Total Pageviews

Tuesday, 16 November 2010

மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே! (ஒரு பக்க வரலாறு... :) )

ஜே.கிருஷ்ணமூர்த்தி
------------------------------------------------------------------------------------------
நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.
‘‘நான் ஒரு புலியின் மீது ஏறி அமர்ந்துவிட்டேன். இறங்க முடியாமல் தவிக்கிறேன்’’ என்றார் இந்திரா.
‘‘புலியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதையும் அறிந்திருப்பீர்களே..?’’ என்றார் ஜே.கே.
‘‘அப்படியானால், என்னை நான் மாற்றிக்கொள்ளத்தான்
வேண்டுமா?’’ என்று இந்திரா கேட்க,
‘‘மாறுதல் என்பது தாற்காலிக சந்தோஷம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது.மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்றார் ஜே.கே.

அதன் பின்னர், நெருக்கடிநிலை விலக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, பல்வேறுவழக்குகளில் கைதாகி, இந்திரா ஜெயிலுக்குப் போனார். மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘‘நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு விழிப்பு உணர்வு அடைந்து, சோதனைகளைத் தாங்கிக்கொள்வது என முடிவு எடுத்தேன். அதன் பலனாகவே, மீண்டும் எனக்கு வெற்றி கிட்டியிருக்கிறது’’ என்று மனம் திறந்து சொன்னார் இந்திரா.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது
குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில்
தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செய‌லாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்
கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.

‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று... எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.
மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.

ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
------------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ

------------------------------------------------------------------------------------------

Friday, 12 November 2010

டெக்ஸ்ட் லைன் டியூட்டோரியல்... (ஃபோட்டோ ஷொப் )

ஃபோட்டோ ஷொப் 
------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத்தேவையான அளவில்... ஃபைலை ஓபின் பண்ணிக்கொள்ளவும். பக்ரவுண்ட் கறுப்பாக போடவும்.
இதற்கு Ctrl + N ஐ கிளிக் பண்ணவும்.

T ஐ அழுத்தி டெக்ஸ்டை தெரிவு செய்து... உங்களுக்கு டிசைன் பண்ண வேண்டிய பெயரை ரைப் பண்ணவும். ( தடிப்பான எழுத்தை தெரிவு செய்யவும் :) ) ( Press "T" key)

பின்னர் எழுத்து உள்ள லேயரை.. Ctrl ஐ அழுத்தியவாறே கிளிக் பண்ணவும்.
அடுத்து... அந்த லேயருக்கு மேலாக.. புதிதாக ஒரு லேயர் போடவும்.
அடுத்து... Edit ஐ கிளிக் பண்ணி Stroke போகவும்... வெள்ளை களர் செலக்ட் பண்ணி... Width இக்கு 2 கொடுத்து ஓ.கே பண்ணவும்.
( Edit -> Stroke : Width =2 // Colour = White )

இப்போ போடர்கள் எல்லாம் வெள்ளை களர் லைனாக இருக்கும்.
படத்தில் காட்டப்பட்டவாறு... L ஐ கிளிக் பண்ணி..  Add to Selection ஐ செலக்ட் பண்ணி ஒவ்வொரு எழுத்தின் மூடப்பட்ட இடங்களையும் தெரிவு செய்து அழிக்கவும். :)

அடுத்து... ஒரு லேயரை இந்த போர்டர் லேயருக்கு மேலாக போடவும்.அந்த லேயரில்... B ஐ கிளிக் பண்ணி... அந்த லைன்களுக்கு மேலாக உங்களுக்கு பிடித்தமான களரைக்கொடுக்கவும். (படங்களை பார்க்கவும். ) பிரஸ் பண்ணி முடிந்ததும்...

லேயரின் நோர்மலுக்கு பதிலாக மல்டி கொடுக்கவும். ( படத்தை பார்க்கவும்.)
(Press "B" key // choose Colour // Layer "Normal"  Layer "Multi" )

இப்போது றேஸர் டூலால் முனைவுகளை அழித்து மெருகூட்ட வேண்டும். (இது மேலதிக செய்கைதான்.)
E ஐ அழுத்தி ரேஸர் டூலை தெரிவு செய்யவும்... வெட்டப்பட்ட முனைவுகளை  ஃபெதர் பிறஸ் மூலமாக அழிப்பதன் மூலம் அழகை கூட்டலாம்.
( Press "E" )

அடுத்தும் மேல் படி முறை போலவே.. Blur tool (Smudge tool) ஐ  தெரிவு செய்து... தேய் அல்லது இழு பட்டது போன்ற விளைவை உருவாக்கவும்.



அவளவும்தான் முக்கியமானது... இனி உங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ளவும்.
 ------------------------------------------------------------------------------------------
விளங்காதவர்கள் பி.எஸ்.டி ஃபைலாக‌ இதை கிளிக் பண்ணி... எப்படி செய்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------
கீழே உள்ளது நான் செய்தது. :)
பெரிதாக பார்ப்பதற்கு படத்தை கிளிக் பண்ணவும்.
------------------------------------------------------------------------------------------

Thursday, 11 November 2010

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா??? :O

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா???
-------------------------------------------------------------------------------------------
ஜோசியம் பொய் பொய் என்று பொதுவா எல்லோரும் சொல்கிறார்கள்... அது உண்மையா... என்று சும்மா ஜோசித்து எழுதின பதிவு இது.
பொய் என்று சொல்கிறவர்களில் எனக்குத்தெரிந்து பல பிரிவுகள் இருக்கு...
1. தங்களை வித்தியாசமாக / நாகரீகமாக காட்ட நினைப்பவர்கள்.
2.ஜோதிடத்தில் தீமையான பலன்களை மட்டும் அதிகம் கொண்டவர்கள்.
3.ஜோதிடத்தை உண்மையிலேயே நம்பாதோர். (ஜோதிடத்தின் தவறுகள் அறிந்தவர்கள் அல்லது விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.)

முதல் 2 பிரிவும் தேவையில்லை... 3ம் பிரிவுதான் முக்கியமானது... 3ம் பிரிவை வைத்து இதை எழுதுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடம், பொதுவாக நட்சத்திரங்களையும் அவற்றின் கூட்டங்களையும் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த நட்சத்திரங்களை வைத்து... மனிதனின் வாழ்க்கை காலத்தை தீர்மானிக்க முடியும் என்பதுதான் சற்று குழப்பமானதாகவும், சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவும் இருக்கிறது.

எனினும், நாங்கள் இங்கு ஒன்றைக்கருத்திற்கொள்ள வேண்டும்.
கலீலியோவின் டெலஸ்கோப் கண்டு பிடிப்பின் பின்னரே.. விஞ்ஞான உலகில் இந்த நட்சத்திரங்கள் கோள்கள் தொடர்பான அறிவு பெரும் வளர்ச்சியடைந்தது. இது நடந்தது 17 ம் நூற்றாண்டிலேயே...
அப்படி இருக்கையில் எவ்வாறு... ஜோதிடங்கள் ஏற்கனவே இந்த நட்சத்திரங்களை தெளிவாக வைத்து கணிப்பிடப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழும்.

இதற்கு நாங்கள் இன்னும் முன்னோக்கி பார்க்க வேண்டும்...

எகிப்திய பிரமிட்டுக்களில்... அண்டத்திலுள்ள (தென் அரைக்கோலம்) நட்சத்திரங்கள் அடங்களான அனைத்தின் நிலையான இருப்பிடங்களையும் பாறைகளில் உருக்கலாக உருவாக்கும் முயற்சி நடை பெற்றதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ( சில வேளை ஏற்கனவே உருவாக்கப்பட்டு சிதைவடைந்ததைத்தான்... நாங்கள் தவறாக உருவாக்கும் முயற்சி என்கிறோமோ தெரியவில்லை. )
இதிலிருந்து எமக்கு தெரிகிறது... 
நாங்கள் இப்போது 400 வருடங்களுக்குள் உறுதிப்படுத்திய நட்சத்திரம் தொடர்பான‌ விடையங்கள்... ஏற்கனவே பண்டைய நாகரீக மக்களால் தெளிவாக அறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது என்பது.
அத்துடன் அவர்கள் எவ்வளவு அறிவில் மேம்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதும் தெரிகிறது.
( அப்படியான அறிவுச்சமுதாயம் ஏன் திடீரென அடியோடு அழிந்தது??? இந்த கேள்விக்கு இன்னொரு பதிவில் சில காரணங்களை பதிவாக இடுகிறேன்.)
-------------------------------------------------------------------------------------------
எனினும்... இந்த ஜோதிடங்கள், தெற்காசியாவையே (இந்தியா) பிறப்பிடமாக கொண்டதாக கருதப்படுகிறது...
இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே... 
காரணம், எகிப்திய நாகரீகத்தின் முன்னோடி தென்னாசிய பகுதியினூடாக் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே முன்னைய லெமூரியா கண்ட பதிவுகளில் சான்றுகளுடன் எழுதி இருந்தேன். 
லெமூரியா கண்ட அழிவில் தப்பிய மக்கள் கூட்டங்களே இந்த ஜோதிடம் தொடர்பான அறிவை பரப்பி இருக்கலாம். 
லெமூரியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் முதலில் காடாக இருந்த இந்தியாவை நாடாக்கி வாழ்ந்ததாலும்.... இன்றளவிலும் ஒரு தனி நாடாக விளங்குவதாலும் இந்தியா ஜோதிடத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
சரி... வரலாற்றை விட்டு நவீன உலகத்தோடு தொடர்பு படுத்திப்பார்ப்போம்.

இன்று... சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் முதல் கொண்டு... பல்வேறு ஊடகங்கள், அமைப்புக்கள் உலகம் முழுவதுமே சேர்வேக்களை எடுத்து... அதிலிருந்து  சில முடிவுகளை எடுக்கின்றனர்.
உதாரணமா... எந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிகம் கோபபட்டுகிறார்கள் என்றெல்லாம், 10000 இக்கு மேற்பட்டவர்களை கருத்துக்கணிப்பு செய்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதே போன்ற ஒரு மிகப்பெரியளவிலான கருத்துக்கணிப்பு... ஏன் பண்டைய எம்மை அறிவால் மிஞ்சிய(??) சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடாது? 
நாம்... சாதாரண விடையங்களில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புக்களை அவர்கள்.. பிறந்த நாள், நேரம்,இடம் என்பவற்றை வைத்தும்.... அண்ட வெளியுடன் ஒப்பிட்டும் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளது.
வாய்ப்பே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமான அறிவற்ற எண்ணம்... எங்களால்... எப்படி பிரமிட்களை அவர்கள் கட்சிதமாக உருவாக்கினார்கள் என்பதே கண்டு பிடிக்க முடியவில்லை. கி.மு 10000 ,5000 ஆண்டுகள் பழமையான இதையே தெளிவாக்க முடியவில்லை எனும் போது... லெமூரியாவை அடிப்படையாக கொண்ட சமுதாய தேடல் என்பது சாத்தியம் குறைந்ததுதானே?
(ஆனால், கண்டுகொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது.)

அப்படி, பண்டைய மக்களால்... மிகப்பெரும் கருத்துக்கணிப்பினாலும், அண்டத்துடனான ஒப்பீட்டாளும் உருவாக்கப்பட்டதே இந்த "ஜோதிடம்" என்பது எனது கருத்து.
-------------------------------------------------------------------------------------------
மேலும்... முக்கியமான ஒரு விடையம்...

சனிக்கோளில் கிட்டத்தட்ட 7 1/2 அண்டுகளுக்கு ஒரு முறை காந்த புலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்... அந்த மாற்றத்தினால் புவியின் காந்த புல ஈர்ப்பில் கூட மாற்றம் உணரப்படுகிறதாம். ( இது நவீன விஞ்ஞானம் கூறியுள்ளது.)  
அந்த மாற்றம் தான் பண்டைய ஜோதிடத்தின் படி 7 1/2 சனி என கூறப்படுகிறதாகவும் இருக்கலாம். 
(காந்த புல மாற்றங்கள் மனித மூளையை பாதிப்பது அனைவரும் அறிந்ததே... )

இன்று... சனி கிரகமாற்றம் 7 1/2 ஆண்டுகள்கொரு முறை என்று கண்டுபிட்த்த நாம்... போக போக மற்றதையும் கண்டுகொள்ளுவோம்.

என்னதான் இவளவு சொன்னாலும்... இன்று இருக்கும் ஜோதிடமுறை நிச்சயமாக மாற்றமடைந்து நம்பகத்தன்மையற்றதாகவே இருக்கும்.
இடை இடையே தோன்றிய அரசர்கள்... தமது சுய நலம் கருதி பல மாற்றங்களை ஜோதிடத்தில் செய்திருப்பார்கள். ( மேலே குறிப்பிட்ட படி 2ம் வர்க்க எதிர்ப்பாளிகள்). அதனால், இன்று நடை முறையில் இருக்கும் ஜோதிடம் பொய்யானதாக இருப்பதாகவே தோன்றுகிறது.
சும்மா... நாள் எல்லாம் சொல்லி... அன்று இப்படி நடக்கும் என்று சொல்லின்டு தெரிவதெல்லாம் சும்மா பில்டப் கேசுங்கதான்.
மேலும் பரிகாரம் என்கிறதெல்லாம் பொய்... மனத்திருப்திக்காகவும்... ஜோதிடர்களின் பணத்திருப்திக்காகவும் இடையே ஒட்டிக்கொண்ட இணைப்புக்கள்.
அண்டம் ஒருவரின் விதியைத்தீர்மானிக்கிறது என்றால்... அதை மாற்றவே முடியாதே. ( ஒரு மண்ணும் விளங்கவில்லை பதிவை படிக்கவும்... அதில் இருக்கும் சம்பவங்கள்... நாங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களா... என்ற என்னத்தை தோற்றுவிக்கும். :) )

தவறுகளை மறக்காமல் சுட்டிக்காட்டவும். மாற்றுக்கருத்துக்களை சொல்லவும்.
பிடித்திருந்தால் வோட்டும் போடவும்... :)
-------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected