Total Pageviews

Wednesday, 6 October 2010

எனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் )

-----------------------------------------------------------------------------------
இதெல்லாம்....எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு? :)

-----------------------------------------------------------------------------------

Tuesday, 5 October 2010

பெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமராலொஜி : P)

சுட்ட நியூமராலொஜி 
------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையுள்ளவர்கள் படிங்க...:) நம்பிக்கை இல்லாதவர்கள்.. :D

------------------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களுக்கு பின்னர்... ஏற்கனவே சுட்டு எழுதிய நியூமரலொஜியை... மீண்டும்... புதிய பகுதியூடாக எழுதுகிறேன்.
போன முறை... பிறந்த திகதிக்குரிய குணங்களை சுட்டேன். இந்த முறை... உங்களது... தனித்தனி பெய்ர்களுக்குரிய பலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

அதற்கு முதல் உங்களது பெயருக்கான... நம்பரை கண்டறியும் முறை... இதுதான்...

எண்களை பார்க்கும் போது...  உங்களது இனிசலுக்கும்... சேர்த்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக...
C.VALAAKAM
3+4+1+3+1+1+2+1+4 = 20
( எண்களுக்குரிய... நம்பர்கள் அருகில் தரப்பட்டுள்ளன.)

------------------------------------------------------------------------------------------

இனி... முதலாவதாக... இன்று...  கூட்டெண்... 10,19,28,37,46 வருபவர்களின்... குண‍ நலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 10
இவ்வெண் உடையவர்கள்... கண்ணியமும், கீர்த்தியும் உடைய மனிதர்கள். வாழ்க்கையில் நிதானமும்... தன்னம்பிக்கையுமிருக்கும். வாழ்க்கையில் அதிஷ்ட மாறுதல்கள் அடிக்கடி ஏற்படும். ஒன்று 0 உடன் சேர்வதால்... சகடஜோகம்.  சக்கரம் போல் வாழ்க்கை அமையும். சுலபமாக பிரசித்தமாவார்கள். எல்லாக்காரியமும் பிரசித்தமாக கூடியதாகையால்... நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். மன மகிழ்வான வாழ்க்கை உண்டு. பணத்தட்டுப்பாடு வராது.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 19
இவ்வெண் உதய சூரியனை குறிப்பதால் அஸ்தமனமில்லை. பொழுது ஏற‌ ஏற... அதிகப்படுத்தும் சூரிய வெளிச்சம் போல...  வாழ்க்கை மேன்மை அடைந்துகொண்டு செல்லும். ஒரு திட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் இவர்கள்... நல்ல வாழ்க்கைத்துணைவரை அடைவர் என்றும் சக்தி இவர்களை பிரியாது.
வயோதிப காலத்திலும்... இளைஞர்போல் சுறுசுறுப்பாக இருப்பர். கடைசிவரை வாலிபராக இருப்பார். சுகானுபவங்களில் நேர்மையே இவர்களுக்கு வெற்றியளிக்கும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 28
வாழ்க்கையின் ஆரம்பத்தில்... முன்னேற்றத்தையும் சுகத்தையும் தரும் இவ்வெண் நேர்மறையான தன்மைகளையுடையது. எக்காரியமாயினும்... போட்டிகளும்.. சிரமங்களுமுண்டாகும். வாழ்க்கையை திரும்பதிரும்ப தொடங்க நேரிடும். மிக வேகமாக முன்னேற்றமடைவர்... கடைசியில் எல்லாத்தையும் இழக்க நேரிடும்.
நண்பர்களாலும்... உறவினர்களாலும்... எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடன் திரும்ப வருவது அபூர்வம். கஷ்டப்பட்டு சேமித்த பொருட்கள் எல்லாம் எதிர்பாராமல் இழக்க நேரிடும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 37
சாதாரன நிலையில் உள்ளவர்களைக்கூட... மேன்மையான நிலைக்கு கொண்டுசெல்லும்.  வசீகரமானது. காதலில் வெற்றியைத்தரும். தன் அந்தஸ்துக்கு மேம்பட்டவரால் விரும்பப்படுவர். ஆண், பெண் இருபாலரிலும்... விசேடமான நண்பர்கள் ஏற்படுவர். நண்பர்களால் வாழ்க்கை முன்னேற்றமடையும். எதிர்பாராமல்... அதிஸ்டகரமான கூட்டாளிகள் முதலுடன் வந்து சேர்வார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த வசதியாக வாழ்க்கை உண்டாகும்.
கவர்ச்சிகரமாக இருப்பர்.  மிக உண்ணதமான நிலையில் உள்ளவர்களை வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி வீழ்த்திவிடும். பேராசை குறைக்கப்பட வேண்டும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் :46
எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைய உதவும் இவ்வெண். வயது ஏற ஏற செல்வமும்... அந்தஸ்தும் அதிகரிக்கும். இந்த எண் உடையவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

------------------------------------------------------------------------------------------

அடுத்து...  55,64,73,91,100 ஐ கூட்டெண்ணாக உடையவர்களுக்கு பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

நன்றி...  வி.ஏ.சிவராசா  

------------------------------------------------------------------------------------------

Monday, 4 October 2010

ஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File

-------------------------------------------------------------------------------------------
இன்று... சிம்பிலா... ஃபோட்டோஷொப்பில்... நாமாகவே... ஒரு வெக்டர் டைப்... படத்தை எப்படி... உருவாக்குவது என்ப‌தை... எழுதி இருக்கிறேன்...

-------------------------------------------------------------------------------------------

உங்களுக்குத்தேவையான அளவில்... வேக் ஸீட்டை உருவாக்கி கொள்ளவும்...
( Ctrl + N)

பக்ரவுண் லேயரை அன்லொக் பண்ணவும்.
இதற்கு... லேயரில் உள்ள... பக்ரவுண்ட் லேயரை இருதடவை கிளிக் பண்ணி ஓ.கே பண்ணவும்.

மீண்டும் அதே லேயரில்... டபிள் கிளிக் பண்ணவும்... லேயர் ஸ்டைல் ( Layer Style ) பனலுக்கு போகும்...
அங்கு... Gradient overlay ஐ டிக் பண்ணி... Gradient ஐ கிளிக் பண்ணவும்... பின்னர்... உங்களுக்கு தேவையான ஒரு கலரை... ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் இடத்தில் செலெக்ட் பண்ணவும்...  கருப்பாக இருப்பதில்... அதே கலரின்... லைட்டான கலரை செலெக்ட் பண்ணவும்...

அடுத்து பக்ரவுண்ட் லேயருக்கு மேலாக... இன்னொரு லேயரைப்போட்டு... M கீயை அழுத்தி ( வட்டம் ஏற்கனவே செற்பண்ணுங்கப்பா... எழுதுற்து ரொம்ப கஷ்டமா இருக்கு... ) வட்டம் வரைந்து கொள்ளவும்...
அடுத்து...  Ctrl + Alt + D ஐ அழுத்தி ஃபெதர்... 5 கொடுக்கவும்....
இனி... அந்த லேயரை கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ணியது... இந்த லேயருக்கு மேலாக இருக்கும்.)
இப்போது... முதலாவது வட்டலேயரில் வட்டத்தை செலக்ட் பண்ணி... Ctrl + Alt+ D ஐ அழுத்துவதன் மூலம்...40,50 ஃபெதர் கொடுத்து ஓ.கே பண்ணவும்...

அடுத்து... B ஐ அழுத்தி பிறஸ் டூலை எடுத்து... அதில்... Bursh ஐ செலெக்ட் பண்ணவும்...
பின்னர்.... இரண்டு வட்ட லேயர்களுக்கு பின்னால்.. ஒரு லேயரைப்போட்டு... அதில் பிறஸ் டூலை... கீறி/கிளிக் பண்ணி கொள்ளவும்...

அடுத்து... அனைத்து லேயருக்கு மேலாக... ஒரு புதிய லேயரை போடவும்...
அதில்... வட்டத்தின் கீழ் வளைவை வெட்டுமாறு ஒரு பெட்டி வரையவும்.. ( M ஐ அழுத்துவதன் மூலம்.)
பிறகு... விருப்பமான/பொருத்தமான கலரைக்கொடுக்கவும்...
(பிறஸ் டூலில்... ஃபெதரான... வட்ட பிறஸ்ஸை செலக்ட் பண்ணி... வெள்ளை நிறத்தால் ஒரு வட்டம் போட்டு... ஃபெதர் பண்ணினால் இன்னும் சுப்பர்... )

அடுத்து... ஒரு பி.என்.ஜி( PNG) ...  படத்தை... கொண்டுவந்து... வட்டமான 2 லேயருக்கும் மேலாக போட்டு... செட் பண்ணவும்... ( இதுவும் செய்தது தான்... செய்த முறை எழுதுவது சிரமம்... )

அடுத்து ஸடோ கொடுக்க வேண்டும்...
கடைசியாக போட்ட... லேயரை... கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ண பட்ட லேயர்... அனைத்துக்கும் மேலாக இருக்க வேண்டும்... )பிறகு...Ctrl +T  ஐ அழுத்தி... Edit--> Transform சென்று... Skew ஐ செல‌க்ட் பண்ணவும்...
பிறகு கீழுள்ளவாறு... மூலைகளை எழுத்து அமைத்துக்கொள்ளவும். ( இதற்கும் ஃபெதர் கொடுத்து... ஒப்பாஸிட்டியை குறைக்கவும்... )
(பழைய டியூட்டோரியல்களில் இருக்கிறது முறை... அல்லது இவரின்"http://velang.blogspot.com/" இல் பாக்கவும்... :) )

அதே போன்ற முறையில்...  ஏற்கனவே பிறஸ் டூலால் போட்ட டிசைன் லேயரை கொப்பி பண்ணி... ஸடோ முன்னர் செய்தது போன்று செய்யவும்.

இறுதியாக இப்படி வரனும்... :)

-------------------------------------------------------------------------------------------

PSD இக்கு... இதை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணலாம்.

-------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected