையும் உணர்ந்துகொண்டார்.

அவர் கண்டு கொண்ட நரம்புகள் இவைதான்...
1> நாளம் ( இது அசுத்த ரெத்தத்தை... அதாவது... உடலெங்கும் கொண்டுசெல்லப்பட்டு ஒட்சிசனின் செறிவு குறைக்கப்பட்ட ரெத்தத்தினை கொண்டுசெல்லும் நரம்புக்கலம் (??) )
2> நாடி ( இது சுத்தரெத்ததை கொண்டு செல்லும்... அதாவது... நுறையீரலினுதவியுடன் ஒட்சிசனேற்றப்பட்டு இதயத்திலிருந்து புறப்படும் புது ரெத்தத்தி கொண்டுசெல்லும்... )

( இந்த நரம்புகளை முதலில் கண்டுகொண்டது இவரில்லை... ஆனால், அவற்றின் விளக்கங்களை தெளிவாக கூறியது இவர்தான்.... அதற்கு முன்னர் அவை ஒன்றுடனொன்று தொடர்பற்றதென்றும்.... ஒன்று ஈரலை மையமாகவும்... மற்றையது மூளையை மையமாகவும் வைத்து இயங்குவதாக கருதப்பட்டது. )

1625 ஆண்டு வில்லியம்ஸ் ஹார்வே தனது பல கட்ட ஆராச்சிகளின் பின்னர்...  மனிதனின் முதலாவது விஞ்ஞான பூர்வமான குருதிசுற்றோட்ட தொகுதியை வரைந்தார்.
தனது இந்த கண்டுபிடிப்பை வெளியிட நினைத்த போதுதான் பெரிய பிரசனையே எழுந்தது...

சேர்ச்சிலிருந்து இவரின் இந்த கண்டுபிடிப்பிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.... காரணம், இதையத்தை வெறும் பம்பி என்று இவர் தனது அறிக்கையில் எழுதி இருந்தமைதான்.
இதனால் இவரின் அரச மருத்துவர் பதவி பறிக்கப்பட்டது. இவர் வரைந்த குருதி சுற்றோட்டத்தொகுதியினை கண்ட மக்களும் இவரிடம் மருத்துவம் பெற முன்வரவில்லை...

இவளவு நெருக்கடிகளுக்கு மத்திவிலும்... 1628 ம் ஆண்டு... ஒரு சிறிய பப்ளிஸரின் உதவியுடன் தனது கண்டு பிடிப்பினை 78 பக்கங்கள் கொண்ட ஒரு மெல்லிய புத்தகமாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியில் வெளியிடப்படது... விஞ்ஞான மொழி அது என்பது ஒரு புறமிருக்க... இங்கிலாந்தவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருந்தது.

22 வருடங்கள் கழித்து ஈரோப்பிய மருத்துவ அமைப்பினால்... அவர் வெளியிட்ட உண்மை... ஏற்றுக்கொள்ளப்படது.

வில்லியம்ஸின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட முடியாமல் போன சில விடையங்களை 1670 ம் ஆண்டில் இத்தாலியை சேர்ந்த மார்ஸிலோ என்பவர் நிறைவு செய்தார்...
( ஹேர்வியின் காலத்தில் மைக்ரோஸ்கோப் இல்லாமையே இதற்கு காரணம்... அவர் இறந்து 3 வருடங்களின் பின்னர் அக்குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டன.)

-------------------------------------------------------------------------------------

இந்தப்பதிவு... ஆருக்காவது பிரஜோசனப்படும் என்று நினைத்தால் வோட்போடுங்க...
தவறுகள் இருந்தால் மறக்காம கொமென்டில் பொடுங்கோ...

-------------------------------------------------------------------------------------

Monday, 12 July 2010

தோமஸ் அல்வா எடிஷன் ( ஒருபக்க வரலாறு)

தோமஸ் அல்வா எடிஷன்
-------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்
தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.

மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு
விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி
செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்
பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.

எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல...படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.

உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை
அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே
இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’
பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!

1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில்
கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த
தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்
பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத
இவரது தன்மையே!
-------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
---------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected