Total Pageviews

Saturday, 5 December 2009

உங்களது ESP ஐ ஆறிவது எப்படி? - (மூளையும் அதிசய சக்திகளும் 06)

ங்களது ESP ஐ ஆறிவது எப்படி?
----------------------------------------------------------------------------------------
ஒரு சிறிய விடுமுறையின் பின்னர் மீண்டும் வளாகத்திற்கு வந்துள்ளேன்.  நீண்ட நாட்களாகவே "உங்களது ESP ஐ ஆறிவது எப்படி?"  என்பது அடுத்து வரும் என எதிர்பார்ப்பை கூட்டிவிட்டு  அதை பற்றிய தகவ‌ல்களை போடாமல் விட்டமைக்கு மன்னிக்கவும். இன்றைய தினம் அதைப்பற்றிய தகவல்களை பார்க்க ஆரம்பிப்போம். ESP ஐ அறிவதற்கு பல முறைகள் காணப்படுகின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

முதலில்...


நீங்கள் இப்பரிசோதனையை செய்வதற்கு இன்னொருவர் துணைக்கு தேவை. (உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களை தேர்ந்தெடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், இருவரினதும் மனம் ஒருங்கிணைத்திருப்பது மிகவும் முக்கியமானது.)

முதலில் ஒவ்வொருவரும் தனித்தனியாக 100 வெவ்வேறு உருக்களைக்கொண்ட ஒரே அளவான காட்களை (அட்டைகளை) தனித்தனியே எடுக்கவும். (அதாவது, 100 ஒரேமாதிரியான 2 செட்கள்(தொகுதிகள்)). இவற்றுடன் தலா ஒரு பேப்பரும், பென்சிலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், இருவரும் ஒரு அறையில் வெவ்வேறு மூலைகளில் போய் அமரவும். ( ஆரம்பத்தில் அமைதியான அறையாக விருப்பது நல்லது.)

இனித்தான் உங்களது ஐ அறிவதற்காண பரிசோதனைகளை செய்யப்போறீர்கள்.


முதலில் உங்களில் ஒருவர் அந்த அட்டைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, அவ் அட்டையிலுள்ள உருவை பார்த்து மனதில் ஆழமாக நினைக்கவேண்டும்.( அவ் உரு சம்பந்த‌மான காட்சிகளை மனதில் கொண்டுவரவேண்டும்.) தான் பார்த்த அவ் உருவின் பெயரையும் ஒரு தாளில் எழுதிவைக்க வேண்டும். அதே சமயம் மற்றவர் மனதில் வேறு ஒரு நினைவும் இல்லாமல் உருவை பார்த்துக்கொண்டு இருப்பவர் என்ன உருவை பார்க்கிறார் என்பதை அறியும் மனனிலையில் இருக்க வேண்டும்.  30 - 40 வினாடிகளில் அவர் என்ன உருவை பார்த்திருப்பார் என மனதில் தோன்றுவதை எழுதிவைக்கவேண்டும்.
இவ்வாறே 100 காட்களையும் மாறி‍ மாறி நினைத்து தாளில் குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இருவரும் தாம் நினைத்ததையும் மற்றவர் ஊகித்து எழுதியதையும் சரி பார்க்கவும்.

(ஒரு விஷயத்தை வார்த்தையால் சொல்வதைவிட எழுதுவது மிகக்கடினம்..... இதை எழுதும் போது தான் விளங்குகிறது.)

உங்களது ஐ தீர்மானிப்பதற்கான ஓர் அளவு கோல் வேண்டாமா...?

நீங்கள் 20-25 சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்றால் அது விசேட அறிவு இல்லை. நிகழ்தகவு (Probability) விதியின்படி சாதாரணமாகவே 100 காட்களை நினைக்கும் போது 20-25 ஒத்துப்போவது சகஜமானது.


30 க்கு மேல் சரியாக இருக்கிறது என்றால் ஏதோ ஒன்று உங்களுக்குள் இருக்கிறது என்று சொல்லலாம்...
50 க்கு மேல் என்றால் நீங்கள் சமுதாயத்தில் ஒரு சாதாரன மனிதரல்ல விஷேட சக்திகள் உள்ள மனிதர் என கூறலாம்...
80 க்கு மேல் என்றால் நீங்கள் ஒரு முனிவருக்கு சமமானவர்!?!

மீண்டும் மீண்டும் இவ்வாறான பரிசோத‌னையை செய்யும் போது எமது மூளையில் ஒழிந்திருக்கும், இயங்காமலிருக்கும் அச்சுரப்பி இயங்க ஆரம்பிக்கும் என்கிறார்கள். அதற்கு, எங்களுக்கு பொறுமையும், திடமான மனதும் தேவை.( முக்கியமாக எம்முடன் சேர்ந்து செய்ய இன்னொருவர் தேவை!)

மற்றைய இலகவான முறைகளை இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்...
தொடரும்...
--------------------------------------------------------------------------

---இனி---

முட்டால் என முடிவெடுக்கப்பட்ட அதிசய சிறுமி.

எமது ESP ஐ அறியும் முறைகள்.

Wednesday, 2 December 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 06


மங்கும் விளைவு.

-------------------------------------------------------------------------------------------------------------
Flash இல் ஒரு உருவை எவ்வாறு மங்க வைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு மங்க வைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் மங்க வைக்க‌ முடியும்.

செய்முறை-1

தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.

File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்





செய்முறை-2
Layer 1: Frame 1 இல் Ovel tool (O)         மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்

 Layer 1: Frame 1 ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Movie Clip ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Movie Clip -> Ok)


( இச்செய்முறைக்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளது. )

பின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.







செய்முறை-3

10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும்.
பின்னர், Flash தொகுப்பின் கீழ்பகுதியில் காணப்படும் Filters ஐ Click பண்னவும்.

(Properties அருகில் காணப்படும்) 




அதில் உள்ள + குறியை அழுத்தி 6 ஆவதாக‌ காண‌ப்படுனம் Blur ஐ Click
பண்னவும்.






அங்கு ஏற்கனவே காணப்படும் Blur X, Blur Y, Quality  இற்கு பதிலாக உங்களுக்கு தேவையான பெறுமானங்களை Set செய்யவும்.

செய்முறை-4

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.





இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 1 December 2009

நான் பார்த்தேன்! - (மூளையும் அதிசய சக்திகளும் 05)

நான் பார்த்தேன்!
----------------------------------------------------------------------------------------
இவ்வளவு நாளாக சீரியசான விடையங்களை மட்டும் பார்த்து வந்த நாம். இன்று ஒரு மாறுதலுக்காக உரு வெளித்தோற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் (ஜேம்ஸ் தர்பர்)  நகைச்சுவையுடன் ஜோசிக்கவும் வைக்கும் கதையைப்பார்ப்போம்....


ஒரு கணவன் அதிகாலை எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு "யூனிகார்கன்...! யூனிகார்கன்...!" என கத்தினான். (யூனிகார்கன் என்பது தலையில் கொம்புமுளைத்த அதிசயமான ஒரு மிருகம்.) உடனே கணவன் சமையல் கட்டில் உள்ள மனைவியை அழைத்து  " பாரு.. பாரு ... தோட்டத்தில் யூனிகார்கன் மேயுது..." என கூறினான். மனைவி ஓடிவந்து பார்த்துவிட்டு. " யூனிகாகனாவது ஒண்ணாவது.... இப்போ எல்லாம் காலையிலேயே தண்ணிபோட ஆரம்பித்திட்டீங்களா?" என முறாய்த்தாள்.

"சேச்சே... நிஜமாகவே பார்த்தேன்!"
"அது ஒரு புராணக்கற்பனை. அப்படி ஒரு மிருகம் உலகத்தில் நிஜமாகவே இருக்காது! நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!"
"இல்லை நான் பார்த்தேனே!"
"எப்படி பார்த்திருக்க முடியும்? உங்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?"

இப்படியே, வாக்குவாதம் தொடர்ந்தது.


அடுத்த வாரம் முழுவதும், கணவன் இதை பற்றியே வரும் போகும் நண்பர்களிடமெல்லாம் பேசத்தொடங்கினான். போதாதற்கு அயளவர்களிடமும்  பேசத்தொடங்கினான்.  மனைவிக்கு கெட்ட கோபம் வந்த‌து.

" நீங்க யூனிகாகன் புராணத்தை நிப்பாட்ட போறிங்களா இல்லையா? கடைசி முறையாக கேட்கிறேன்!"
"இல்லை நான் பார்த்தேனே எப்படி பொய் சொல்ல முடியும்?"
" அது... ஒரு...கற்பனை  மிருகம்ம்ம்ம்ம்..........."
" நான் பார்த்தே.........!" சொல்லி முடிப்பதற்குள் தலையை அக‌ப்பைபிடி பதம் பார்த்தது.

நேரடியாக மனோத்துவ டொக்டரிடம் சென்ற மனைவி " என் கணவன் யூனிகார்கனை பர்த்தேன் என்கிறார்..."
" மெடம், யூனிகார்கன் ஒரு கற்பனை மிருகம்" இது டொக்டர்.
"அந்த கருமத்தை தான் நானும் சொன்னேன். அனா அவர் "நான் பார்த்தேன்" என்று போற வாறரவர்களிடம் எல்லாம் சொல்கிறார். அண்டைக்கு ஒரு சின்னப்பையனிடம் சொல்லி இருக்கிறார். அவ‌ன் என்னட்ட வந்து " ஐயாவ கூட்டிடு போய் எதுக்கும் கோயிலில வீபூதி அடிச்சிடுங்க" என்கிறான்.

டொக்டர் ஜோசித்தார்.


" இந்தா பாருங்கம்மா உங்க கணவருக்கு சித்தப்பிரமை. இப்படியே விட்டா முத்தி போயிடும். நாளைக்கு பொலிசோட வாறன்" எனக்கூறிவிட்டு, ஒரு தடிமமான மருத்துவ புத்தகத்தை புரட்டி. எங்கேயாவது யாராவது "யூனிகார்கனை பார்த்தேன்..." என்று சொல்லியிருக்கிறார்களா என தேடினார். யாரும் இல்லை.

மறு நாள் காலை, பொலிஸ் ஜீப் வெளியே நிக்க. டொக்டர் வீட்டினுள் நுழைந்து கணவனிடம் பேச்சுக்கொடுத்தார்.
" என்ன சார், இப்படி இருக்கீங்க"
"என‌க்கென்ன எனக்கென்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கேன்..."
" நீங்க யூனிகார்கனை பார்த்தீர்கள் என்று சொல்கிறீங்களாமே...? உங்க மனைவி சொன்னா..."
"யூனிகார்கனா... நானா... பார்த்தேனா...  என்ன சொல்லுறிங்க.. டொக்டர்!"
"ஓம்.. ஓம்.. உங்க மனைவி அப்ப‌டித்தான் சொன்னா.."
"டொக்டர்! யூனிகார்கன் என்பது ஒரு கற்பனை மிருகம். அதை எப்படி பார்க்கமுடியும்?!!"
"அப்ப நீங்கள் பார்த்தா இவங்க‌ சொன்னது...?"
"அவ இப்படித்தான். கொஞ்சம் கிறுக்கு..." என்றவாறே ஒரு விரலால் தலையில் சுற்றிக்காட்டினார்.


சொன்னது தான் தாமதம் " என்னையா சொன்னா...?" என்றவாறே பால் காய்ச்சும் பானையை கணவனுக்கு நேரே வீசி எறிந்தாள் மனைவி.
"இது தான் டொக்டர் தினமும்"
தொடர்ச்சியாக மனைவி தனது ஆத்திரத்தை அடக்கமுடியாமல் பொருட்களை வீசிக்கொண்டிருந்தாள்.

இனி சொல்ல வேண்டுமா...

"பேஷ‌ன்ட் கட்டுப்பாட்டை மீறீட்டார். உடனே எடுத்துச்செல்லுங்கள்." இது டொக்டரின் கட்டளை.
மனைவி கை,கால்களுக்கு கட்டுப்போடப்பட்ட நிலையில் வானில் ஏற்ற‌ப்பட்டாள்.

இதிலிருந்து "ஜேம்ஸ் தார்பர்" சொல்லவருவது என்னவென்றால்.  ஒரு சம்பவத்தை இருவராவது பார்த்திருந்தாள் தான் அது உண்மை என தீர்மானிகப்படும். எமக்கு ஆபத்தென்றால் உண்மையாவது ஒண்ணாவது விட்டுப்போட வேண்டியதுதான்.

சரி இன்றைக்கு ஒரு மாறுதலுக்காக இந்த கதை. அடுத்த பதிவிலிருந்து எமது ESP ஐ தீர்மானிப்பது எப்படி என பார்ப்போம்.
தொடரும்...

---இனி---

எமது ESP ஆறிவது எப்படி?

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected