Total Pageviews

Friday, 27 January 2012

செயற்கை உறுப்பு மனிதர்கள்!



இங்கு நீக்கள் பார்க்கப்போகும் வீடியோவில், உடலின் பல பாகங்களை செய்ற்கையாக பொருத்திய மனிதரை ( பெயர்:  Leonard McQueeny) காண முடியும். 
அவுஸ்திரேலிய மருத்துவவிஞ்ஞானிகளின் முயற்சியூடாக இந்த செயற்கை உடல் உறுப்பு மாற்றும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 
இந்த திட்டத்தின் மூலம், விபத்துக்களின் போது உடல் உறுப்புக்களை இழந்த நபர்கள் அதனை செயற்கையாக பொருத்திக்கொள்ள முடியும். ( தேவையான போது கழற்றிக்கொள்ளவும் முடியும்!!!) 
அவரவர் உடல் நிறம்,தோலின் தன்மைகேற்ப பொருத்தக்கூடியதாக இருப்பதனால் பார்வைக்கு வித்தியாசம் தெரிவதில்லை. ( இந்த முறை மிகுந்த பணச்செலவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.) 
 
நேரடியாக எலும்பில் பொருத்தப்படும் சில நட்டுக்களின் மூலம் உறுப்புக்கள் பொருத்தப்படுகின்றன. வீடியோ இணைப்பை பாருங்கள் புரியும்.

1.5 பவுண்ட் கட்டியை முகத்திலுடைய பெண் பிள்ளை... காரணம் என்ன? (வீடியோ)


Grateful Regina (கிறதஃபுல் ரெஜின) எனும் 15 வயது நிரம்பிய பெண் பிள்ளைக்கு ஏற்பட்டிருந்த விகார நோய் பற்றியே இன்று பார்க்கப்போகிறோம்.

சாதாரண முகத்துடனேயே இக் குழந்தை பிறந்துள்ளது. எனினும், இரண்டு வார காலத்தின் பின்னர் அக் குழந்தையின் இடதுபுற கன்னம் வீக்கமடையத்தொடங்கியது. இடது கண்ணும் அதனுடன் கூடிய கண் பகுதியுமே இப்படி திடீர் வீக்கமடைந்தது.

உடனே அக் குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களை நாடினர். சிறு குழந்தையாக இருந்ததால் 3 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
3 வருடங்களின் பின்னர், பிள்ளையை பரிசோத்தித்த போது அக் கழலை மூளையுடன் தொடர்புடையதாகையால், பிள்ளையின் உயிரிற்கு ஆபத்தாக முடியும் என்ற காரணத்தால் மருத்துவர்கள் சத்திர சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

நாட்கள் ஆக ஆக அக் கழலை பெரிதாகிக்கொண்டே செல்லத்தொடங்கியது. 1.5 பவுண் நிறையளவு வளர்ந்தது. அத்துடன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 மில்லி லீட்டர் அளவு இரத்தம் வெளியேறத்தொடங்கியதுடன். அக் கழலையில் இருந்து சீளும் வரத்தொடங்கியது.
இதனால், அப்பிள்ளையின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிப்படையத்தொடங்கியது. இரத்தம், சீள் என்பன வாய்,மூக்கினுள் புகத்தொடங்கியது.

இதுபோன்ற நோய்கள் ஏற்பட....

Wednesday, 25 January 2012

"ஏலியன்ஸ் றிட்டேன்ஸ்" - ஏலியன்ஸ்,பேய்,கடவுள் - ( பரிமாணங்கள் -14)




சுமார் ஒரு வருடத்திற்குப்பின்னரான ஏலியன்ஸ் தொடர்பான பதிவு இது. பதிவுகளை இடையில் நிறுத்தியமைக்கு மன்னித்துக்கொள்ளவும். ஏலியன்ஸ் பேய் கடவுள் பகுதியின் 14 ஆவது பாகம் இது. ஏலியன்ஸ் பற்றியதே.

இவ்வளவு நாட்களாக ஏலியன்ஸ் வருகைகள், ஏலியன்ஸ் தொடர்பான பண்டைய சான்றுகள், யார் ஏலியன்ஸ் என்பதை பார்த்துக்கொண்டிருந்தோம். தற்போது...

உலகில் பல மர்மங்கள் இன்றுவரை நீங்காமல் நிலைத்திருக்கின்றன. நாம் அன்றாட வாழ்க்கை, சினிமா, பிரச்சனைகள் என்ற குறுகியவட்டத்திற்குள் இருப்பதனால் அவற்றை அறியக்கூட முடிவதில்லை.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது " NAZCA - Lines ( நஷ்கா கோடுகள்) / மர்மக்கோடுகள் " பற்றியது. நஷ்க்கா கோடுகள் என்பது உலகின் மேற்புறத்தில் மர்மமான முறைகளில் வரையப்பட்டுள்ள சில உருவங்கள். இவை ஏன் வரையப்பட்டன? எப்போது வரையப்பட்டன? யாரால் வரையப்பட்டன என்ற கேள்விகள் இன்றுவரை தெளிவுபடுத்தப்படாமல் நிலைத்து நிற்கின்றது. ( தொழில் நுட்பம் எவ்வளவுதான் வள‌ர்ந்திருந்தாலும் பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளையும் உட் கருத்துக்களையும் இன்றுவரை புரியமுடிவதில்லை உதாரணம் பிரமிட்டுக்கள்! )


அக்கோடுகளையும் அவற்றிற்கும் ஏலியன்ஸிற்கும் என்ன தொடர்பு என்பதையும் பார்ப்போம்.
முதலில் " நஷ்கா - பேரு - கோடுகள்" ஐப்பார்ப்போம்.


மேலதிக சுவார்ஷ்யங்களை முழுமையாக வாசிக்க, இதை கிளிக் பண்ணுங்கள் :) ( எனது இணையமுகவரி!)


LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected