Total Pageviews

Monday, 12 October 2015

வளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்!

வணக்கம், 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஒரு பதிவு, என்னை இன்னும் 400 நண்பர்கள் இந்த வலைப்பக்கமூடாக தொடர்கிறீர்கள் அவர்களுக்காக.

புதிதாக வீடியோ பதிவுகளை இடுவதற்கு முடிவு செய்துள்ளேன். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாசகர் மன நிலையை கருதி வீடியோ பதிவு பயனுள்ளதாக அமையும் என்பதால் அதில் இறங்கியுள்ளேன்.

ஆரம்பத்தில், Photoshop, Illustrator போன்ற மென்பொருள்களின் நவீன பதிப்புக்களூடாக அடிப்படை விடையங்களை பகிந்துவருகிறேன். தாங்கள் விரும்பும் பட்சத்தில் என்னை Youtube ஊடாக subscribe செய்துகொள்ளுங்கள்.

Illuminati, ESP போன்ற மற்றைய ஏனைய பதிவுகளுக்கு சொந்த தளமான edu.tamilclone.com இல் இணைந்துகொள்ளுங்கள். நன்றி. :)



Friday, 29 November 2013

இரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்??

இரண்டாம் உலகம்...

திரையில் படம் பார்க்க முடியவில்லை...
நேற்று இரவு இடைவேளை வரை படம் பார்த்தேன்...
இன்று மீதி...

படம் பார்ப்பதற்கு முன்பும் பின்பும் எந்த விமர்சனத்தையும் வாசிக்கவில்லை. சமூகத்தளங்களில் நண்பர்கள் சிலர் இட்ட ஓர் இருவரி விமர்சனங்கள் இது ஒரு விஞ்ஞான கொள்கைகளைக்கொண்ட ஒரு விஞ்ஞானப்புணைவுக்கதை என்பதை காட்டியது... எனவே, படத்தின் மீதான ஆர்வமும் படத்தின் கதையை எப்படி சொல்லப்போகிறார்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வமும் ஆரம்பத்திலேயே எகிறிவிட்டது. ( மற்றவர்களின் கருத்துக்களால் பாதிக்க கூடாது என்பதற்காகத்தான் விமர்சனங்களே பார்க்கவில்லை.) 
இது விமர்சனமும் அல்ல... எனக்கு இப்போது தோனுவதை அப்படியே எழுதலாம்னு, எழுதாமல் விட்ட வலைப்பூவை தூசு தட்டுகிறேன்...

திரைப்படம் ஆரம்பித்ததுமே...

"இந்தப்பிரபஞ்சம் மிகப்பெரியது, இதில் எமது பூமியைப்போல் பல கோடி பூமிகள் இருக்க வாய்ப்புக்கள் உண்டு...
அதே போல் மனிதன் பூமியில் மட்டும் பிறப்பதில்லை, அவர்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் பிறக்கவும் சாத்தியம் உண்டு" - ஐன்ஸ்டைன் ,மிக்சொயோ குக்கு விஞ்ஞானிகளின் கூற்றில் இருந்து ஆரம்பிக்கிறது.
( "டா டீ எனக்கொரு டவுட்டு" என்பது போல... "பூமி" என்றால் என்ன? என்று ஒரு சந்தேகம் தோனிச்சு...
அது நாம் நாம் வாழும் கிரகத்திற்கு இட்ட பெயர் தானே... பேசாமல் "எமது கிரகத்தைப்போல.... பல கோடி கிரகங்கள்" என்று ஆரம்பித்திருக்கலாமே என்று ஒரு குறை.
ஹீ ஹீ... கேவலமான படங்களை எல்லாம் கைதட்டி சிரித்து பார்ப்போம். ஆனால் இப்படி படங்களில் குறை கண்டு பிடிப்போம். இது தான் நாம். என்றாலும் நான் இதை சுட்டிக்காட்டியது... தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படியான அறிவியல் பசியை ஏற்படுத்தும் திரைப்படங்கள் வரும். அதுவும் "பன்முக பிரபஞ்சம்" எனும் மிகப்பெரிய குழப்பமான கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம். இப்படியான சிறு சிறு தவறுகளை கண்டுக்கலாமேனுதான்...)

ஆர்யா நீரினுள் முழ்கிக்கொண்டு இருக்கும் போது கதை ஆரம்பிக்கிறது...
எமது பூமியில் நடக்கும் தனது கதையையும், இன்னோர் கிரகத்தில் நடக்கும் தமது கதையையும் குறிப்பிடுவதன் மூலம் திரைக்கதை நகர்கிறது.
அந்த இன்னோர் கிரகத்தில் அரசாட்சி நடைபெறுகிறது... அங்கு கடவுள் ஆக கருதப்படும் ஒரு பெண் இருக்கிறார்... ஆனால் ஆண்களால் ஏனைய பெண்கள் அடிமைகளாக /இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாதனமாக நடாத்தப்படுவதாகவும்... தீயவர் கூட்டத்தால் அழிவுகள் வருவதாகவும்... அதை தடுக்க முதல் காதல் மலர்வதாகவும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்... ( நானும் இங்கு சொல்லிவிட்டேன்... படத்தின் கதை இதுவல்ல... அது எப்படி எனபது தான்...)

நமது பூமியில்... அனுஷ்கா- ஆர்யா காதல் கதை நகர்கிறது. இங்கு குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லை.

மற்றைய கிரகத்தில், ஆர்யா-அனுஷ்காவை "மட்டக்க‌" பின்தொடர்கிறார்... அதே நேரம் தளபதியின் மகனான அவர் "தான் ஒரு வீரன்" எனபதையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்...

இரண்டு கதைகளும் தனித்தனியே தெளிவாக நகர்ந்துகொண்டிருக்கிறது...

இடைவேளைக்கு சற்று முன்னர், திடீர் திருப்பமாக அனுஷ்கா இறந்துவிடுகிறார். அனுஷ்காவின் இறப்பிற்கும்- இடைவேளைக்கும் இடையிலான நிமிடங்கள், 100% அறிவியல் சார்ந்த திரைக்கதையாக இருக்கின்றது. பல கோட்பாடுகளை தெளிவான திரைத்தொகுப்பில் தொகுத்துள்ளார் இயக்குனர்.

நாய், ஆர்யாவை குறித்த இடத்திற்கு கூட்டிச்செல்வது...
நமது தொழில் நுட்ப மாற்றத்தால் தேவையற்றுப்போய் இழந்த சில நுண்-அறிவுத்திறன்கள் இன்னமும் விலங்குகளில் இருப்பதை காட்டும் ஒரு பகுதியாக இதைக்கொள்ளலாம்.
மேலும், அடுத்தகட்டமாக...

ஆர்யாவின், உடல் பாகம் இயங்க முடியாத தந்தை... ஆர்யாவுடன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அறிவியல். (அவற்றை விளக்கத்தேவையில்லை.) பேசி முடிந்து தனது இருசக்கரவண்டியில் செல்லும் போது "கிரபிக்ஸ்" வசதியுடன் அந்த வண்டி வேறு பாதையில்-வேறு உலகத்திற்கு(?) செல்வது போல் காட்டி இருப்பது என்னை பொறுத்தவரை இன்னோர் கோட்பாடு. அதாவது, ஒரே உலகம் "பல சட்டங்கள் - multi frame"...
ஒரு சட்டத்தில் (கதைக்களம் நடக்கும் சட்டத்தில்) உடல் இயங்காது வாழும் அவர்... இன்னோர் சட்டத்தில் அந்த குறை இல்லாமல் வாழ்கிறார் என கொள்ளலாம்.

இதே காட்சியை இன்னோர் விதமாக சொல்லவேண்டும் என்றால்...
பொதுமனம்!
ஆர்யா, தனது அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தின் அளவை; அனுஷ்காவின் காதலை ஆர்யா ஏன் ஏற்க தயங்கினார், என்பதை சொல்லும்போதே காட்டிவிடுகிறார்கள். "என்னைப்பார்க்க எப்போவாச்சும் தான் யாரும் வருவாங்கம்மா" என்ற சொல்லின் மூலம், ஆர்யாவின் தந்தைக்கு ஆர்யாதான் உலகம் என்பதை காட்டிவிடுகிறார்கள்.
பொதுமனம் என்பது என்ன என்பதை இந்த தொடுப்பை சொடுகி விரிவாக பார்த்துவிடுங்கள்...
இறக்கும் போது ஆர்யாவை நினைத்த படியே இறந்த அவர்...  இறந்த பின் ஆர்யாவின் முன் தோன்றுகிறார். (ஆர்யாவின் எண்ண அலைகளும் அவரது எண்ண அலைகளும் சந்தித்திக்கொள்கின்றது.. ஆர்யாவின் எண்ணம் உருவம் கொடுக்கிறது. ஆர்யாவின் சித்தப்பா சொல்லும் "உன்னைத்தான் பார்க்கனும்னு கடைசியா சொல்லிட்டு இருந்தார்" எனும் வசனங்கள். அந்த தந்தையின் மனதில் "உடல் இயலாமையால் தான் என் மகனை பார்க்க முடியவில்லை" என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அதன் விளைவு தான் திரையில் நகரும் அக் காட்சிகள்...

இடைவேளை வரை 28.11.2013 இரவு பார்த்தேன்...
இடவேளை வரைக்குமே இவ்வளவு சொல்லிவிட்டார்களே... இனி மற்ற கிரகத்தின் கதை நகரப்போகிறது போல... ஆனால், எப்படி ஒரே ஆர்யா ஆரம்பத்தில் இரண்டையும் சொல்வதாக காட்டினார்கள்...
அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... என எண்ண அலைகளை பல திசைகளில் சிதறவிட்ட படியே தூங்கி... அடுத்த நாள் வேலைக்குப்போய்... இன்று இரவு முதல் வேலையாக இடைவேளைக்குப் பின்னர் பார்த்தேன்...

மற்றைய கிரகத்தில் அனுஷ்கா கத்தியால் குத்திக்கொள்வது போல் இடைவேளைக்கு முன்னரே காட்டினார்கள்...
இடைவேளையின் பின்னர், ஆர்யா பைத்தியம் போல் நடந்துகொள்ளும் காட்சிகள் சில நிமிடங்கள் நடந்ததும்... சாமிமலை என்ற அந்த மலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது...

அதேவேளை, பூமியில்...
"உண்மையான காதல் இருந்தால், அவளை நீ மீண்டும் பார்பாப்பா" என்று தந்தை சொன்னதை வைத்து ஆர்யாவும் அனுஷ்காவின் நினைவாக வாழ்கிறார்.

நான் கதையைசொல்கிறேன் என நினைக்கிறேன்... அதனால இதில ஒரு நீண்ட "டீட்"

மற்றைய கிரகத்தில் கடவுளாக கருதப்படும் பெண்ணின் துணையுடன் ஆர்யா அந்த கிரகத்தில் அனுமதியாகிறார்...
அனுஷ்காவிற்கும் அந்த கிரக ஆர்யாவுக்கும் இடையில் காதல் மலர்வதற்காக அனுஷ்காவிற்கு காதலை கற்பிக்கிறார்.

காட்சிகள் நகர்கின்றன... சில தவிர்க்க முடியாத தமிழ் சினிமா காட்சிகளுடன்...

எமது பூமி ஆர்யா அடிபட்டு நீரில் விழுந்துவிடுகிறார்....
(அப்படி விழுவார் என்பதை, கார் (மகிழுந்து) குனிறில் இருந்து விழும் காட்சியும்... ஆரம்ப காட்சியும் ஊகிக்க வைத்துவிட்டது..."

விழுந்தவர்... பூமியில் குன்றில் இருந்து விழுந்து இறந்தவரின் உடலாக இருக்கும்... இரண்டு கிரகத்திலும் ஒரு பாத்திரத்தின் முடிவு ஒரே இடத்தில் முடியும் என ஆவழுடன் எதிர்பார்த்தேன்...
ஆனால், அவர் பயணம் அனுஷ்காவைத்தேடி கிரகம் கிரகமாக தொடரவேண்டும் என்பதே இயக்குனரின் விருப்பமாக இருந்துவிட்டது...

இனி... என் போக்கு... என்கேள்விகள்... என் குழப்பங்கள்...
நாம் இன்னோர் இடத்தில் பிறந்து நாமாகவே வாழ்வது சாத்தியம்.
புமியின் இருப்பிடத்தை 100% ஒத்த ஒரு இருப்பிடம் இருப்பது உறுதி. அதில் இருக்கும் நான் கூட "இரண்டாம் உலகம்" பார்த்துவிட்டு வலைப்பூவில் உலறிட்டு இருப்பேன். (ஐன்ஸ்டைனின் ஒளி வழைந்து செல்லும் எனும் கருத்தின்படி இன்னோர் "வளாகம்" இன்னோர் கிரகத்தில் இருக்கும்.)
ஆனால், இன்னோர் கிரகத்தில்... இதே நான் சில நூற்றாண்டு முன்னர் வாழ்வேனா என்பது சற்றுக்கேள்விக்குள்ளாக வேண்டியது... எனினும், அப்படி நான் வாழ்ந்தால் படத்தில் காட்டப்படுவது போன்றே வேறுபட்ட கதாப்பாத்திரமாகவே வாழ்வேன். அந்தவிடையைத்தில் திரைக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

என்றாலும்... இங்கு இருக்கும் நாம் மனிதர்களாக இரண்டு கால் இரண்டு கை என வாழ்வதற்கும், நாய்கள் நான்கு கால் ஒரு வால் என வாழ்வதற்கும்; பரிமாணத்தில் DNA இல் இயற்கையாக ஏற்பட்ட தவறுகள் தான் காரணம்.
ஆனால், திரைப்படத்தில் வேற்றுக்கிரக மனிதர்களும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள். ஆனால், சிங்கம் மனித முகத்துடனும் கொடுக்கன் வாலுடனும் வித்தியாசமாக உள்ளது.
"ஒரே இயற்கை இருப்பிடத்தில் இருக்கும் போது தான் ஒரே தவறுகள்... ஒரே மாற்றங்கள் நிகழும்"
உதாரணமாக, சூரியனில் இருந்து 3 ஆவதாகவும் அருகில் நிலவை உப கிரகமாகவும் சுத்திவர அந்த அந்த நட்சத்திரங்களை வைத்திருப்பதும் தான், நாமும் எம்மை சூழந்த உயிரினங்களும் இந்த இந்த உருவத்தில் இருக்க காரணம்.
ஆனால், இன்னோர் கிரகத்தில் மனிதன் மட்டும் மனித உருவிலும் (அதனால் தான் மனிதன்) சிங்கம் என அழைக்கப்படும் உரினம், பறவைகள் வேறு உருவிலும் இருக்குமா? சாத்தியமா? என்பது குழ்பமாக உள்ளது. ஒரே (அமீபா) வில் இருந்து பிரிந்த உயிரினங்கள் சற்று வித்தியாசமான கிரக இருப்பிட அமைப்பு என்றால் முற்றாக உருமாற்றம் உடைய உருவங்களை கொண்டிருப்போமா?
(மனித உருவில் "கிரபிக்ஸ்" மாற்றம் செய்து திரைப்படத்தை எடுக்க... எமது தயாரிப்பாளர் நிதித்தொகை போதாதது ஒரு காரணமோ? இப்போவே ஏன் காதல்படமும் கோமாலிப்படமும் எடுக்காமல் விஞ்ஞானப்படம் எடுத்தே? காசை வீணடித்தே என்று.. இயக்குனரை குட்டத்தொடங்கிவிட்டார்கள்...)

மேலும்... சிங்கம், புலி, ஆடு, எலி, பல்லி... என எதை எடுத்தாலும் அவை எவ்வாறு உருவாகி இருக்கும் என ஊகிக்க முடிகிறது.
ஆனால், கொடுக்கன் வால், சிங்க உடல்(?), மனித முகம், வெளவால்( / பறக்கு டைனோசர் செட்டை) என அனைத்தும் கலந்த கலப்பு சாத்தியமா என தோன்றுகிறது...
(ஒரு வேளை ஆங்கிலப்படங்களின் பாதிப்போ... வெள்ளையா இருக்கிறவன் செய்தா சரியாத்தான்யா செய்வான்... நாமலும் செய்யலாம்...)

சரி... இவளவு உலறியாச்சு... விமர்சனம் என்று ஏதாவது சொல்லனும்னா...

நான் மேலே சொன்ன குறைகள் அல்லது என் கேள்விகள் எல்லாம் "ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்படத்திற்கு" எதிரான கேள்விகளே... மொக்கை படங்களுக்கெதிரா ஒன்றுமே கேட்க தோனுதில்லை... பார்த்தோம் சிரித்தோம் வந்தோம் தான்...
சிந்திக்க வைத்த இப்படத்தைதான் "ஏன் இன்னும் சிந்திக்க கூடாது?" எப்போவாச்சும் வரும் இவ்வாறான படைப்புக்கள் ஏன் இன்னும் நேர்த்தியாக இருக்க கூடாது...என்ற அங்கலாய்ப்பில் எழுதியவை...

தமிழில் 12B திரைப்படத்திற்கு பின்னர் ஒரு கோட்பாட்டை சொல்லும் படமாக நான் இதை கருதுகிறேன். ("தசவதாரம்" கோட்பாட்டை அடிப்படையாக வைத்து கமலின் ஆசையுயும் ரவிக்குமாரின் "மசாலா" சரக்கையும் வைத்து "ஐ நாங்களும் விஞ்ஞானப்படம் எடும்போம்ல" என்று எடுத்தபடமாகத்தான் தோன்றுகிறது. எனிதிரன் வேறுவகையான புணைவு... "வில்லா" இன்னோர்வகையானது...)

இயக்குணர் செல்வராகவன் இப்போது எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். தன் போக்கில் படம் எடுக்கிறார். ( இரண்டாம் பாதி தயாரிப்பாளர் போக்கில் போய்விட்டதாக தோன்றுகிறது...)
மசாலாப்படம் எடுக்கலை என்பதற்காக இவரைவைத்து தயாரிக்க வராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் படத்தை மொக்கை என்று சொல்லிட்டாங்க பல பேர்..."அன்பேசிவம்" என்ற ஒரு படத்தை அப்போது படு தோல்வி அடைய செய்துவிட்டு இப்போது தூக்கி பேசுவது போல்... இந்தப்படத்தையும் இன்னோர் நாள் பேசத்தான் போகிறார்கள். அப்போது.. செல்வராகவன் "காமெடிதான் தெய்வம்" என மாறாமல் போனால் சரி... ( சுந்தர்.சி இன் அன்பே சிவம் ஒரு ஆங்கில திரைக்கதை தான்... என்றாலும்... அதற்காகவா நாம் அதை தோக்கடித்தோம்...)

திரைப்படத்திற்கான இசை....
ஹரிஸ்ஜெயராஜா அனிருத்தா பின்னனி இசை என தெரியவில்லை...
3, மயக்கம் என்ன படங்களில் கேட்ட அதே இசை போல் தோன்றுகிறது... அவ்வப்போது புல்லரிக்கவும் வைக்கிறது. குறிப்பாக இடைவேளை விடும் போது வரும் சிறப்பு இசை..

நடிப்பு...
ஆர்யா, அனுஷ்கா இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள்... நடிப்பு இயல்பாக தெரிகிறது...
நடிகைகளை இடுப்பை காட்டவும், ஆட்டவும் மட்டும் பயன்படுத்திவரும் நேரத்தில்... இடுப்பை காட்டவும், கதா நாயகனுக்கு நிகரான கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அனுஷ்காவும் இரண்டையும் நன்றாக செய்துள்ளார்.
ஆர்யா, மற்றையகிரகத்தில் மேல்சட்டை இல்லாமல் வருகிறார். கதையுடன் ஒத்துப்போகிறது. அதற்கேற்ப உடலை சிறப்பாக வைத்துள்ளார். (பல நாயகர்கள் கதைக்காக அல்லாமல் தமது "டொப் லெஸ்" உடலை காட்டுவதற்காகவே சட்டையை கழற்றிவிட்டு வாயசைத்து ஆடுகிறார்கள் இப்போதெல்லாம்.)

காட்சியமைப்புக்கள்...
காட்சி தொகுப்புக்கள் சிறப்பாக இருக்கின்றன.
கிரபிக்ஷ்காட்சிகள் அருமை என சொல்ல முடியாது. சிங்கத்துடனான சண்டையில் எல்லாம்... புற்களின் அசைவுக்கும் சிங்கத்தின் அசைவுக்கும் ஒத்துப்போகவில்லை.
மற்றைய கிரகத்தின் பின் புறத்தில் தெரியும் கிரகம்... அடிக்கடி அமைப்பு மாறுகிறது ( இடம் அல்ல).
( இந்த தயாரிப்புதொகைக்கு இவ்வளவு தானா... ஓ.கே.)

மொத்தத்தில் நான் சொல்வது...

அனைத்து தமிழர்களும் பார்த்து பாராட்டவேண்டிய திரைப்படம்.
ஆங்கிலப்படத்திற்கு நிகராக படம் எடுக்க வேண்டும் என்றதும்.... வானத்தில் பறந்து சண்டை போடுவதையும், தேவை இல்லாமல் வெக்கை நாடான இந்தியாவில் கோட் அணிந்து நடித்தால் போதும் என நினைத்து எடுக்கப்படும் படங்களை எல்லாம் பார்த்து கைதட்டி ரசிக்கும் நாம்... அறிவியல் ரீதியாகவும் படம் எடுக்கலாம் என காட்டும் இவ்வாறான படங்களை பார்க்கனும்... கைதட்ட தோனாது... சிந்திக்க தோனும்... அது தான் ஒரு சினிமா மக்களில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு. இப்படம் ஏற்படுத்தும் பார்த்தவர்கள் மத்தியில்...

"மங்காத்தா" திரைப்படத்திற்கு பின்னர்... எந்த விமர்சனமும் எழுதியதில்லை... தோனியதும் இல்லை...
நான் இந்த வலைத்தளத்தில் எழுதிய மிகப்பெரிய பதிவு இது தான்.

இப்போது படம் பார்த்தவர்களில் இரு சாரார் இங்கு வருவார்கள்...

ஒன்று படம் மொக்கை என்போர்... இன்னொன்று "சுப்பர்... இது தான் அறிவியல் படம்.... ஒரு குறையும் இல்லை" என்பவர்கள்...

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் என்னை காய்ச்சி எடுப்பார்கள்... :P

நன்றி... விமர்சனம் எழுதனும்னு தோனினால் சந்திப்போம்.... :)

Sunday, 10 November 2013

4 வினோத மனிதர்கள்! : பணமா ஏன்? | அழகுக்கு பணம் | எஸ்கேப் | எப்படியும் திருடலாம்

எனது தளத்தில் நான் தேடி பதிவேற்றிய வினோத சம்பவங்களின் சுருக்கத்தொகுப்பை, எனது பழைய வலைப்பதிவு வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்... :) ( இதுவும் எனது தளத்திற்கான விளம்பர பதிவு தான்  :P ikw it :) )

-------------------------------------------------
வினோத எஸ்கேப் ஃபெயில் :

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!
ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.
Read more : http://edu.tamilclone.com/?p=3196
--------------------------------------------------------------------------
திருட மனிதனாக இருக்கவேண்டியதில்லை :
அமெரிக்காவில் "Rice Northwest Museum of Rocks and Minerals" என்ற பழமை வாய்ந்த கற்களும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களும் உள்ள அருங்காட்சியகத்தில் திடீரென தூசுப்படிவுகள் அதிகமாக அரம்பித்தன. சந்தேகமடைந்த அருங்காட்சியக அலுவலர்கள் காவலர்களிடம் முறையிட்டனர்.
காவலர்களின் தேடலின் பின்னர், அருங்காட்சியகத்தின் பின்புற கழிவறைக்கு அருகிலுள்ள மின் தூக்கியில் பின்புறமாக துவாரம் துழைக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. ஆனால், துவாரத்தை துளைத்தவர்யார் என்பதற்கான எந்த அடையாலமும் கிடைக்கவில்லை. பாதுகாப்பிற்கு பொருத்தப்பட்ட security camera களில் கூட எவரும் சிக்கவில்லை.
தேடுதலில் இருந்த போது திடீரென காவலரின் மோப்ப நாய் ஒரு சிறிய தாவர குன்றை விறாண்டி கடிக்கத்தொடங்கியது. உடனே காவலர்கள் அதை பரிசோதிக்க முட்பட அங்கே ஒரு நபர்!
ஆம், அருங்காட்சியகத்தில் திருடுவதற்காக தன்னை ஒரு சிறிய தாவரக்குன்றாக அலங்கரித்துகொண்டு திருட ஆரம்பித்துள்ளார் அவர்.
Read More : http://edu.tamilclone.com/?p=3206
---------------------------------------------------------
பணத்திற்காக நான் ஏன் ஓட வேண்டும்?
2003 ஆம் ஆண்டு ரஷ்ய கணிதவியலாளரான Grigori Perelman (கிரகெரி பார்ல்மன்) என்பவர், சுமார் 100 ஆண்டுகளாக விடுவிக்கப்படாதிருந்த பியான்கேரி (Poincaré) அனுமானங்களில் ஒன்றை விடுவித்தார்! 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தார்.
7 பேர் இந்த புதிருக்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தாலும், Cambridge பல்கழைக்களக கணிதவியலாளர்களைக்கொண்ட குழு ஒன்று சுமார் 7 வருட கால உறுதிப்படுத்தலின் பின்னர் கிரகெரியை வெற்றியாளராக 2010 இல் அறிவித்தது!
இப் புதிரை விடுவித்தவருக்கு கணிதத்துறையில் நொபல் பரிசுக்கு நிகரான பரிசும் சுமார் 1 மில்லியன் டொலர் ரொக்கப்பணமும் கொடுக்கப்படுவது முறை. அப்பரிசு கிரகெரிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை வாங்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்!
Read more : http://edu.tamilclone.com/?p=3462
---------------------------------------------------
கணவனுக்கு அழகுதானே வேண்டும்? என்னால் முடியாதா?
"The Bride of Wildenstein" என்று ஊடகங்களால் அழைக்கப்படும் Jocelyn Wildenstein என்ற பெண்ணைப்பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.
1970 களில் ஒரு சாதாரண பெண்ணுக்குரிய லட்சனத்துடன் இருந்தார் இந்த ஜொக்லின். கலை முகவரான தனது பணக்கார கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்க்கை அனைவரையும் போல் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள், தனது கணவன் 21 வயது நிரம்பிய ரஷ்யப்பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை கண்டு திகைப்புற்றார். வேறு பெண்கள் என்றால் கணவனை பிரிந்து சென்றிருப்பார்கள். ஆனால் ஜொக்லின் அந்தப்பெண்ணை விட தான் அழகானவள் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார்.
Read more : http://edu.tamilclone.com/?p=3335
புதிய வினோதங்களுக்கு... : http://edu.tamilclone.com/?cat=11

Monday, 16 September 2013

ஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி? வாங்க கசக்கலாம்...

இணையத்தளம் ஆரம்பித்ததுக்கு பிறகு, இந்த வலைப்பூவை அப்படியே கைவிட்டது வருத்தம் தான். எனினும் இங்கு தொடராக எழுதிய ஏலியன்ஸ், லெமூரியா, ESP மர்ம மூளை தொடர்பான பதிவுகள் எல்லாம் எனது தளத்திலும் தரவேற்றி விட்டாகிவிட்டது. இப்போது ESP மர்ம மூளை தொடர் அங்கே மீழ தொடரப்பட்டுவிட்டது. ஏனையவையும் புத்தம் புது தகவல்களுடன் விரைவில் தொடருவேன். அத் தொடர்களை படிக்க விரும்புவோர் தளத்துடன் இணைந்து ஆதரவளியுங்கள். அதுவும் ஒரு வலைத்தளம் போல்தான் இயங்குகிறது, என்ன கொஞ்சம் டீஸன்டா இருக்கும் :P

இத சொல்ல மட்டுமா பதிவு எழுதினேன் என்றால் அது தான் இல்லை... உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கத்தான்...
5 புதிர்களை இங்கு கேட்கிறேன், பதில் தெரிந்தவர்கள் அளியுங்கள். தெரியாதவர்கள் தேடுங்கள். (பதில்கள் தமிழ்ஜீனியஸ் தளத்தில் இருக்கும். எனினும் அதுகூட பார்வை இடுவது கடினம் :P) 
--------------------------------------------------------------------------------------------------------------

புதிர் 01 : மின்குழிழிற்கு சுவிட்ச் எங்கே... 

இரண்டு மாடிகளைக்கொண்ட ஒரு கட்டிடத்தொகுதியில் இரண்டாம் மாடியில் ஒரு மின்குமிழ் இருக்கிறது.
அவ் மின் குமிழிற்குரிய "switch ( நிலை மாற்றி)" உட்பட 3 switch கள் கட்டிடத்தின் கீழ் மாடியில் இருக்கிறது.
கீழ் மாடிக்கு செல்வதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்படும்.
எவ்வாறு மின்குமிழிற்குரிய switch ஐ சரியாக கண்டுபிடிப்பீர்கள்?
***********

புதிர் 02 : பாலத்தைக் கடப்பது எப்படி? 

ஜித், சுஜீ, பகி, ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின் மீது கடக்கவேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப்பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைய முதல் அவர்கள் கடக்கவேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.

ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!
பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தையும், சுஜீ 2 நிமிடத்தையும், பகி 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.
பாலத்தின் மீது ஒரு தடவையில் இருவர் மட்டுமே கடக்க முடியும். அல்லது பாலம் உடைந்துவிடும்.
வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவராக இருந்தால் மெதுவான நபருடனேயே கடந்து செல்லவேண்டும்.

எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?
***********
புதிர் 03 : அதிக எடையுள்ள பந்து எது?

ஒரு கூடையில் ஒரே அளவானதும் ஒரே மாதிரியானதுமான 8 பந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு பந்து மட்டும் நிறை அதிகமானது.
உங்களுக்கு (படத்தில் காட்டப்பட்டது போன்ற) ஒரு தராசு தரப்படுகிறது. இரு முறை மட்டுமே தராசை பயன்படுத்த முடியும்.
எவ்வாறு பாரமான பந்தை கண்டுபிடிப்பீர்கள்?
*************

புதிர் 04 : பால் கான்களும் 4 லீட்டரும்!

ரணேயிடம் 3 லீட்டர் மற்றும் 5 லீட்டர் அளவையுடைய குவளைகள் ( கான்கள்) உள்ளன. ஆனால், ரணே 4 லீட்டர் அளவுடைய பாலை அளந்தெடுக்கவேண்டியுள்ளது.
இவ் இரு கான்களையும் வைத்து எவ்வாறு அளந்தெடுக்க முடியும்?
**************

புதிர் 05 : அரச தீர்ப்பும் திருடனும்!

அரசனின் நகையை திருடிய ஒரு திருடன் காவலர்களால் கைது செய்யப்பட்டு அரசவையில் நிறுத்தப்பட்டான். அரசன் அவனிற்கு மரண தண்டனை அளிக்க முடிவு செய்தார். தனது வறுமையின் காரணமாகத்தான் தான் திருடினேன் என்று அவன் சொன்ன போதும் அரசன் இரங்கவில்லை. ஆனால், திருடனிற்கு ஒரு வினோத‌ சந்தர்ப்பத்தை அளித்தான்.

அதாவது, " நீ உண்மையை சொன்னால், சிங்கத்தினால் கொல்லப்படுவாய், பொய் சொன்னால் எருமை மாட்டால் இடித்துக்கொல்லப்படுவாய்..." என்று கூறினான்.

அதற்கு, அந்த திருடன் ஒரு பதில் அளித்தான். அவனிற்கு தண்டனை கொடுக்கமுடியாத அரசன் அவனை விடுவித்தான்.

கேள்வி : அப்படி என்ன பதிலை அந்த திருடன் சொல்லி இருப்பான்?
--------------------------------------------------------------------------------------------------------------
பதிலை பார்த்து அறிய நினைப்பவர்களுக்கு இதுவும் ஒரு விளம்பரப்பதிவுதான்... ஆனால், இங்க கொஞ்சம் எழுதிவிட்டு மேலும் படிக்க இங்கே வாருங்கள் என்று வழமைபோல் கடுப்பேத்தவில்லை என்று நம்புகிறேன்.
நன்றி, வணக்கம் :)

Thursday, 14 June 2012

மர்மக்குழுவின் ரகசியத்திட்டங்கள்! ( இலுமினேட்டி 03 )


போன பதிவுகளில் இலுமினேட்டியென்றால் என்ன என்பதையும், அதன் ரகசியக்குறியீடுகளையும் பார்த்திருந்தோம்!
தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :
  1. இலுமினேட்டி என்றால் என்ன? நோக்கம் என்ன?
  2. இலுமினேட்டி குழுமத்தின் இரகசியக்குறியீடுகள்!
இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!

Wednesday, 6 June 2012

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியகுறியீடுகள்...


இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

Friday, 20 April 2012

நயாகராதான் உலகில் பெரிய நீர்வீழ்ச்சியா?

உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி எது தெரியுமா? நீங்கள் நினைக்கும் நயாகரா அல்ல... அப்போ? இதை சொடுகுங்கள்... வளாகத்தின் இன்னொரு பரிமாணம்!!!

-----

உங்கள் தளங்களில் உள்ள அரிய அறிவியல் தகவல்களையும் இணைக்கலாம்... தொடர்புகொள்ளுங்கள்.


Sunday, 18 March 2012

ஐஃபோனில் பதிவான பறக்கும் தட்டு வீடியோ! ஏலியன்ஸ் நோட்டட்!


அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும்.
ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். )
 
இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கருதப்படும் பறக்கும் தட்டுக்களின் உருவிலேயே உள்ளது. எனவே இது ஒரு பறக்கும் தட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
 
இங்கு வீடியோப்பதிவில் பறக்கும் தட்டு அசையவில்லை, எனினும்... அசையாது வானில் ஒரு இடத்தில் நின்றுவிட்டு திடீரென பறக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.
 
அப்படியானால், வேற்றுக்கிரக வாசிகள் எமது வானெல்லையில் தங்கியிருந்து எம்மை வேவு பார்க்கிறார்களா? ஏன்?
இதை வளாகம் வலைத்தளத்தில் விரிவாக பார்த்துள்ளோம்.

VIDEO LINK : 

UFO Caught from Plane

Friday, 24 February 2012

ஈழப்பெண்களும் ஈனக்கண்களும் - அதிர்ச்சிகர பேட்டியுடன் வீடியோ


ஈழப்பெண்களும் ஈனக்கண்களும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைதாகி தடுப்பு முகாம்களில் இருந்து தற்போது வெளியே வந்திருக்கும் பெண்களின் நிலைதொடர்பான காணொளியை கிரவுண் வியூவ்ஸ் ஸ்தாபனத்தார் வெளியிட்டுள்ளர். அனைவரும் நிச்சயம் பார்த்துப்பகிரவேண்டிய வீடியோ இது.
யுத்தம் தொடர்பான அரசியல் பேச்சு ஒரு புறம் இருக்க, இவ்வாறு வெளியேறிய பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது எம் சமூகத்தின் சாபக்கேடே. ஈழம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட இப் பெண்கள் இராணுவ முகாம்களில் இருந்து வந்தார்கள் எனும் ஒரு காரணத்திற்காக சொந்த உறவுகளே அவர்களை ஒதுக்குவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயல்.
மேலும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் நடவடிக்கைகளையும் இவ் வீடியோப்பதிவில் வரும் பெண் கூறுகின்றார். இப்போது நினைத்துப்பாருங்கள் ஈழத்தமிழரின் இவ் நிலைக்குயார் காரணம்? எங்களுள் இருக்கும் சுய நலம் ஒரு முக்கிய காரணமாக இருப்பது விளங்கும்.
இராணுவத்தின் கண்கள் எப்போதும் இவர்கள் மீதே இருப்பது இவர்களின் அன்றாட வாழ்வை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையும் உணர முடிகிறது. :/
இப் பெண்கள் எப்போதும் திருமணம் முடிக்கப்போவதில்லை என்று கூறுவது, எமது சமுதாயத்தின் விசம் மிக்க கண்களினாலேயே என்பதை உணரமுடிகிறது. வெளி நாடுகளில் ஈழமக்களின் போராட்டத்தை பணமாக்க முனையும் சிலர் ஈழம் ஈழம் என்று கோசங்கள் எழுப்புவதுண்டு. அவர்கள் நிச்சயம் இப் பெண்களிற்கு உதவி தம் கறைகளைப்போக்கிக்கொள்ள வேண்டும்.

Wednesday, 22 February 2012

அருமையான நான்கு மென்பொருட்களை - இலவசமாகதரவிறக்க!


Accord CD Ripper Free 6.9.0 + Portable 

ஒரிஜினலாக வாங்கப்படும் ஆடியோ ( Audio ), CD க்களை கொப்பி பண்ணமுடியாது. அதற்கு உதவும் மென்பொருளே இது. ஒருஜினல் கோப்பிலுள்ள அதே தரத்துடன் உங்களுக்குத்தேவையான கோப்புக்களாக விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்கிவைத்துக்கொள்ளுங்கள் தேவைப்படலாம்.
 
மாற்றத்தக்க கோப்புக்கள் :
WAV, MP3, WMA, OGG, APE, FLAC, MP2, VQF, AIFF, AIFC, AIF, 3GP, AAC, M4A, M4B, MP4, MPC, MP+, MPP, WV, AU, SND, RAW, GSM, VOX, PCM, ADPCM, G721, G723, FAP, PAF, SVX, 8SVX, IFF, NIST, IRCAM, SF, VOC, W64, MAT, MAT4, MAT5, PVF, XI, HTK, CAF, SDS, AVR, WAVEX, SD2, WVE
 
வகை : போர்ட்டபிள்
அளவு :24 Mb
தரவிறக்க : Link 01
-------------------------------------------------------------------------------

Quick Logo Designer 5.0

உங்களுக்கென தனி சின்னத்தை (LOGO) வை உருவாக்க விரும்புகிறீர்களா?
அதற்கு உதவும் இலகு மென்பொருளே இது. உங்களுக்கு விருப்பமான படங்கள், உருவங்கள் மற்றும் எழுத்துக்களைப்பயண்படுத்தி சின்னத்தை உருவாக்கிக்கொள்ளலாம். 2200 டெம்பிலேட் லோகோக்களும் 5000 வெக்டர் பட உருவங்களும் இவ் மென்பொருளுடன் இணைந்திருக்கின்றமை சிறப்பு.
ஃபோட்டோஷொப்பினூடாக கொடுக்கக்கூடிய விசேட எஃபக்ட்டுக்களையும் நீங்கள் கொடுக்க முடியும்.
அச்சடிப்பதற்குரிய 300dp சின்னங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அளவு :71 Mb
தரவிறக்க : Link 02

-------------------------------------------------------------------------------

Wondershare மென்பொருள் நிறுவனத்தின் சமீபத்திய படைப்பு இது. வைபவங்களில் எடுக்கப்படும் படங்கள் முதற்கொண்டு வீடியோக்கள் அனைத்தையும் அழகாக வடிவமைத்து அழகிய புதிய தனித்துவமான DVD மெனுக்களுடன் தயாரித்துக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் இதுவாகும்.
புதிய இணைப்பாக நீங்கள் நேரடியாக வெப்கமெரா அல்லது meory cards இல் இருந்து வீடியோக்களை புதிய பின்னனி இசையுடன் எடிட்பண்ண முடிகிறது. 100 இக்கு மேற்பட்ட DVD மெனுக்களைக்கொண்டிருக்கின்றமை உங்களுக்கு புதிய அனுபவமாக அமையும். பயண்படுத்திப்பாருங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து இச் சேவைக்கு ஊக்கம் தாருங்கள்.
 
அளவு : 38.11
 
தரவிறக்க : Link 03

-------------------------------------------------------------------------------
இவ் மென்பொருளை கணனியில் நிறுவுவதன் மூலம் தற்போது இருக்கும் வேகத்தை விட 10 % ஆவது அதிக வேகத்தில் இயக்கிக்கொள்ள முடியும்.
கணணியில் நிறுவப்பட்டு அழிக்கப்பட்ட தரவுகளின் (registry entries) எஞ்சிய தரவுகளை முற்றாக அழித்து கணனியின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. பயண்படுத்திப்பாருங்கள்.
 
அளவு :3.8 Mb
தரவிறக்க : Link 04

-------------------------------------------------------------------------------

Friday, 17 February 2012

குறைகளை சாதனையாக்கி சாதித்தோர்! + வீடியோ


popeye man

நாம் இன்று பார்க்கப்போகும் ஹீரோ Matthias Schlitte (மதியாஸ் ஸிலித்) 25 நிரம்பிய இவர் உலக கை மல்யுத்த சம்பியனாக உள்ளார்.
சிறுவயதிலேயே ஒருவகை விசேட நோயினால் பாதிக்கப்பட்ட இவரிற்கு வலது கை இடதுகையை விட சற்று பெரிதாக இருந்துள்ளது. 
எனினும் இக் குறையை நிறையாக்க எண்ணிய மத்தியாஸ் தனது 16 வயதில் இருந்து இதற்கென தனது வலது கையை பயண்படுத்தி விசேட பயிற்சிகளை தினமும் எடுத்துவந்தார். ( 500 தடவைகள் பாரத்தை தனது கைகளால் தூக்கி. )
தற்போது 25 வயதாகும் அவரின் கைகளின் கட்டு 18 இன்செஸ் அளவிற்கு கட்டு மஸ்தாக உள்ளது. 
 
பார்ப்பதற்கு அவரின் கைகள் "பப்பாய்" காட்டூனில் வருவதுபோன்று உள்ளதால் "பப்பாய் மான் (மனிதன்)" என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
 
இவரைப்போன்று எக்குறையோ அதை + பிளஸ் பொயின் ஆக்குபவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்கிறார்கள். :)
 


Rubber Man

பிரித்தானியாவைச்சேர்ந்த கிறே டூமர் (Garry Turner) எனும் நபரையே இங்கு காண்கிறீர்கள். இவர் 15.8 சென்ரிமீட்டர் நீளத்திற்கு தனது வயிற்றுத்தோலை நீட்டியமையே சாதனையாகப் பதியப்பட்டுள்ளது. மேலும் கை, கழுத்து, கண் போன்ற உறுப்புக்களின் தோலையும் இவர் அளவிற்கு சாதாரண நபர்களால் நீட்ட முடியாது.
இவரின் இத்திறமைக்கு காரணம் ஒரு விநோத நோயே, Ehlers-Danlos Syndrome என்றழைக்கப்படும் இவ் நோயுள்ளவர்களிற்கு தசைக்கும் தோலிற்கும் இடையிலான இணைப்பு அற்றுப்போயிருக்கும்.
எனவே இவர்களால் தமது தோலை இலகுவாக இழுத்து நீட்ட முடியும்.
 
சில சமையங்களில் குறைகள் கூட சாதனையாவதுண்டு என்பதற்கு இவரின் இத்திறன் ஒரு உதாரணம்.
உங்களிடம் குறையாக நீங்கள் கருதும் ஏதாவதொன்று கூட வெளிப்படும் பட்சத்தில் சாதனையாக மாறலாம். :)

Thursday, 16 February 2012

இலங்கையில் மக்கள் புரட்சி?? - படங்கள் + அதிர்ச்சி வீடியோ இணைப்பு!



இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொடர்ந்து அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதால், மக்கள் புரட்சி வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

படங்களுக்கு இதை சொடுகுங்கள் வீடியோவிற்கு இதை சொடுகுங்கள்!

------------------------------------

பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஈரானின் யுரேனியம் சரிவாக்கல் சம்பந்தமான முதலாவது வீடியோப்பதிவை பார்வையிட!

------------------------------------

VLC Media Player 2.1.0 போர்ட்டபிள் பதிப்பை இலவசமாக தரவிறக்க!

------------------------------------

1 நிமிடத்தில் அதிக உடைகளை மாற்றி சாதனை புரிந்த பெண்ணின் வீடியோப்பதிவைக்கான!

Monday, 13 February 2012

சாதணைப்பெண்கள்! - உங்களாலும் முடியும். - (வீடியோப்பதிவு )


Aneta Florczyk

அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த Aneta Florczyk ( 30 வயது) உலகில் பலமான பெண்களில் ஒருவராக அறியப்பட்ட இவரின் ஒரு சாதனையையே இங்கு நீங்கள் காண்கிறீர்கள்.
ஒரு நிமிட நேரத்திற்குள் அதிக frying pans எனப்படும் சமையல் கருவியை கையால் வளைத்தவர் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் வீடியோத்தொகுப்பே இது. 5  frying pans களை கைகளால் வளைத்து ஏற்கனவே இருந்த சாதனையான 4  frying pans வளைப்பை முறியடித்தார். :)
 
இவ்வாறான சாதனையாலர்கள் எமது நாடுகளிலும் இருக்கக்கூடும். அவர்கள் முயற்சித்தால் தம் பெயரையும் பொறிக்கமுடியும்.


TRISH 

உலகிலேயே வேகமாக வாசிக்கும்* திறன் உள்ள பெண்ணாக TRISH எனும் இப் பெண் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
( சத்தம் வெளியில் வரும் வகையில், மனதினுள் வாசிப்பதல்ல )
இவர் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற முடியவில்லை. எனினும், எம்மவர் எவராவது இவரைவிட வேகமாக வாசிக்குமாற்றலைப்பெற்றிருப்பார்கள். அவர்கள் இச் சாதனையை தமதாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எம் நோக்கம். வாசிக்கும் உங்களுக்கு அல்லது உங்கள் நண்பருக்கு இத்திறன் இருந்தால் முயற்சிக்கவும். :)

 

Thursday, 9 February 2012

இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ இணைப்பு!

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) அமைப்பினர் கொடூரமாக நடந்து கொண்டதாக கூறி, ஒரு வீடியோ காட்சியை இலங்கை அரசு நேற்று வெளியிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் அத்துமீறு நடந்ததுடன், அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்ததாக உலக நாடுகள் குற்றம் சாட்டின.

இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் நடக்கிறது. அதில், போரில் இலங்கை அரசின் அத்துமீறல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், ராணுவத்தின் அத்துமீறலை மறைக்கும் வண்ணம் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் பற்றிய வீடியோவை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 6 February 2012

மூன்று சிறந்த‌ இலவச மென்பொருட்கள்!


Easy CD-DA Extractor v16 Final

ஒரிஜினல் ஆடியோ(Audio) சி.டி களில் இருந்து பாடல்களை அப்படியே கொப்பி பன்னிக்கொள்ள முடியாது. அதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் இலகுவாகவும் அதிகபடியான கோப்பு வகைகளிலும் மாற்ற உதவும் மென்பொருளே இது.
மாற்றக்கூடிய கோப்புக்களின் வகைகள் : 
3G2, 3GP, MP1, MP2, MP3, Windows Media Audio (WMA), Ogg Vorbis (OGG), MP4, M4A (AAC and Apple Lossless), AAC, aacPlus (HE-AAC, AAC+, HE-AAC+PS, eAAC+), FLAC, Musepack (MPC), WavPack (WV), WAV, AIFF, Monkey's Audio (APE), CUE மேலும் M3U.
 
அளவு :12 Mb
 
தரவிறக்க : இதை சொடுகவும்.

-------------------------------------------
Apowersoft Streaming Video Recorder 2.4.4
ஒன் லைனில் / ஆன் லைனில் ( online) பார்த்துக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது கிறிக்கெடில் ஏதாவதொரு நீங்கள் விரும்பும் பகுதியை பதிந்து வைத்துக்கொள்ள உங்களுக்கு ஆசை இருக்கும்.
அதற்கு உதவும் மென்பொருளே இது.
 
ஒன்லைனில் பார்க்கும் வீடியோக்களை உங்களுக்கு தேவையான பிரபல கோப்புக்களாக பதிந்து தரவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் பிரபல இணையத்தளங்களில் ஒரு சொட்டுக்கின் மூலம் பதிந்துகொள்ளவும் முடிகிறது.
 
அளவு : 23 Mb
 
தரவிறக்கிக்கொள்ள : இதை சொடுகவும்.

-------------------------------------------
Aurora 3D Text & Logo Maker v12  Portable
3D Logo ( முப்பரிமான இலட்ச்சனை) களை உருவாக்க உதவும் மிக இலகுவான மென் பொருட்களில் ஒன்று இந்த மென்பொருள். உங்களுக்குத்தேவையான முப்பரிமாண எழுத்துக்களையும் இலட்சனைகளையும் உருவாக்குவதற்கென இவ் மென்பொருளினுள் எண்ணிலடங்காத வடிவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைவைத்து உங்களுக்குத்தேவையான 3D எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
பல வகை டெம்லேட்டுக்கள் ஏற்கனவே உதாரணங்களகாத்தரப்பட்டுள்ளன. அவற்றையும் மாற்றம் செய்து பயண்படுத்தக்கூடியதாக இருப்பது இதன் மேலதிக சிறப்பு. 
 
அளவு : 41 Mb
தரவிறக்க : இதை சொடுகவும்.





Sunday, 5 February 2012

புத்திசாலி நாயும் சிற்றிடை அழகியும்(?) - வீடியோ


இந்த நாயைப்பாருங்கள், நிச்சயமாக நீங்கள் இதை ரசிப்பீர்கள் நண்பர்களிடம் காட்டுவீர்கள்.
 
பயிற்சியினால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நிரூபித்துள்ள ஒரு வீடியோ பதிவு இது.
உரிமையாலர் சொல்வதைக்கேட்டி மிகவும் நேர்த்தியாக தனது அடுத்த படிகளைச்செய்கிறது. 5 அறிவு உள்ள மிருகத்திற்கு எப்படி இவ்வளவு நேர்த்தியாக கிரகித்து செயற்படும் ஆற்றல் உள்ளது என்பது வியப்பாக உள்ளது. 
பாருங்கள் ரசியுங்கள் பகிருங்கள். :)




------------------------------------------------------------------------------------
இங்கு நீங்கள் பார்க்கப்போகும் இந்த வீடியோவில் உள்ள பெண்தான் (பெயர் - CATHIE JUNG ) உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார். 
வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.
இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம்,
தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார்.
இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 



Saturday, 4 February 2012

ஃபோட்டோஷொப் பாவனையாளர்களுக்காக இலவச Plugin !

Photoshop இல் விளம்பரங்களை வடிவமைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருளின் உதவி அதிகமாகத்தேவைப்படும்.
33 Mb அளவுடைய இவ் Plugin ஐ கணனியில் நிறுவுவதன் மூலம், எமக்குத்தேவையான Shining எஃபக்ட்டுக்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும். இவ் மென்பொருளின் அட்டைப்படத்தை பார்த்தாலே அதன் உபயோகம் தெரியும். :)
அளவு : 33.67 Mb

Friday, 3 February 2012

14 சத்திரசிகிச்சை மூலம் வித்தியாசமாக மாறிய பூனை மனிதன்! (வீடியோ-)


ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தன்னை வித்தியாசமாகக்காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்னை பூனைபோன்று ஆக்கியுள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த பூனை மனிதர் என அழைக்கப்படும் டெனிஸ் அன்வர் என்பவரையே கீழே வீடியோவில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
14 சத்திர சிகிச்சைகளை முகத்தில் செய்ததன் மூலமாக தனது முகத்தை பூணைக்கு ஒத்த முகமாக மாற்றியுள்ளார்.
சிலிக்கான் சிகிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச்செய்து பூனையின் தோற்றத்தை பெற்றுள்ளார்.
 
இப்படியான செயற்பாடுகள் கூட ஒரு வகை மன நோயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

Tuesday, 31 January 2012

மனித சேமிப்பகம்!! (வீடியோ இணைப்பு)


இன்று நீங்கள் பார்க்கப்போகும் நபர் உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகும் ஒருவர்.
ஆம், இவர் தனது வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறக்கவில்லை, அது நன்மையானதாக இருந்தாலும் சரி தீமையானதாக இருந்தாலும் சரி... இவரின் மூளையில் அனைத்தும் பதிவாகியுள்ளது. முன்னர் நடந்த சம்பவத்தைப்பற்றி கேட்டால் உடனே பதில் அளிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளார்.
யோசித்துப்பாருங்கள், இவரின் மனதில் எத்தனை எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருக்குமென. இவரால் எதையுமே மறக்க முடியாது.
 
Jill Price (ஜில் பிறைஸ்) என்ற 47 வயது பெண்மனியே இந்த திறனைக்கொண்டுள்ளவர் ஆவார்.
அமெரிக்காவைச்சேர்ந்த இவர் சிறுவயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு  நிமிடத்தையும் இவரால் கூறமுடிகிறது.
உதாரணமாக, ஒரு பழைய தொலைக்காட்சித்தொடரின் 30 செக்கன் வீடியோக்காட்சியை ஒளிபரப்பிவிட்டு, அது எப்போது ஒளிபரப்பானது என்று கேட்டால் உடனே அந்த தொலைக்காட்ச்சித்தொடர் ஒளிபரப்பான நாளை சொல்லிவிடுகிறார். (வீடியோவைப்பார்க்க. )
 
இவரின் இத்திறனை வெளியுலகிற்குகொண்டுவந்தவர், டொக்டர் Sawyer ஆவார்.
தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்று சொன்னதும் முதலில் நம்ப மறுத்த டொக்டர், " எப்போது இளவரசி Grace (கிறேஸ்) இறந்தார் ?" 

அலைகளின் நாயகன்! - வீடியோ இணைப்பு :)


Mike Parsons உலகத்தில் இருக்கும் வியக்கத்தக்க ஒரு தடகளவீரர் எனலாம்.  பாரிய அலைகளின் மீது ஏறி வழுக்கிச்செல்வதில் வல்லவரான இவர், சுமார் 65 அடி உயரத்திற்கு எழும் ஒரு பாரிய அலையின் மீது செய்யும் சாகாசத்தையே இங்கு நீங்கள் காணப்போகிறீர்கள். 

Jaws, Hawaii கடற்கரையில் நடாத்தப்பட்ட இந்த சாதனை 100 வீதம் நம்பகமானது. ஹெலிகொப்டரின் துணையுடன் இந்த வீடியோப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ( பார்வைக்கு சில காட்சிகள் கிரபிக்ஷ் போலவே காட்சி தருகின்றன, எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையாக இது உள்ளது. )
 

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected